உங்கள் வீட்டில் ஆயுசுக்கும் பஞ்சமே வராது. வறுமையை நீக்கி, வற்றாத செல்வ வளத்தை கொடுக்க சமையலறையில் கட்டாயம் இருக்க வேண்டிய 2 பொருள்.

நம்முடைய வீட்டில் செல்வவளம் என்பது பொங்கப் பொங்க இருக்க வேண்டும். செல்வம் என்பது வெறும் பணத்தை மட்டும் குறிப்பது அல்ல. 16 வகையான செல்வங்கள் உள்ளதை நாம் எல்லோரும் அறிந்திருப்போம். அதாவது பணத்தை மட்டும் பீரோவில் அடுக்கி வைத்துக் கொண்டால் போதாது. நிறைவான, நோய்நொடி இல்லாத சந்தோஷமான வாழ்க்கையை நாம் பெற வேண்டும் என்றால் அந்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் மன மகிழ்ச்சியோடு, அந்த இல்லறத்தில் வாழ்க்கையை நடத்தி வர வேண்டும். சந்தோஷம் இல்லை, மன நிம்மதி இல்லை, ஆரோக்கியம் இல்லை, ஆனால் பணம் மட்டும் கையில் உள்ளது எனும் பட்சத்தில் அந்தப் பணத்தை வைத்து நம்மால் எதுவுமே செய்ய முடியாது. அளவான பணத்தோடு சந்தோஷமான வாழ்க்கையை பெற்றவர்கள் தான் செல்வ செழிப்பை பெற்றவர்கள். 16 வகையான செல்வங்களையும் எவர் ஒருவர் வாழ்க்கையில் பெற்று இருக்கின்றாரோ அவர் வாழ்க்கையை ஜெயித்ததாக அர்த்தம்.

சரிங்க, அது என்ன பொங்க பொங்க வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டும். பொங்கல் திருநாள் அன்று பச்சரிசியில் பொங்கல் வைத்து அந்த பொங்கல் பானை எப்படி பொங்கி வருகின்றதோ அதே போல் நம்முடைய வாழ்க்கையும் சந்தோஷத்தில் பொங்கி வழிய வேண்டும் என்றால் என்ன பரிகாரத்தை செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்தப் பரிகாரம் கேட்பதற்கு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும், உங்களுடைய வாழ்க்கையில் பணத்தோடு சேர்ந்த பல சந்தோஷங்களை கொடுக்கும். முயற்சி செய்து பாருங்கள். ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஸ்வஸ்திக் வரையவேண்டும். கொஞ்சமாக குங்குமத்தை எடுத்து தண்ணீரில் குழைத்து அந்த குங்குமத்தை விரலால் தொட்டு மஞ்சள் நிற துணியில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து, அது கொஞ்சம் உலர்ந்ததும், அந்த மஞ்சள் நிற துணியில், ஒரு கைப்பிடி பச்சரிசியை போட்டு, ஒரு துண்டு வெல்லத்தை சேர்த்து சிறிய முடிச்சாக கட்டி உங்கள் வீட்டு சமையல் அறையில் ஏதாவது ஒரு இடத்தில் தொங்க விட்டு விட வேண்டும்.

kitchen1

இது போதும். வாழ்க்கையில் நீங்கள் மன மகிழ்ச்சியோடு வாழ! உங்களுடைய வீட்டில் சண்டை சச்சரவுகள் வராமல், வீட்டில் உள்ள உறுப்பினர்கள் சந்தோஷமாக இருக்கலாம். நீங்கள் சமையலறையில் சமைக்கும் சாப்பாட்டை அனைவரும் நிறைவாக சாப்பிட்டு, நோய் நொடி இல்லாமல் வாழலாம். மன நிம்மதி இருக்கும் வீட்டில் பஞ்சமிருக்காது. வறுமை இருக்காது. தரித்திரம் பிடிக்காது. இதெல்லாம் ஒரு பரிகாரமா என்று நினைத்து செய்யாதீர்கள்.

இந்த பரிகாரத்தை செய்தால் நம் பரம்பரையே நன்றாக இருக்கும் என்று நினைத்து செய்து பாருங்கள். 6 மாதத்திற்கு ஒரு முறை இந்த முடிச்சில் இருக்கும் பழைய பொருட்களை காக்கை குருவிகளுக்கு இறையாக போட்டுவிட்டு, அதே துணியை துவைத்து மீண்டும் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து இதேபோல் பச்சரிசி வெல்லத்தை வைத்து மீண்டும் கட்டி வைத்துக் கொள்ளலாம். நிச்சயமாக வளமான வாழ்க்கையை பெற்று சுபிட்சம் அடைவீர்கள். முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.