இந்துக்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்ட நாடு பற்றி தெரியுமா ?

Saint

பழங்காலத்தில் இயற்கை வழிபாடு உலகெங்கிலும் இருந்துள்ளது. உலகின் பழமையான மதமான இந்து மதத்தில் இன்று வரை இயற்கை வழிபாடு பின்பற்றப்படுகிறது. பாரதத்தின் மதம் மற்றும் கலாச்சாரம் பிற நாடுகளிலும் ஒரு தாக்கத்தை உண்டாகியிருக்கின்றன. அந்த வகையில் வட ஐரோப்பிய நாடான “லிதுவேனியாவில்” இந்து மதம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இங்கு காண்போம்.

Sivan Parvathi

“லிதுவேனியா” ரஷ்ய நாட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு சிறிய நாடு. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ரஷ்ய பேரரரசரர்களின் ஆட்சிக்குட்பட்ட ஒரு சிறிய நாடாக இருந்து வந்தது. இரண்டாம் உலகப்போரின் போது நாஜி ஜெர்மனி மற்றும் கம்யூனிச ரஷ்யாவின் ஆட்சிக்கு உட்பட்டு பல துன்பங்களை அனுபவித்த ஒரு நாடாகும். இன்றைய லிதுவேனியா மக்கள் தங்கள் முன்னோர்கள் இந்தியாவின் இந்துக்களை போலவே இயற்கையை வழிபட்டவர்கள் என்றும், கடுமையான முறைகளால் தங்கள் முன்னோர்கள் வேறு மதத்திற்கு வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

இந்த நாட்டில் இருக்கும் “ரோமுவா” என்கிற இன மக்கள் தங்களின் முன்னோர்கள் இந்தியாவின் ஹிந்துக்களை போன்ற பல வாழ்வியல் மற்றும் கலாச்சார பழக்கங்களை கொண்டிருந்ததாக கூறுகிறார்கள். இதற்கு ஆதாரமாக இவர்கள் பேசும் மொழியில் பல சம்ஸ்கிருத சொற்கள் இருக்கின்றன. இவர்கள் வழிபாடும் இயற்கை தெய்வங்களும் பாரதத்தின் இந்து மத தெய்வங்களை ஒத்திருக்கிறது.
lithuania இந்த ரோமுவா இன மக்கள் திருமணத்தின் போது நமது பாரம்பரிய இந்து மத முறையை போலவே நெருப்பை வலம் வந்து, அந்த நெருப்பை சாட்சியாக கொண்டு திருமண உறுதிமொழியை ஏற்கின்றனர். பழங்கால இந்தியாவிற்கும் பனிசூழ்ந்த வடக்கு ஐரோப்பிய நாடான லிதுனியாவிற்கும் ஏற்பட்ட கலாச்சார பரிமாற்றங்கள் குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

தெய்வீகம் வீடியோ : Dheivegam
இதையும் படிக்கலாமே:
ரிக் வேதத்தில் உள்ள விஞ்ஞானத்தை கண்டு வாய்பிளக்கும் விஞ்ஞானிகள்.

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான கட்டுரைகள் படிக்க எங்களுடன் இணைந்திருங்கள்.