கண் திருஷ்டியினால் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய் விடுகிறதா? தீய சக்திகள் கொடுக்கும் உடல் உபாதைகளில் இருந்து உடனடியாக தப்பித்துக்கொள்ள ஒரு எளிமையான வழி!

komiyam

கண் திருஷ்டியின் மூலம் கூட சில பேருக்கு அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படும். அழகாக அலங்காரம் செய்து கொண்டு வெளியிடங்களுக்கு சென்று வந்த உடனேயே தலைவலி, காய்ச்சல் என்று படுத்துக் கொள்வார்கள். நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் இதற்கு உப்பு சுற்றி போட்டோ, கற்பூரம் சுற்றி போட்டோ திருஷ்டியை கழிப்பார்கள். ஆனால் சில பேருக்கு எதிர்மறை ஆற்றலினால் வரக்கூடிய தலைபாரம், கை கால் வலி, உடல் அசதி போன்ற உபாதைகள் அவ்வளவு எளிதாக சரியாகாது. மருந்து மாத்திரைகள் சாப்பிட்ட பின்பும் கூட. உடல் உபாதைகள் தொல்லை கொடுத்து வந்து கொண்டே இருக்கும்.

sad

இப்படி கண் திருஷ்டியால், தீய சக்தியினால் வரக்கூடிய உடல் உபாதைகளை, தலை பாரம் தலைவலி உடல் அசதி இவைகளைப் போக்க சுலபமாக என்ன செய்யலாம். அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒரு கை வைத்தியம் உள்ளது. அதைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள். இந்த வைத்தியத்தை செய்ய நமக்குத் தேவையான பொருட்கள் இரண்டு. பசு மாட்டின் கோமியம், சுத்தமான மஞ்சள் கிழங்கு.

முதலில் அடுப்பில் தண்ணீரை வைத்து நன்றாக சூடு படுத்திக் கொள்ளுங்கள். உப்பு தண்ணீரை வைக்க வேண்டாம். குடிக்கிற நல்ல தண்ணீரை வையுங்கள். எச்சில் படாத சுத்தமான தண்ணீர் பயன்படுத்திக் கொண்டால் மேலும் நல்லது. அந்த சுடுதண்ணீரில் கொஞ்சம் கோமியம், ஒரு மஞ்சள் கிழங்கு இந்த இரண்டையும் போட்டு இதில் இருந்து வரும் ஆவியை பிடிக்க வேண்டும்.

pasu-komiyam

ஜலதோஷம் பிடித்தால் ஆவி பிடிப்போம் அல்லவா? அதே முறைதான். அந்த சுடுதண்ணீரில் கோமியத்தையும் மஞ்சளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான். இந்த இரண்டு பொருளையும் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்க வைக்க வேண்டாம். சூடு செய்த தண்ணீரில் இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் போதும்.

- Advertisement -

உடல் அளவில் பிரச்சனைகள் ஏற்படும் போது தான் இதை செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. வாரத்தில் ஒரு நாள் உங்களுக்கு எப்போது நேரம் இருக்கின்றதோ, இப்படி இந்த ஆவியைப் பிடித்து வரும் பட்சத்தில் நம்முடைய உடலை பிடித்திருக்கும் கண்ணுக்கு தெரியாத கண் திருஷ்டி தீயசக்திகள் அனைத்தும் நம் உடலை விட்டு வெளியேறி விடும்.

manjal-kizhangu

பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து ஒரு 7 நாட்கள் இதை செய்யும் பட்சத்தில், உங்களுடைய உடலில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படுவதை உணர்வீர்கள். ஒருவேளை உங்களுக்கு சளி தொந்தரவு மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால் இதே தண்ணீரில் ஒரு கரு வெற்றிலையை கிழித்துப் போட்டு ஆவி பிடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தரும்.

steam

முயற்சி செய்து பாருங்கள். மகத்துவம் வாய்ந்த, மருத்துவ குணம் வாய்ந்த இந்த தண்ணீரை ஆவி பிடிப்பதன் மூலம் நமக்கு பல நன்மைகள் உண்டாகும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம் ‌