பெண்கள், தங்களுடைய வீட்டில் பூஜைக்காக வைத்த கொட்டைப் பாக்கை இப்படி மட்டும் செய்யவே கூடாது. வீட்டில் கஷ்டம் வர இதுவும் ஒரு காரணம் தான்.

mahalakshmi1
- Advertisement -

நம்முடைய வீட்டு பூஜை புனஸ்காரங்களில், சுப காரியங்களில், வீட்டு விசேஷங்களில், மங்களகரமான வெற்றிலைக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதே முக்கியத்துவம் தான் கொட்டைபாக்கிற்க்கும் கொடுக்கப்படுகிறது. பூஜைக்கு வெற்றிலை மட்டும் தனியாக யாரும் இறைவனுக்காக வைத்து படைக்க மாட்டார்கள். வெற்றிலையோடு பாக்கும் சேர்ந்ததுதான் தாம்பூலம். வெற்றிலையுடன் பாகையும் சேர்த்து தான் இறைவனுக்கு படைக்கின்றோம். பாக்கும் மகாலட்சுமியின் அம்சம் தான்.

thambulam

அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் எந்த ஒரு விஷயத்தையும் சாதாரணமாக நமக்கு வழிபாட்டு முறையாக சொல்லிவிடவில்லை. வழிபாட்டு முறையோடு சேர்த்த ஆரோக்கியத்தையும் தான் நமக்கு கொடுத்து உள்ளார்கள். அந்தக் காலங்களில் வீட்டில் பூஜையை முடித்துவிட்டு, பூஜைக்காக வைத்த தாம்பூலத்தை, வீட்டில் உள்ள பெரியவர்கள் சாப்பிடுவார்கள். தாம்பூலம் தரிப்பது என்ற பழக்கம் அந்த காலத்திலேயே இருந்து வந்தது. பூஜை இல்லை என்றாலும், சாதாரண சமயத்தில் கூட தினம்தோறும் உணவு சாப்பிட்ட பிறகு வெற்றிலை பாக்கை சாப்பிடும் பழக்கத்தை வைத்து வந்துள்ளார்கள்.

- Advertisement -

துவர்ப்புத் தன்மை நம்முடைய உடலுக்கு அவசியம் தேவை. சாப்பிடும் உணவுப் பொருட்களில் நாம் துவர்ப்பு சுவையை சேர்த்துக்கொள்வதில்லை. ஆனால் அந்தக் காலத்தில் வெற்றிலையோடு சேர்த்து இந்த கொட்டைப்பாக்கை வைத்து நம்முடைய முன்னோர்கள் சாப்பிட்டு வந்தார்கள். ஆரோக்கியத்தையும், வழிபாட்டு முறைகளோடு சேர்த்து மறைத்து வைத்து உள்ளார்கள் என்று சொன்னாலும் அது மிகையாகாது.

vetrilai pakku

முடிந்தவரை உங்கள் வீட்டு பூஜையில் வைக்கும் வெற்றிலை பாக்கை வீட்டிலிருக்கும் தம்பதியர், தாம்பூலம் தரிப்பது ஆன்மிக ரீதியாகவும் நல்லது. ஆரோக்கிய ரீதியாகவும் நல்லது. நெல்லிக்காயிலும் துவர்ப்பு சுவை அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இப்போது பதிவுக்கு வருவோம். சிலபேர் வெற்றிலை பாக்கோடு கொட்டைப் பாக்கை வைத்து வழிபாடு செய்வதே கிடையாது. இப்போதெல்லாம் பாக்கெட் பாக்குகள் வந்துவிட்டது. முடிந்த வரை பாக்கெட் பாக்கை வைத்து பூஜை செய்யும் பழக்கத்தை நிறுத்தி கொள்ளுங்கள்.

