கோவில் குளத்தில் குளித்தால் சிவன் கனவில் வந்து பலன் சொல்லும் அதிசயம் – வீடியோ

Sivan

மனித அறிவிற்கு எட்டாத பல அதிசயங்கள் இன்றளவு நமது தமிழக கோவில்களில் நிகழ்ந்த வண்ணம் தான் உள்ளது. அதிலும் நமது குறை தீர்க்க சிவனே கனவில் வந்து பலன் சொல்லும் அதிசயம் ஒரு கோவிலில் நிகழ்கிறது. வாருங்கள் அது குறித்து விரிவாக பார்ப்போ.

இல்லற வாழ்வில் உள்ள தம்பதிகள் தாங்கள் எப்படிப்பட்ட செல்வங்களைப் பெற்றிருந்தாலும் குழந்தைபேறில்லை என்றால் அவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் சொல்லமுடியாதது. அதிலும் தாய்மைக்கு அடையாளமான பெண்கள் படும் வேதனைகள் மிகக்கொடுமையானது. அப்படிப்பட்ட நிலையில் உள்ளோர்க்கு குழந்தை பாக்கியம் அருளும் கோவில் தான் “மார்கபந்தீஸ்வரர்” கோவில்” இக்கோவிலின் விசேஷ சக்திகள் ஏறலாம்.

பல மருத்துவர்களிடம் பல சோதனைகள் செய்து உடலில் குறைகளேதும் இல்லை என்று கூறப்பட்டும் குழந்தை பாக்கியம் கிட்டாதோர் இக்கோவிலின் தெய்வமான மார்கபந்தீஸ்வரர் வழிபட்ட பின்பு சீக்கிரத்திலேயே குழந்தைப்பேறு கிட்டியதாக பக்தர்கள் சொல்கின்றனர்.

காவல் துறையினர் வந்து கட்டுப்படுத்தும் அளவிற்கு இங்குள்ள “சிம்மதீர்த்தத்தில்” தலைமுழுக பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது. அப்படித் தலைமுழுகியப் பின்பு அந்த ஈர உடையுடனே பெண்கள் அனைவரும் இக்கோவில் சன்னிதானத்தில் உறங்குகின்றனர். அப்படி உறங்கும் போது இக்கோவிலின் தெய்வமான “மார்கபந்தீஸ்வரர்” அவர்களின் கனவில் வந்து அவர்களின் குறைகள் எப்போது தீரும் என்று கூறுவார் என்று அவ்வனுபவம் பெற்ற பெண் பக்தர்கள் கூறுகின்றனர்.