குலதெய்வ கோவில்களில் நாம் எதை எல்லாம் செய்தால் சிறப்பான பல பலன்களை பெறலாம்.

kuladeivam-karpooram

நமது நாட்டில் ஒவ்வொரு குலத்தினருக்கென்று ஒரு பிரத்தியேக குலதெய்வம் இருக்கிறது. அந்த குலதெய்வத்தை எப்படி எல்லாம் வழிபடலாம், குலதெய்வ கோவிலில் என்னென்ன செய்யலாம். இதன் மூலம் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன. இப்படியான குலதெய்வ கோவில் சார்ந்த பல தகவல்களை இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

பொதுவாக குலதெய்வ வழிபாடு செய்ய நினைப்பவர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் சேர்ந்து ஒரு வருடத்திற்கு ஒரு முறையாவது தங்களின் குல தெய்வத்திற்கு பொங்கல் வைத்து பூஜைகள் செய்து படையல் வைத்து வழிபடுவது மிகவும் சிறந்த பலன்களை குலத்தினர் அனைவருக்கும் உண்டாகச் செய்யும்.

மற்ற கோவில்களை போல் அல்லாமல் குலதெய்வ கோவிலுக்கும் நமக்கும் இயல்பாகவே ஒரு தொடர்பு இருக்கும். அதே சமயம் உரிமையும் இருக்கும். ஆகையால் நமது கையாலேயே குலதெய்வத்திற்கு பூஜை செய்து நம்மால் வழி பட முடியும். இதை மற்ற கோவில்களில் நம்மால் செய்வது கடினம். நமது கையால் குலதெய்வத்திற்கு அபிஷேகம் செய்வதன் மூலம் இயற்கையாகவே நமக்குள் ஒரு அற்புதமான ஒரு இன்பம் ஏற்படும். இத்தகைய பூஜை செய்த பலர் இதை உணர்ந்திருப்பீர்கள்.

kuladheivam 1

காதுகுத்து, திருமணம் மற்றும் இதர விசேஷங்களுக்காண முதல் பத்திரிக்கையை குலதெய்வத்தின் மடியில் வைத்து வேண்டுவது நமது பாரம்பரியமாக உள்ளது. இதன் மூலம் நமது முன்னோர்கள் அனைவரும் குலதெய்வதோடு சேர்ந்து அந்த விசேஷங்களுக்கு வந்து நம்மை ஆசிர்வதிப்பார்கள் என்பது நம்பிக்கை.

- Advertisement -

குல தெய்வத்திற்கு தங்கள் குலத்தினர் அனைவரும் சேர்ந்து ஆபரணங்கள் சாற்றுவது, மலர் மாலைகள் சாற்றி வழிபாடு மற்றும் பூஜைகள் செய்வது போன்றவை அனைவருக்கும் வாழ்வில் சிறந்த நன்மைகளை ஏற்படுத்தும் வகையிலான அருளைப் பெற்றுத் தரும். சிலர் தங்கள் குலதெய்வ கோயிலில் நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதாக வேண்டிக் கொண்டு இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய உடனே குலதெய்வ கோவிலுக்கு சென்று மேற்படி நேர்த்திக் கடனை நிறைவேற்றுவது நல்லது. அப்படி தவறினால் தொடர்ந்து பல இடையூறுகள் வாழ்வில் ஏற்படும். அந்த இடையூறுகள் மூலம் நாமே நாம் செய்ய தவறியதை உணர முடியும்.

kuladheivam

கோயில்களில் தெய்வங்களுக்கு வஸ்திரம் சாத்தி வழிபடுவது போலவே தங்கள் குல தெய்வங்களுக்கும் புதிய வஸ்திரம் சாற்றி வழிபடுவதால் அனைவருக்கும் குலதெய்வத்தின் அருட்கடாட்சத்தை உண்டாகும். குலதெய்வம் பெண்ணாக இருக்கும் பட்சத்தில் புது புடவையையும் ஆணாக இருக்கும் பட்சத்தில் வெள்ளை நிற புது வஸ்திரம் அணிவித்தும் பூஜைகள் செய்து வழிபட வேண்டும்.

குலதெய்வக் கோவில்களில் பூசாரிகளாக இருப்பவர்களுக்கு தகுந்த வகையிலான மரியாதை தரவேண்டும். அவர்களுக்கு புதிய வஸ்திரம் மற்றும் தட்சிணை தந்து அவர்களின் ஆசிகளைப் பெறுவதன் மூலம் நல்ல பலனை அடையலாம். எதுவுமே செய்ய வசதி இல்லாதவர்கள், ஓம் வடிவில் கற்பூரங்களை அடுக்கி அதை குலதெய்வத்திற்கு ஏற்றுவது நல்லது.

Palani Murugan

தற்காலங்களில் பலருக்கும் தங்களின் குலதெய்வம் யார் என்றே தெரியாத நிலை இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் சில கோயில்களில் மேற்கொள்ளப்படும் பிரசன்னம் பார்க்கும் சடங்கின்  மூலம் தங்களுக்கு பிரசன்னம் பார்த்து தங்களின் குலதெய்வம் எது என்பதை தெரிந்து கொள்ளலாம் அல்லது தங்களின் குலதெய்வம் யார் என தெரியாதவர்கள் பழனிமலை முருகப் பெருமான் அல்லது திருப்பதி திருமலை வெங்கடாசலபதியை தங்களின் குல தெய்வமாக பாவித்து வழிபாடுகளை மேற்கொள்வதால் சிறந்த பலன்கள் ஏற்படும்.