யார் கட்டும் வீடு தரமானது? மேஸ்திரியா, இஞ்சினியரா?

mesthiri

எல்லாருக்குமே சொந்த வீடு கட்டணும்னு ஆசை கட்டாயம் இருக்கும். ஆனால், அந்த ஆசை நிறைவேறுவதற்கு முன்பாகவே நம்முடைய வீட்டை இப்படி கட்டிக் கொள்ள வேண்டும்! அப்படி கட்டிக் கொள்ள வேண்டும்! என்ற கற்பனையும் அதற்கு மேலாகவே இருக்கும். உங்களுடைய கற்பனை வீட்டை, நிஜமான வீடாக மாற்றும் நேரம் வந்துவிட்டது. அப்போது, அந்த பொறுப்பை நீங்கள் யாரிடம் கொடுப்பீர்கள்? உங்களுக்கு தெரிந்த, அனுபவம் மிக்க மேஸ்திரியிடமா? அல்லது நன்றாக படித்த இன்ஜினியர் வேலையில் இருக்கும் ஒருவரிடமா? இந்த பதிவை படிப்பதற்கு முன்பாகவே உங்கள் மனதில் ஒரு விடையை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொண்டு, பின்பு படிக்க தொடருங்கள்.

built-home

சில பேர் குடும்பங்களுக்கு, பாரம்பரியமாக வீடு கட்டித்தரும் மேஸ்திரி இருப்பார். அவரை வைத்து நாம் வீடு கட்டும் பட்சத்தில், அந்தப் பாரம்பரிய கைராசி என்பது அவர் கையில் இருக்கும். அனுபவ அறிவு இருக்கும். தங்களுடைய வேலையாட்களை வைத்து,  கட்டித்தரும் அந்த வீட்டில் நம்முடைய பாரம்பரியம் கலந்திருக்கும். ‘பாரம்பரியமாக இவங்க, நம்ம கையில வேலையை கொடுக்கிறவங்க! என்ற ஒரு சின்ன விசுவாசத்தோடு’ அந்த வீடு கட்டி தருவார். சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஆனால், இந்த மேஸ்திரி நாம் சொன்ன பட்ஜெட்டுக்குள், நம் வீட்டை கட்டி தருவாரா? இந்த காலத்திற்கு ஏற்றவாறு வீட்டை அழகு படுத்தி தருவாரா? ‘இந்த வீடானது எப்போது கட்டி முடிக்கப்படும் என்ற கேள்விக்கு சரியான பதில் சொல்லுவாரா?’ இந்த வீடு கட்டி முடிக்க சரியாக எவ்வளவு தொகை ஆகும் என்று அவருக்குச் சொல்லத் தெரியுமா? அந்த மேஸ்திரி, நமக்கு கொடுக்கிற கமிட்மெண்ட்ஸ் முன்னபின்ன போறதுக்கு கட்டாயம் வாய்ப்பு இருக்கு.

construct-home

இப்போது படித்த இன்ஜினியருக்கு வருவோம்! உங்க கையில எத்தனை சென்ட் இடம் இருக்கு? உங்களுடைய பட்ஜெட் என்ன? இது 2 மட்டும் நீங்க சொன்னீங்கன்னா போதும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி, ஆட்களை அழைத்து வந்து, வீட்டை கட்டி முழுமையாக, சொன்ன தேதியில் சாவியை உங்கள் கையில் ஒப்படைத்து விடுவார்.

- Advertisement -

ஆனால், இன்ஜினியருக்கு அனுபவ அறிவு என்பது கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். இன்ஜினியருக்கு இருக்கிற பத்து கஸ்டமர் நீங்களும் ஒருத்தர். அவ்வளவுதான். இவருக்கு அனுபவம் குறைவாக இருந்தாலும் படிப்பறிவு அதிகம். சொன்ன டைமுக்கு முன்னாடி வேலைய முடிச்சு தருகின்ற திறமை இவர் கையில இருக்கு.

built-home1

என்னதான் செய்வது? யாரை வைத்து வீடு கட்டுவது என்று குழப்பம் உங்களுக்கு வந்துவிட்டதா? படித்த இன்ஜினியரை வைத்து பிளான் போட்டு, அனுபவம் உள்ள மேஸ்திரி வைத்து உங்களது வீட்டை கட்டிக் கொள்ளுங்கள். அறிவாற்றலும் அனுபவமும், வேகமும் விவேகமும், சேரும் ஒரு இடத்தில் நாம் செய்யும் எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அது முழுமை பெறும் என்பதில் சந்தேகமே இல்லை. இன்ஜினியர், மேஸ்திரி இரண்டு பேரையும் வெச்சுட்டு வீடு கட்டினா, சூப்பரா வரும். உங்களோட கனவு இல்லம் நனவாக, பொறுப்பை ரெண்டு பேருக்கும் பிரிச்சி கொடுத்துடுங்க. அவ்வளவு தான்!

இதையும் படிக்கலாமே
சமயலறையில் இதை செய்தால் பிசுபிசுப்பும் இருக்காது பூச்சிகளும் இருக்காது.

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Civil engineer. Engineer plan home. Mestiri in Tamil. Building mestri.