சூப்பரான ‘குலுக்கி சர்பத்’ நம் வீட்டிலேயே செய்வது இவ்வளவு ஈஸியா? வெயிலுக்கு உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சி கொடுக்கும் சர்பத்.

kulikki-surbath
- Advertisement -

வெயில் காலம் வந்து விட்டது என்றாலே கடைகளுக்கு சென்று 5 ரூபாய் மதிப்புள்ள சர்ப்பத்தை 50 ரூபாய் கொடுத்து குடிப்போம். அந்த வரிசையில் எல்லா கடைகளிலும் கிடைக்கும் குலுக்கி சர்பத்தை மிக மிக சுலபமான முறையில் நம் வீட்டிலேயே எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம் வீட்டில் இந்த சர்ப்பத்தை போட்டால் 10 ரூபாய் கூட செலவு ஆகாது. கடைக்கு சென்று குளித்தால் கட்டாயம் அதிக விலை கொடுக்க வேண்டியதாக இருக்கும். சரி, குலுக்கி சர்ப்பத்தை உங்களுடைய வீட்டில், உங்கள் கையாலேயே போட்டு குடித்து பாருங்கள்.

sabja-seeds

சர்பத் செய்ய தேவையான பொருட்களை முதலில் தெரிந்து கொள்வோம். சப்ஜா விதைகள் – 1 ஸ்பூன், எலுமிச்சை பழம் – 2, பச்சை மிளகாய் – 2, புதினா இலைகள் – 10 லிருந்து 15, உப்பு – 2 சிட்டிகை, சர்க்கரை – 2 ஸ்பூன், ஐஸ் கட்டிகள் தேவையான அளவு.

- Advertisement -

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் சப்ஜா விதைகளை போட்டு, 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி 10 லிருந்து 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். எலுமிச்சம் பழங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். 1 எலுமிச்சம் பழத்தை 8  துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

lemon

இப்போது இதை எல்லாம் போட்டு கலக்குவதற்கு, அதாவது மூடி போட்டு குலுக்குவதற்கு ஒரு ஜக்கை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தயாராக இருக்கும் ஜக்கில் 2 கிளாஸ் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் ஊற வைத்திருக்கும் சப்ஜா விதை, வெட்டி வைத்திருக்கும் பச்சை மிளகாய், எலுமிச்சை பழம், புதினா, எடுத்து வைத்திருக்கும் உப்பு, சர்க்கரை எல்லாப் பொருட்களையும் ஒன்றாக போட வேண்டும். 1/2 எலுமிச்சம் பழ சாறை இதில் பிழிந்து விடுங்கள்.

- Advertisement -

இறுதியாக தேவையான அளவு ஐஸ் கியூப் போட்டுக்கொள்ளுங்கள். ஜாக்கின் மேலே மூடி போட்டு விட்டு, நன்றாக குலுக்க வேண்டும். அதாவது சர்க்கரை கரையும் வரை குலுக்க வேண்டும். அதன் பின்பு இதை வடிகட்ட கூடாது. அப்படியே கிளாஸில் ஊற்றி குடித்து பாருங்கள். வெயிலுக்கு உப்பு காரம் சர்க்கரை எல்லாம் சேர்ந்த ஜில்லுனு குலுக்கி சர்பத் ரெடி!

kulikki-surbath1

வெயிலுக்கு பச்சை மிளகாய் சேர்த்த சர்பத்தா என்று யாரும் பயப்பட வேண்டாம். பச்சை மிளகாயின் ஃப்ளேவர் மட்டும்தான் இந்த ஜூஸில் இருக்கும். அதோடு மட்டுமல்லாமல் இந்த ஜூஸில் நாம் சேர்த்திருக்கும் சப்ஜா விதைகள் நம்முடைய உடலுக்கு பல மடங்கு குளிர்ச்சியை கொடுக்கும். எலுமிச்சை பழத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். உடலைக் குளுமை படுத்துவதில் இதற்குத்தான் முதலிடம். தாராளமாக வெய்யிலில் ஒரு டம்ளர் சூப்பரான இந்த ஜூஸை உங்களுடைய வீட்டிலேயே போட்டு குடித்து பாருங்கள். சூப்பர் எனர்ஜி உடனடியாக கிடைக்கும்.

- Advertisement -