6 அடி சமாதியை உருவாக்கி தவம் செய்யும் மனிதர்

samadhi dhiyanam

“மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அடைய வேண்டிய இறுதி நிலை முக்தி நிலை” என பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுவார். பிறப்பு, இறப்பு என்ற இந்த தொடர் சுழற்சியை மனிதர்கள் அனைவராலும் அறுத்தெறியும் முயற்சியில் அவர்களுக்கு உதவுபவர்கள் தான் ஞானிகள். தங்களை கடுமையாக வருத்திக்கொண்டு தவம் புரிந்த தவச்சீலர்களை குருவாக ஏற்றுக் கொண்டு அவர்களிடம் சரண் புகுவதால் நம் கர்ம வினைகளை நீக்கி, நம்மை துயரங்களிலிருந்து விடுகின்றனர். இது போன்ற ஒரு வகையான தியானத்தை ஒருவர் முயற்சித்துள்ளார். வாருங்கள் அதை இந்த வீடியோவில் பார்ப்போம்.

தகுந்த குருவின் வழிகாட்டுதலோடு இங்கு சொல்லப்படுவது போல் 48 நாள் அதாவது ஒரு மண்டலம் பூமியில் 3,4 ஆழத்திற்கு மேல் குழி அமைத்து, அதில் தர்பைப் புல்லாலான ஆசனம் அமைத்து தியானிப்பதன் மூலம் பல அற்புத ஆற்றல்கள் நமக்கு கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

இக்குழியில் நாம் ஜீவசமாதி முறையில் தியானமிருப்பதன் மூலம் நம்மிடமுள்ள தீயசக்திகளை அக்குழி ஈர்த்துக்கொண்டு, நம்முள் பிரபஞ்சப் பேராற்றல் நிரம்பும் என்றும் சொல்கிறார்கள். மேலும் மக்களும், உயிர்களும் பயன்பெற மழை பொழிவதற்கு ஒரு குறிப்பிட்ட முறையில் இங்கு தியானம் செய்வதால், நன்மைகளை பெறமுடியும் என ஆன்மிகச் சாதகர்கள் கூறுகிறார்கள். மனிதனின் மனோசக்திக்கு இப்புவியில் எதுவும் சாத்தியம் தான்.