- Advertisement -

நிறைய வீடுகளில் பெண்கள் பூஜையை முடித்துவிட்டு, வெற்றிலை பாக்கை அப்படியே வைத்து விடுகிறார்கள். வெற்றிலையை வாட விட்டு குப்பையில் தூக்கி போடுகிறார்கள். ஒருபோதும் வெற்றிலையை வீட்டிலேயே வாடவைத்து தூக்கிப் போடவேண்டாம். வீதியில் வரும் ஆடு மாடுகளுக்கு சாப்பிட கொடுத்துவிடலாம். அப்படியில்லை என்றால் வயதான முதியவர்களுக்கு வெற்றிலை பாக்கை கொடுத்துவிடலாம்.

kottai-pakku

இதில் நிறைய பேர் பாக்கை பூஜை முடித்து, விட்டு பூஜை அறையிலேயே எங்கேயாவது ஒரு ஓரத்தில் போட்டு வைத்து விடுவார்கள். சில நாட்களில் அந்தப் பாக்கு, எந்த ஒரு பயன்பாடும் இல்லாமல் குப்பைத் தொட்டிக்கு போய்விடும். இப்படி செய்வது மிகப்பெரிய தவறு. பாக்கை ஒரு சிறிய டப்பாவில் போட்டு சேகரித்து வைத்து, யாராவது வெற்றிலை பாக்கு போடுபவர்களுக்கு தானமாக கொடுக்கலாம்.

- Advertisement -

poojai-maavilai

அப்படி இல்லை என்றால் இந்த பாக்கை சேகரித்து மஞ்சள் குங்கும பொட்டை வைத்து, 11 பாக்குகள், 21 பாக்குகள் என்ற கணக்கில் மஞ்சள் நிற துணியில் முடிச்சுப்போட்டு மகாலட்சுமியின் திருவுருவப் படத்தில் பாதத்தில் வைக்கலாம். அப்படி இல்லை என்றால் அந்த சுவாமி படத்திற்கு பின் பக்கம் வைத்து வழிபாடு செய்யலாம்.

kottai-pakku1

மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தை பெற்ற, உங்கள் வீட்டு பூஜை அறையில் முடிந்து வைத்திருக்கும் இந்த பாக்கை சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலையோடு சேர்த்து தானம் கொடுக்கலாம். தவறே கிடையாது. உங்களால் பாக்கை முழுமையாக சாப்பிட முடியவில்லை என்றாலும், உணவு அருந்திய பின்பு, லேசாக தட்டி, தூள் செய்து வாயில் போட்டுக்கொண்டு, உமிழ்நீரோடு அந்த சாறை மட்டும் விழுங்கி, மீதமுள்ள பாக்கை வெளியில் துப்பி விடலாம். அதிலும் ஒன்றும் தவறு கிடையாது. இது ஆரோக்கியத்திற்கும் நல்லது. லட்சுமி கடாட்சம் நிறைந்த பார்க்கும் குப்பைத் தொட்டிக்கு போகாமல் இருக்கும்.

thambulam-1

இந்த பாக்கு என்று மட்டும் கிடையாதுங்க! எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதை நாம் அந்த மகாலட்சுமியின் அம்சமாகத் தான் பார்க்கவேண்டும். வீணாக, யாருக்கும் பயன்படாமல், உபயோகமுள்ள ஒரு பொருளை எக்காரணத்தைக் கொண்டும் நம் கைகளால் குப்பைத்தொட்டியில் வீச கூடாது. கஷ்டம் வருவதற்கு வீட்டில் பெண்கள் செய்யும் இந்த ஒரு தவறும் காரணம். எந்த ஒரு பயன்பாடும் இல்லாமல் போவதை விட, அந்தப் பொருளை பயன்படுத்துபவர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் குழந்தைக்கு வெள்ளி பாத்திரத்தில் உணவு கொடுப்பதால் இதெல்லாம் நடக்குமா? இத போய் தெரிஞ்சுக்காம விட்டுட்டோமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -