இந்த ஆண்டு வெயில் சுட்டெரிக்குமா? கணித்து கூறிய ஜோதிடர்கள்.

sun
- Advertisement -

பிரபஞ்சத்தில் பல கோடி கோள்கள் இருக்கின்றன. விஞ்ஞானிகளின் ஆய்வு படி தெரிந்த வரை பூமியில் மட்டுமே பல கோடி வகையான உயிர்கள் வாழ்கின்றன. இந்த பூமியில் விண்ணில் இருக்கின்ற கோள்களின் தாக்கம் இங்கிருக்கும் அனைத்தின் மீதும் செலுத்தப்படுகின்றன என்பதை நவீன விஞ்ஞானம் அறியும் முன்பே ஜோதிட கலை மற்றும் விஞ்ஞானம் மூலம் கண்டறிந்தவர்கள் நம் முன்னோர்கள். அந்த ஜோதிட கலை மூலம் ஏற்படவிருக்கின்ற வானியல் மாற்றங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Nakshatra

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் வர தொடங்கும் போதே இந்த வருடம் கோடை காலம் எப்படி இருக்க போகிறதோ என்கிற ஒரு திகில் அனைத்து மக்களின் மனதிலும் ஏற்படுவது இயற்கை. உலகில் நடக்கவிருக்கிற நிகழ்வுகளை நவகோள்களின் நிலையை கொண்டு ஆராயும் ஜோதிடர்கள், இந்த ஆண்டு கோடை காலம் குறித்து என்ன கூறியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையை மூழ்க செய்த பெருமழைக்கு பிறகு தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டு காலமாக மழை பொழிவு எதிர்பார்த்த அளவு பொழியவில்லை. ஆனால் கடந்த மூன்று ஆண்டு காலமாக கோடைகாலங்களில் வெப்பம் அதிகரித்த படி இருக்கிறது. இவற்றுக்கு நவகிரகங்கள் பாதகமான நிலையில் பெயர்ச்சியடைவதால் ஏற்படுவதாக ஜோதிடர்களின் கணிப்பாக உள்ளது.

Suriya puyal

இந்தாண்டும் தமிழகத்தில் கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருக்கும் எனவும், கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில் வரலாறு காணாத மழை எப்படி பொழிந்ததோ அதே போல கோடைகாலத்தில் தமிழகத்தில் வெப்பத்தின் அளவு கடுமையாக இருக்கும் என்றும், ஆகஸ்ட் மாதம் வரை அதிகளவு வெப்ப தாக்கம் இருக்குமென்றும் அதன் பிறகே தமிழகத்தில் கோடை கால வெப்ப தாக்கம் குறையுமென்றும் கூறுகின்றனர் ஜோதிடர்கள்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் – 2019

இது போன்று மேலும் பல ஜோதிடம் தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kodai kaalam jothidam in Tamil. It is also called as Grahacharam palan in Tamil or Jothida palan 2019 in Tamil or Jothida sastram palan in Tamil or Kodai kaalam in Tamil.

- Advertisement -