- Advertisement -

இந்த பூலோகத்தில் இருக்கக் கூடிய எந்த ஒரு கெட்ட சக்தியினாளும், உங்கள் வாழ்க்கையில் துன்பம் வராது! இந்த தீபத்தை ஏற்றி இறை வழிபாடு செய்தால்.

நாம் மனிதராக பிறந்த நாள் முதல் நம்மைத் தாங்கி நிற்பது இந்த பூமி தாய் தான். பஞ்சபூதங்களில் முதலிடத்தை பிடித்திருப்பதும் இந்த பூமி தான். அதாவது நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு, இந்த வரிசையில் நிலத்திற்கு தான் முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் வாழும் இந்த நிலம் இல்லையேல், மற்ற நான்கு பஞ்ச பூதங்களுக்கும் வேலையே இருக்காது. நிலம் முழுவதும் சூழப்பட்டு இருப்பது மண். நமக்கு நல்லதை கொடுப்பதும் இந்த பூமி தாய் தான், நமக்கு கெடுதலை கொடுத்ததும் இந்த பூமி தாய் தான். ஆக நம்மை சூழ்ந்திருக்கும் இந்த பிரபஞ்சத்தின் மூலம் வரக்கூடிய எந்த ஒரு கெடுதலும் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்றால் பூமி தாயை முதலில் நாம் வணங்குவது தான் சரி.

பூமித்தாய்க்கு நாம் எவ்வளவு மதிப்பு கொடுக்கிறோமோ, அதே அளவிற்கு தான் பூமியில் இருக்கக்கூடிய மண்ணிற்கும் முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும். இந்த பூமியில் இருக்கக்கூடிய ஒரு கைப்பிடி மண்ணுக்கு இருக்கும் மகத்துவம் வேறு எதிலும் இல்லை என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த ஒரு கைப்பிடி மண்ணை வைத்து தான் இந்த தீப வழிபாடே ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

சமுத்திரத்தில் இருக்கக்கூடிய மணல் பரப்பில் இருந்து, கொஞ்சம் மணலை எடுத்துவந்தாலும் சரி, அல்லது ஏதாவது தோட்டத்தில் இருந்து எடுத்து வந்த மண்ணாக இருந்தாலும் சரி, கோவிலில் இருந்து எடுத்து வந்த மண், இருந்தாலும் சரி, முதலில் அந்த மணலின் மேல் கொஞ்சமாக மஞ்சள் தண்ணீரை தெளித்து தோஷத்தைக் அகற்றி விடுங்கள். அதன் பின்பு அதை ஒரு சிறிய தாம்பாளத்தில் பரப்பி கொட்டிக் கொள்ள வேண்டும்.

அந்த மண்ணின் மீது ஒரு அகல் தீபத்தை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு, தீபம் ஏற்றிக் கொள்ளுங்கள். நமக்கு வரக்கூடிய எந்தக் கஷ்டமாக இருந்தாலும் அந்த கஷ்டத்தை இந்த பூமி தாய், அதாவது நம்மை சுற்றி இருக்கும் மண் தடுத்துவிட வேண்டும் என்று, பூமி தாயை நினைத்து மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இந்த தீபத்தை குறிப்பாக வீட்டின் தென்மேற்கு மூலையில் ஏற்றுவது சிறப்பானது. பூஜை அறையில் இருக்கும் தென்மேற்கு மூலையில் ஏற்றி வைக்கலாம்.

- Advertisement -

தினமும் இந்த தீபத்தை ஏற்ற முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள், ஞாயிற்றுக்கிழமை மட்டுமாவது, இந்த தீபத்தை ஏற்றி வைத்து பூமித் தாயை, மண்ணை வணங்குவது வீட்டிற்கு நன்மையை கொடுக்கும். தட்டில் இருக்கும் மண்ணை அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற அவசியமே கிடையாது. எப்போது தீபம் ஏற்றினாலும் அந்த பழைய மண்ணை வைத்து தீபம் ஏற்றிக் கொள்ளலாம். வழிபாட்டை முடித்து விட்டு, மண்ணை ஒரு டப்பாவில் போட்டு பத்திரப்படுத்தி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

எந்த ஒரு கஷ்டமும் நஷ்டமும், நன்மையும் தீமையும், நம்மை சுற்றி இருக்கக்கூடிய இந்த பூமியை தாண்டி தான், இந்த பிரபஞ்சத்தை தாண்டி தான், இந்த மண்ணை தாண்டிதான் நம்மை வந்து அடைகின்றது. புராணங்களில் மணலில் பானை செய்து, சிவலிங்கம் செய்து, தீர்க்கமுடியாத பிரச்சனைகளை கூட, தீர்த்த வரலாற்று சுவடுகள் ஏராளம். ஆக இந்த மண்ணையே கடவுளாக நினைத்து, அந்த மண்ணின் மேல் நாம் ஒரு தீபத்தை ஏற்றி வைக்கும் போது, எந்த ஒரு கெட்ட ஆற்றலின் மூலம் நமக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அதைத் தடுத்து நிறுத்தி, நமக்கு கவசமாக இந்த பூமி தாயும், இந்த பூமியில் இருக்கும் மண்ணும் முன் வந்து நிற்கும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -