விரும்பிய அனைத்தும் பெற வரும் வெள்ளிக்கிழமை(7/5/21) சித்திரை ஏகாதசியில் இதை மட்டும் செய்ய மறந்து விடாதீர்கள்!

perumal-temple

ஒவ்வொரு மாதம் வரும் ஏகாதசியும் சிறப்பான பலன்கள் கிடைக்க கூடிய மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. ஒரு வருடத்திற்கு 24 முதல் 25 ஏகாதசிகள் வரை வரும். அப்படி வரும் ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு விதமான பலன்களைக் கொடுக்கக் கூடியதாக சாஸ்திரங்கள் குறிப்பிட்டு கூறுகிறது. வரும் வெள்ளிக்கிழமை அன்று வரக்கூடிய ஏகாதசிக்கு கிடைக்கக் கூடிய பலன்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

perumal1

ஒவ்வொரு ஏகாதசியும் உணவேதும் அருந்தாமல் முற்றிலும் விரதம் மேற்கொள்பவர்களும் உண்டு. மஹாவிஷ்ணுவுக்கு உகந்த ஏகாதசி வழிபாடு செய்பவர்களுக்கு நிச்சயம் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. இம்மையிலும், மறுமையிலும் நல்ல வாழ்வு பெற ஏகாதசி விரதம் மேற்கொள்வது நல்ல பலன்களைக் கொடுக்கும்.

வாழும் பொழுதும் சொர்க்கத்தை அனுபவிக்கலாம். இறந்த பின்பும் சொர்க்கத்தை அடையலாம். அத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஏகாதசி நாளில் எவரொருவர் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி தீர்த்தத்தை அருந்துகிறார்களோ! அவர்களுக்கு அத்தனை செல்வங்களும் கிடைக்கும். செல்வத்தை வாரி வழங்குவதில் பெருமாளுக்கு ஈடு இணை எவருமில்லை. தொழில் வளர்ச்சி, வியாபார வளர்ச்சி பெற ஏகாதசி விரதம் மேற்கொள்வது நல்லது.

Perumal

ஆண்டு முழுவதும் வரும் ஒவ்வொரு ஏகாதசியும் சிறப்பான பலன்களைக் கொடுக்கும், அதில் வரும் வெள்ளிக்கிழமை அன்று வரக்கூடிய சித்திரை மாத ஏகாதசிக்கு ‘வருதினி ஏகாதசி’ என்பது பெயராகும். இந்த நாளில் முறையாக விரதம் இருந்து பெருமாளை நினைத்து விஷ்ணு சஹஸ்ர நாமம் படித்து வந்தால் 16 செல்வங்களும் சேரும் என்பது ஐதீகம்.

- Advertisement -

இந்த ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு இமயமலைக்கு சென்று எம்பெருமானை தரிசித்த பலன் கிடைக்கும் என்று நம்பப்பட்டு வருகிறது. நம்முடைய இறுதி காலகட்டத்தில் சொர்க்கத்தை அடையவே ஒவ்வொரு மனமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. யாரும் தான் நரகம் செல்ல வேண்டும் என்பதை விரும்பமாட்டார்கள். பூமியில் வாழும் பொழுதே தெரிந்தும், தெரியாமலும் நாம் எவ்வளவோ பாவங்களை செய்து இருப்போம். அப்படி நாம் அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம் பெற ஏகாதசி விரதமிருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று தீபமேற்றி வழிபட்டு வரலாம்.

perumal

பெருமாளுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு எல்லாப் பிணிகளும் நீங்கி எல்லா சவுபாக்கியங்களும் உண்டாகும் என்பது நம்பிக்கை. இன்று இருக்கும் காலகட்டத்தில் நீங்காத நோய்களால் தவித்து வரும் பக்தர்களுக்கு ஏகாதசி திருநாளில் பெருமாள் தீர்த்தம் வாங்கி அருந்தி வர அத்தனையும் தீரும். கட்டாயம் ஏகாதசியில் விஷ்ணு சஹஸ்ரநாமம் படித்து வர வேண்டும். படிக்கத் தெரியாதவர்கள் ஒலி வடிவமாக வீட்டில் விஷ்ணு சகஸ்ர நாமம் ஒலிக்க விடுங்கள்.

perumal1

முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் பாலும் பழமும் அருந்திவிட்டு விரதம் இருக்கலாம். பெருமாளுக்கு வீட்டில் வழிபடுபவர்கள் பழங்களை நிவேதனம் வைத்து துளசி மாலை சாற்றி, துளசி தீர்த்தம் தயார் செய்து வழிபட்டு வரலாம். ஏகாதசியில் துளசியை உண்பவர்களுக்கும், துளசி தீர்த்தத்தை அருந்துபவர்களுக்கும் நீங்காத நோய்களெல்லாம் நீங்கும். தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளித்து வர வீட்டில் இருக்கும் அத்தனை துஷ்ட சக்திகளும் வெளியேறிவிடும். வெற்றி மேல் வெற்றி பெற ஏகாதசி விரதம் இருந்து ஏகாந்தமான வாழ்வு பெற்று அனைவரும் பயனடையலாமே!