இந்த ஒரு தீபத்தை உங்களுடைய வீட்டில் ஏற்றினால், கெட்ட சக்தி அனைத்தும் தெரித்து ஓடி விடும். தெய்வ சக்தியும், செல்வ கடாட்சமும் ஒன்றாக சேர்ந்து வீட்டில் குடிகொள்ளும்.

Vilakku-lakshmi

ஒரு வீடு என்பது எப்போதுமே லட்சுமி கடாட்சம் நிறைந்ததாக இருக்க வேண்டும். ஆனால் சில வீடுகளில் எதிர்மறை ஆற்றல் எதிர்மறை சக்திகள் நிறைந்து இருப்பதன் மூலமாக அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்காது. வீட்டை என்னதான் அழகு படுத்தினாலும் வீட்டிற்கு உண்டான கலையை லட்சணத்தை கொண்டு வருவது என்பது மிக மிக கடினம். உங்களுடைய வீடு வெறும் அழகாக இருப்பதில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. அழகுடன் சேர்ந்து தெய்வ சக்தியும் நிறைந்திருக்க வேண்டும். எத்தனை மின் விளக்குகளை போட்டாலும், எத்தனை தீபங்களை ஏற்றி வைத்தாலும் வீட்டில் இருள் சூழ்ந்த நிலையும், நிம்மதியற்ற சூழ்நிலை இருக்கவே கூடாது. நம் வீட்டில் நம் கண்ணுக்கே தெரியாது குடிகொண்டிருக்கும் எதிர்மறை ஆற்றலை எப்படி விரட்டி அடிப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

vilakku2

ஆன்மீக ரீதியாக தீப வழிபாட்டின் மூலம் இந்த பரிகாரத்தை நாம் செய்வதால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் ஏராளம். குறிப்பிட்டு சொல்ல போனால் உங்களுடைய வீட்டில் இருக்கும் நஞ்சினை வேரோடு அகற்ற போகின்றோம். காற்றில் கலந்திருக்கும் தீய சக்தி கூட தெரித்து ஓட போகின்றது.

இந்த பரிகாரத்திற்கு நான் பயன்படுத்தப் போகும் பொருள் இரண்டே பொருள் தான். அதில் முதலாவது மிளகுத்தூள், இரண்டாவது பெருங்காயத் தூள். மிளகு எப்படிப்பட்ட நஞ்சையும் எப்படிப்பட்ட விஷத்தையும் எப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றலையும் அழிக்கக்கூடியது. இது பைரவருக்குரிய ஒரு பொருளும் கூட.

milagu

இயற்கையாகவே பெருங்காயத்திற்க்கும் நம் உடலில் இருக்கும் கெடுதலை வாயுத்தொல்லையை வெளியேற்றக் கூடிய சக்தி உள்ளது. இதேபோல் நம்முடைய வீட்டில் காற்றின் மூலம் பரவக்கூடிய எந்த ஒரு கெடுதலையும் சுத்தமாக அகற்றக் கூடிய சக்தியும் ஆன்மீக ரீதியாக பெருங்காயத்திற்கு உண்டு என்றும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தில் பன்னீரை எடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சமாக மிளகுத்தூளை பன்னீரோடு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அரை மணி விளக்குத் திரியை அந்த பன்னீர் மிளகு தூள் கலந்த கலவையோடு நனைத்து ஊற வைத்துவிட்டு எடுத்து நிழலிலேயே உலரவைத்து, இந்த  திரியை கொண்டு தீபம் ஏற்ற வேண்டும். ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த திரியைப் போட்டு உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே இந்த தீபத்தை ஏற்றி வையுங்கள். காலை மாலை எந்த நேரமும் உங்களால் முடியுமோ அப்போது ஒரு முறை இந்த தீபத்தை ஏற்றி நாள் கூட போதும்.

perungaya-podi

உங்களுடைய வீட்டில் பிரச்சனைகள் அதிகமாக இருக்கின்றது என்றால் தொடர்ந்து 11 நாட்கள் இந்த தீபத்தை ஏற்றி பலனை நீங்களே உணர்ந்து கொள்ளலாம். 11 நாட்கள் கழித்து வாரம் 1 முறை ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த தீபத்தை ஏற்றி வைப்பது நம்முடைய வீட்டில் கெடுதலை அண்டாமல் பார்த்துக் கொள்ளும். மிளகுத்தூளில் ஊற வைத்திருக்கும் திருயின் லேசான நறுமணம் வீட்டில் இருக்கும் நஞ்சினை அழித்துவிடும்.

vilakku-deepam

அடுத்தபடியாக உங்களுடைய வீடுகளில் தூபம் போடும் பழக்கம் இருந்தால், வெள்ளிக்கிழமைகளில் செவ்வாய்க்கிழமைகளில் சாம்பிராணி தூபம் போடும் போது 4 சிட்டிகை பெருங்காயத் தூளையும் சேர்த்து தூபம் போட்டு விடுங்கள். இந்த புகையை வீடு முழுவதும் காண்பிக்க வேண்டும்.

dhupam

உங்கள் வீட்டில் காற்றில் கலந்துள்ள கெட்ட சக்தி கூட இதன் மூலம் வெளியேறி விடும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த இரண்டு பரிகாரத்தையும் நம்பிக்கையோடு செய்து பாருங்கள். வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியானது வெளியேறி வீட்டில் சுபிட்சம் நிறைந்து மகாலட்சுமி கடாட்சம் நிறைந்து, செல்வ வளத்தோடு வாழும் வாழ்க்கையை நீங்கள் பெறுவீர்கள் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.