இறந்தவர்களின் ஆன்மாகவா மாறி பல ரகசியங்களை சொல்லும் பாட்டி – வீடியோ

Saraswathi patti

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் இன்றளவும் கனி கேட்ப்பதென்பது பிரபலமாக நடக்கும் ஒரு வினோத் முறை. இதன் மூலம் ஒரு குடும்பத்தில் யாரெல்லாம் இருந்தார்களோ அவர்களை அழைத்து பேசப்படுவதுண்டு. அது போன்ற ஒரு நிகழ்வை பற்றி தான் நாம் இப்போது பார்க்கவிருக்கிறோம். இதோ அதன் நேரடி காட்சி பதிவு.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பருக்கள் என்னும் கிராமத்தில் வசிப்பவர் சரஸ்வதி பாட்டி. இவர் தான் இறந்தவர்களின் ஆன்மாகவாக மாறி பல விடயங்களை அந்த குடும்பத்திற்கு எடுத்துரைக்கிறார். முதலில் இவருக்கு கர்ப்பூரம் காண்பிக்கப்படுகிறது. அடுத்த நொடியே அந்த குடும்பத்தார் யாரோடு பேச நினைக்கிறாரோ அவர்களது ஆன்மா பாட்டியின் உடம்பில் நுழைந்து பேச துவங்குகிறது. முதலில் அந்த ஆன்மா உயிரோடு இருந்த சமயங்களில் என்னவெல்லாம் நிகழ்ந்ததோ அதை பற்றி விவரிக்கிறது. இந்த மூலம் இந்த பாட்டி நடிக்கவில்லை, உண்மையில் நாம் யாரோடு பேசநினைத்தோமோ அவரின் ஆன்மா தான் வந்துள்ளது என்பதை அந்த குடும்பத்தார் உணருகின்றனர்.

அந்த ஆன்மா பேச துவங்கிய பிறகு அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் நெகிழ்கின்றனர். ஒருகட்டத்தில் அந்த ஆத்மா தன்னுடைய உயிர் எப்படி தன் உடலை விட்டு பிரிந்தது என்ற விவரத்தை சொல்ல துவங்குகிறது. அந்த நேரத்தில் குடுப்பதில் உள்ள அனைவரின் கண்களிலும் நீர் மழை போல கொட்டுகிறது. அந்த குடும்பத்திற்கு தேவையான நல்ல விடயங்கள் பலவற்றையும் அந்த ஆத்மா சொல்கிறது. அதோடு இறுதியாக அந்த ஆத்ம அனைவரிடமும் விடைபெற்று செல்கிறது.