மறுபிறவிக்காக பசுமாட்டின் உடலில் புகுந்து காத்திருக்கும் இளைஞனின் ஆன்மா – வீடியோ

cow

உயிரினங்கள் அனைத்துக்கும் பிறப்பு எப்படி இயற்கையானதோ அப்படியே இறப்பு என்பதும் எல்லாவற்றிர்க்குமான பொதுவான நீதியாகும். அதிலும் மனிதனின் இறப்பு ஒரு புதிராகவே அணைவருக்கும் தோன்றுகிறது. ஏனெனில் மனிதன் இறந்த பின்பு அவன் செய்த வினைகளுக்கு ஏற்ப சொர்கத்திற்கோ நரகத்திற்கோ செல்வதாக உலகின் பெரும்பாலான மதங்கள் கூறுகின்றன. மேலும் இறந்த சில மனிதர்கள் ஒரு சிலக் காரணங்களுக்காக மறுபிறவி எடுத்து வருவார்கள் எனவும் அம்மதங்கள் கூறுகின்றன. இம்மறுபிறவிக்கொள்கை சொர்கம் நரகம் போன்றவற்றை நம்பாதவர்கள் கூட வியக்கும் வகையில் சில நிகழ்ச்சிகள் இவ்வுலகில் நடக்கத்தான் செய்கின்றன அப்படிப்பட்ட ஒரு நிகழ்வைத் தான் இக்காணொளியில் நாம் காணப் போகிறோம்.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

வெளிநாட்டிற்கு பணிநிமித்தமாகச் சென்ற இளைஞர் ஒரு அங்கு உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார். அவர் இறந்த சிலக் காலத்திற்கு பின் ஒரு பசுமாடு தினந்தோறும் அவ்விளைஞனின் வீட்டிற்குள்ளலேயே வருவதாகவும், அப்படி வீட்டிற்குள் வரும் அந்த பசுமாட்டின் செயல்கள் இறந்துபோன அவ்விளைஞனின் செயல்களை ஒத்திருப்பதாகவும் இறந்த அவ்விளைஞனின் குடும்பத்தார் கூறுகின்றனர்.

இந்த பசுமாட்டில் தங்கள் மகனின் ஆன்மா இருப்பதாக அக்குடும்பத்தினர் நம்புவதால் அவரின் ஆன்மாவுடன் தொடர்பு கொள்ள ஆவிகளுடன் பேசும் நிபுணரிடம் சென்ற போது, அவர் அந்த இளைஞனின் குறித்து கூறுகையில், அந்த இளைஞன், வாழும் தன் உடன்பிறந்த சகோதரனுக்கு மகனாகப் பிறப்பதற்கு பசுமாட்டின் உடலில் புகுந்து காத்திருப்பதாக கூறியதாக அந்நிபுணர் கூறினார். நம் அன்பிற்குரியவர்கள் இறந்த பின்பும் நம் மீது பாசத்துடன் இருப்பது உண்மை தான் என்று தோன்றுகிறது.