பெயரை சரியாக சொல்லி அழைத்து கருப்பசாமி வாக்கு சொல்லும் அதிசயம் – வீடியோ

Karuppasamy

வீடியோ கீழே உள்ளது.
கிராமப்புறங்களில் சிறு தெய்வமாக ஆரம்ப காலத்தில் அறியப்பட்டவர் கருப்பசாமி. இன்று அவரின் அருள் இந்த உலகம் முழுவதும் பரவி உள்ளது என்று சொன்னால் அது மிகை ஆகாது. அந்த வகையில் மெத்த படித்த இளைஞ்சர் ஒருவருக்கு கருப்பசாமி அருள் வந்து அவர் அங்கு கூடி உள்ளவர்களின் முகவரியை சரியாக சொல்லி அழைத்து வாக்கு சொல்கிறார். இதோ அந்த வீடியோ.

கருப்பசாமி, கிராமங்களில் உள்ள காவல் தெய்வம் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அவர் கிராமத்திற்கு மட்டும் அல்ல இந்த உலகத்திற்கே காவல் தெய்வம் என்று நிரூபிக்கும் வகையில் இங்கு பல நிகழ்வுகள் நடக்கிறது. பல ஊர்களில் இருந்து இங்கு ஆண்களும் பெண்களும் வருகின்றனர். முதலில் ஒரு குறிப்பிட்ட ஊர் பெயரை சொல்லி அந்த ஊரில் இருந்து வந்தவர்கள் அனைவரையும் அழைக்கிறார் கருப்பசாமி.

அதன் பிறகு ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை சொல்லி அந்த ஊரில் அந்த பிரச்சனையோடு வந்திருப்பவரை அழைக்கிறார் கருப்பு. அதிலும் இரண்டு மூன்று பேர் இருந்தால் இன்னும் குறிப்பாக சிலவற்றை சொல்லி இறுதியில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்குரிய பிரச்னையை சரியாக கூறி அதற்கான தீர்வையும் அவரே கூறுகிறார். கூறுவதோடு மட்டும் அல்லாமல் அந்த பிரச்னையை தீர்த்து வைப்பதாகவும் அவர் சத்தியம் செய்கிறார். இதனால் அங்கு வருபவர்கள் நம்பிக்கையோடு செல்கின்றனர்.