தொடாமலே நோய்களை குணப்படுத்தும் அதிசய மனிதர் – வீடியோ

Kathirvel master

வாழ்க்கையென்பது நல்ல முறையில் வாழும் போது இன்பமாகவும், கஷ்டங்களுடன் வாழும் போது துன்பமாகவும் நமக்கு தோன்றும். இருப்பினும் இந்த வாழ்க்கையை நீண்ட நாட்கள் வாழ்ந்து முடிக்க வேண்டும் எண்பது பொதுவாக மனிதர்கள் அனைவரின் விருப்பமாக இருக்கிறது. இன்றைய நவீன விஞ்ஞானிகள் மனிதனை 1000 ஆண்டுகள் வாழவைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால் நம் சித்தர்கள் நீண்ட நாள் வாழ்வதற்காக கண்டுபிடித்த வழிமுறைகளை நாம் பின்பற்றுவதன் மூலம், நாமும் 1000 ஆண்டுகள் வாழமுடியும் என கூறுகிறார் ஒருவர். அதோடு அவரை தோலை தூரத்தில் உள்ளவர்களுக்கு கூட தான் இருக்கும் இடத்தில இருந்தே சிகிச்சை அளிக்கிறார். இதோ அவர் குறித்த வீடியோ.

சென்னை அமைந்தகரையில் வசிக்கும் தற்காப்பு மற்றும் வர்மக்கலை நிபுணர் ஒருவர், தான் பயின்ற வர்மக்கலையின் மூலம் ஒரு மனிதருக்கு நேரடியாகவோ அல்லது அவர் உலகின் வேறு ஏதேனும் பகுதியில் இருந்தாலும் தன்னால் “DISTANT HEALING” எனப்படும் “தொலைதூர சிகிச்சை முறையால்” அந்த மனிதரை குணப்படுத்த முடியும் எனக் கூறுகிறார்.

தான் தினமும் சமைத்த உணவு வகைகளை உண்பதில்லை எனவும் அதற்கு பதிலாக இயற்கையான காய்கறி மற்றும் பழங்களுக்கு தனது யோக சக்தியை செலுத்தி, அவரை உண்பதால் தனக்கு மிகுந்த உடல் மற்றும் மனோசக்தியை அளிப்பதாகவும் அதனால் தன்னுடைய ஆயுட்காலமும் நீடிப்பதாக கூறுகிறார் இந்த வர்மக்கலை நிபுணர்.

ஒவ்வொரு மனிதரும் தங்கள் உடல் செல்களின் வளர்சிதை மாற்றத்தின் வேகத்தை குறைப்பதாலும், உடலின் சக்தியை சேமிப்பதாலும் அந்த மனிதன் நமது சித்தர்கள் சிலரைப் போல் “1000” ஆண்டுகள் வாழமுடியும் என கூறி, அத்தகைய வாழ்கை முறையை பின்பற்றும் தானும் அத்தனை ஆண்டு காலம் வாழ்ந்து காட்டவேன் என்று உறுதியாக கூறுகிறார்.