மலை கோவில்களுக்கு சென்று இப்படி வழிபாடு செய்தாலே போதும். வேண்டிய வேண்டுதல் உடனே நடக்கும்.

malai-kovil-kungumam-manjal

வேண்டிய வரம் இறைவனிடம் இருந்து உடனடியாக கிடைக்க வேண்டும் என்றால், அதற்காகப் பிரத்தியேகமாக சில வேண்டுதல்களும், வழிபாட்டு முறைகளும் நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. அந்த வரிசையில் வேண்டுதலுக்காக பலனை உடனே அடைய, மலை கோவில்களுக்கு சென்று நாம் எப்படி வேண்டுதல் வைக்க வேண்டும் என்பதை பற்றிய ஒரு ஆன்மீக ரீதியான வேண்டுதலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆத்மார்த்தமாக நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தவர்களுக்கு கைமேல் பலன் நிச்சயம் உண்டு.

Palani Murugan

இந்த வேண்டுதலை நிறைவேற்ற நீங்கள் எந்த மலை கோவிலை வேண்டுமென்றாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மலைமேல் இருக்கும் கோவில்கள் என்றால் அது பெரும்பாலும் முருகர் பெருமாள் கோவில்கள் தான் இருக்கும். எந்த மலை கோவிலாக இருந்தாலும் சரி அங்கு படிக்கட்டுகள் அமைத்து இருக்க வேண்டும்.

பொதுவாகவே மலை கோவில்களுக்கு நாம் சென்றால், மலை மீது ஏறுவதற்கு வாகன வசதிகள் இருந்தாலும், அதை தவிர்த்துவிட்டு முடிந்தவரை மலை மேல் நடந்து செல்ல வேண்டும். உடல்நிலை சரியில்லாதவர்கள் முதியவர்கள் என்றால் பரவாயில்லை. ஆனால், ஆரோக்கியமாக இருப்பவர்கள் நடக்க முடியும் என்ற பட்சத்தில் கட்டாயமாக மலை கோவில்களுக்கு படிக்கட்டுகளில் நடந்து சென்று, அந்த இறைவனை தரிசனம் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

pournami

குறிப்பாக மலைமேல் உள்ள தெய்வங்களை அமாவாசை தினத்திலும் பௌர்ணமி தினத்திலும் சென்று வழிபடுவது நல்லது. அப்படி இல்லை என்றால் மலை மேல் இருக்கும் தெய்வத்திற்கு எந்த கிழமை உகந்ததோ அந்தக் கிழமையில் சென்று வழிபாடு செய்யலாம். சரி, இப்போது வேண்டுதலை உடனடியாக நிறைவேற்றி தரக்கூடிய அந்த பரிகாரம் என்ன என்பதை பார்த்துவிடுவோம்.

- Advertisement -

மலைக் கோவில்கள் என்றாலும் சரி, அல்லது சாதாரணமாக இருக்கும் கோவில்களாக இருந்தாலும் சரி நாம் கோவிலுக்குள் தரிசனம் செய்ய செல்லும் போது நம்முடைய வலது கை மோதிர விரல் பூமியில் பட வேண்டும். அதாவது நமஸ்காரம் செய்யும் போது வலது கை மோதிர விரலால், பூமாதேவியை தொட்டு நமஸ்காரம் செய்து கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் கோவிலுக்குள் நுழையும் போது முதலில் கோவிலில் இருக்கக்கூடிய வாசல் படியில் உங்களது வலது கை மோதிர விரலைத் தொட்டு நமஸ்காரம் செய்வது, நமக்கு கோடான கோடி புண்ணியத்தை தரும்.

virudhalacham-temple

இதே புண்ணிய பலன் நமக்கு பல மடங்கு கிடைக்க வேண்டுமென்றால் மலைகளில் இருக்கும் படிக்கட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு படிக்கட்டும் நம்முடைய வலது கை மோதிர விரலால் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து நம்முடைய வேண்டுதலை சொல்லிக்கொண்டே, மலை மீது ஏறிச் செல்ல வேண்டும். இது நிறைய பேருக்கு தெரிந்த வேண்டுதல் தான்.

kungumam

தீராத கஷ்டங்கள் தீர நிறைவேறாத வேண்டுதல் நிறைவேற இந்த வேண்டுதலை வைக்கும் பட்சத்தில் அந்த வேண்டுதலுகாண பலன் உடனடியாக கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. மலையின் மீது இருக்கும் அத்தனை படிக்கும் நீங்கள் இந்த மஞ்சள் குங்கும பொட்டு வைக்க முடியவில்லை என்றாலும் ஒரு கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். 11 படிக்கட்டுகள், 21 படிக்கட்டுகள், முடிந்தால் 108 படிக்கட்டுகள் வரை இந்த மஞ்சள் குங்குமம் வைத்து படியேறி மேலே உள்ள இறைவனை தரிசனம் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து நல்ல பலனை அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.