நீங்கள் எந்த நிறத்தில் ‘கர்ச்சீஃப்’ பயன்படுத்துகிறீர்கள்? இந்த நிறத்தில் மட்டும் கர்ச்சீஃப் வைத்திருந்தால் இதெல்லாம் நடக்குமா?

handkerchief

நாம் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும், அதன் நிறத்திற்கும் கூட ஜோதிட ரீதியான தொடர்புகள் உண்டு. இதனை மிக அழகாக ஜோதிட சாஸ்திரம் கிரகங்களுக்கு உரிய நிறங்களாக குறிப்புகளில் குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் நாம் பயன்படுத்தும் கர்ச்சீஃப் கூட சில பலாபலன்களை நமக்கு கொடுக்குமாம். அப்படியிருக்க நாம் பயன்படுத்தும் கர்ச்சீஃபின் நிறம் எந்த மாதிரியான நிறத்தை கொண்டிருக்க வேண்டும்? இந்த மாதிரியான நிறத்தைக் கொண்ட கர்ச்சீஃப் பயன்படுத்தினால் நமக்கு என்ன நடக்கும்? என்பதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

hand-kerchief

பொதுவாகவே அனைவரிடமும் கர்ச்சீஃபை பரிமாறிக் கொண்டால் அந்த உறவு பிரிந்து விடுவதாக ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. அதைப் பலரும் அனுபவப் பூர்வமாக உணர்ந்து இருப்பார்கள். சிலர் தங்களுடைய பள்ளிப்பருவ காலத்திலேயே புதிதாக கர்ச்சீஃபை வாங்கி பரிசாக கொடுப்பார்கள். ஆனால் அவர்கள் இறுதியில் எங்கு இருக்கிறார்கள்? என்று கூட தெரியாமல் பிரிந்து போய் விடுவார்கள். இதனால் பெரும்பாலும் கர்ச்சீஃபை மட்டும் பரிசாக வழங்குவதில்லை.

நீங்கள் பயன்படுத்தும் கர்ச்சீஃபின் நிறம் மஞ்சளாக இருந்தால் மிகவும் நல்லது. வெள்ளையாகவும் இருக்கலாம். மஞ்சள் மற்றும் வெள்ளை நிற கர்ச்சீஃபை பயன்படுத்தினால் அன்றைய நாள் அதிர்ஷ்டமாக இருக்கும். உங்களுக்கு புதிய தொடர்புகள், நண்பர்கள் என்று முன்னேற்றத்திற்கு தேவையான நபர்களை சந்திப்பீர்கள். எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும்.

yellow-handkerchief

அது போல் நீங்கள் பயன்படுத்தும் கைக்குட்டையின் நிறம் சிவப்பாக இருந்தால், மனதிற்கு பிடித்தவர்களிடம் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு காத்துக் கொண்டிருக்கும். கர்ச்சீஃபை மட்டும் யாருக்கும் கொடுத்து உதவாதீர்கள். இதில் அறிவியல் காரணமும் இருக்கிறது. ஒருவர் பயன்படுத்திய கர்சீப்பை இன்னொருவர் பயன்படுத்துவது நோய்த் தொற்றை ஏற்படுத்தலாம். கர்ச்சீஃப் என்பது தனிப்பட்ட ஒருவரின் பொருளாகும்.

- Advertisement -

நீங்கள் பயன்படுத்தும் கைக்குட்டையின் நிறம் கருப்பாக இருந்தால், உங்களுக்கு அன்றைய நாளில் ஏதாவது ஒரு கெட்ட விஷயங்கள் நடைபெறும். எப்பொழுதும் நீங்கள் பயன்படுத்தும் கைக்குட்டையை கருப்பு நிறத்தில் மட்டும் வைத்துக் கொள்ளாதீர்கள். அதைத் தவிர வேறு எந்த நிறத்தையும், நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம். கருப்பு நிறத்தில் கர்சீப்பை பயன்படுத்துவதால் தேவையில்லாத சண்டை, சச்சரவுகள், வம்பு, வழக்குகளில் மாட்டிக் கொள்வீர்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேலும் கருப்பு கர்ச்சீஃப் உங்களுடைய நேர்மறை எண்ணங்களை தடை செய்கிறது.

black-kerchief

அது போல் கோர்ட்டு, கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி தவிப்பவர்கள் உங்களுக்கான நியாயம் கிடைக்க வெளியே செல்லும் பொழுது நீல நிற கர்ச்சீஃபை பயன்படுத்தினால் மிகவும் நல்லதாம். நீல நிற கர்ச்சீஃப் வழக்குகளில் வெற்றியைத் தேடித் தருமாம். நீங்கள் பயன்படுத்தும் கைக்குட்டை மிக சிறிய அளவில் இருக்கக் கூடாது. ஒரு அளவுக்கு பெரியதாக வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அது போல் அடிக்கடி கர்ச்சீஃபை தொலைத்து விடுபவர்கள் அலைபாயும் மனம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

red-kerchief

அவர்களுக்கு எதிலும் கவனம் என்பதே இருக்காது. பல விஷயங்களைப் பற்றிய சிந்தனை ஓடிக் கொண்டே இருக்கும். ஞாபக மறதி அதிகமாக அவர்களிடம் காணப்படும். தினமும் உங்களுடைய கர்ச்சீஃபை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் கர்ச்சீஃபில் சிறிதளவு முகப்பவுடரை போட்டு கொள்ளலாம். நல்ல வாசமாக இருக்கும். அதனுடன் ஒரே ஒரு ஏலக்காயை வைத்துக் கொள்ளுங்கள் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

இதையும் படிக்கலாமே
இந்த தீபத்தை ஏற்றி வைப்பவர்கள் வீட்டில், தீயசக்திகளும் எதிர்மறை ஆற்றலும், செய்வினையும் குடி கொள்ள வாய்ப்பே கிடையாது. அற்புதமான அந்த தீபத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.