கோவிலில் எந்த திரியில் தீபம் ஏற்றினால் என்ன பலன் தெரியுமா ?

Amman deepam

இறைவனை வழிபட்டு அவரின் முழு அருளை பெறுவதற்காக கட்டப்பட்டது தான் கோவில்கள். இக்கோயில்களில் வழிபட பல வேண்டுதல் முறைகள் உள்ளன. அதில் ஒன்று தான் தீப வழிபாட்டு முறை. இந்த தீப வழிபாட்டில் எந்த வகையான திரியில் தீபம் ஏற்றினால் என்ன பலன் என்று பார்ப்போம்.

Deepam

வாழைமர நார் திரி

வாழை மர பட்டையில் இருக்கும் நாரை நிழலில் உலர்த்தி, காய வைத்து நாம் ஏற்றும் தீபத்தில் திரியாக போட்டு விளக்கேற்றினால் நாம் நம்மை அறியாமல் செய்த பாவங்கள் நீக்கும். மேலும் நமது பித்ருகளாகிய மறைந்த நம் முன்னோர்களின் சாபங்களும் நீக்கும்.

பருத்தி திரி

பருத்தியால் செய்யப்பட்ட திரியை போட்டு விளக்கேற்றி வந்தால் நம்மை பீடித்த தரித்திரம் நீங்கி நமக்கு நல் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

- Advertisement -

பன்னீர் திரி

ஒரு தூய்மையான வெள்ளை துணியை பன்னீரில் ஊறவைத்து, பின்பு அதை உலர்த்தி அந்த துணியை சிறிய திரிகளாக மாற்றி வெள்ளிக்கிழமைகளில் தீபமேற்றி வந்தால் லட்சுமி தேவியின் அருட்பார்வை நம்மீது விழும். மேலும் நமக்கு மன அமைதியை ஏற்படுத்தும்.

deepam

மஞ்சள் நிற துணி திரி

திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள் ஒரு புது மஞ்சள் நிற துணியை எடுத்து, அதிலிருந்து சிறிது வெட்டி திரியாக போட்டு தீபமேற்ற இல்லற வாழ்வின் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

தாமரை நார் திரி

தாமரை மலர்களின் தண்டை நிழலில் உலர்த்தி, காய வைத்து விளக்கில் திரியாக போட்டு ஏற்றி வர வாழ்வின் செல்வ நிலை உயரும்.

neideepam

மஞ்சள் நிற பருத்தி துணி

இந்த மஞ்சள் நிற பருத்தி துணியில் செய்த திரியை கொண்டு தீபமேற்றுவதால் அன்னை பராசக்தியின் அருள் ஒருவருக்கு முழுமையாக கிட்டும்.

சிகப்பு நிற பருத்தி துணி

சிகப்பு நிற பருத்தி துணியால் செய்த திரியை கொண்டு விளக்கேற்றுவதால், திருமண தடை மற்றும் புத்திர பேறில்லாமை நீங்கும்.

deepam

இதையும் படிக்கலாமே:
விளக்கை எந்த திசையில் ஏற்றினால் என்ன பலன் தெரியுமா?

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் ஜோதிட குறிப்புகளை பெற எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we described the Benefits of thamarai thiri in Tamil. Appart from that we discussed other thiri benefits too.