கருநாக்கு இருந்தால் அவர்கள் சொல்வது பலிக்குமா? நாக்கில் மச்சம் இருந்தால் இவ்வளவு ஆபத்து வருமா? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!

tongue-oolai-suvadi
- Advertisement -

பொதுவாகவே மச்ச சாஸ்திரம் என்கிற ஒரு சாஸ்திரம் நம் அங்கங்களில் இருக்கும் மச்சங்கள் என்ன பலனை கொடுக்கும்? என்பதை விரிவாகச் சொல்லும். அங்க லட்சணங்களையும் கொண்டு ஒரு மனிதனுடைய குணாதிசயங்களை ஜோதிடம் எளிதாக கூறி விடும். அத்தகைய வரிசையில் கருநாக்கு இருந்தால் அவர்கள் சொல்வது பலிக்குமா? நம் நாக்கில் மச்சம் இருந்தால் என்னவெல்லாம் நடக்கும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

tongue

நம் உடம்பில் நாக்கு என்பது மிகவும் முக்கியமான பகுதி ஆகும். பேச்சாலும், சொல்லாலும் கெட்டவர்கள் இவ்வுலகில் அதிகம் உண்டு. நாக்கில் நரம்பு இல்லை என்பதற்காக கண்டபடி பேசி விட்டால் பேசிய வார்த்தைகளை அல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்க வேண்டியது தான். அத்தகைய நாக்கில் மச்சம் இருந்தால் நம் முன்னோர்கள் அவர்கள் சொன்ன வாக்குகள் பலிதமாகும் என்பார்கள். ஆமாம்! உண்மையில் நாக்கில் கருமை படர்ந்து இருப்பது அதாவது கருநாக்கு என்பார்கள். கருநாக்கு இருப்பவர்கள் அல்லது மச்சம் இருப்பவர்கள் திடீரென கூறிவிடும் வார்த்தைகள் பலித்துவிடும். நாக்கில் மச்சம் இருப்பவர்கள் சொல்லும் வார்த்தைகள் பலித்தாலும் அதனால் வரும் ஆபத்துகளை அவர்கள் கடந்து தான் ஆக வேண்டும்.

- Advertisement -

நாக்கில் மச்சம் இருப்பவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை அவர்களால் எந்த ஒரு உண்மையையும் மனதில் போட்டு வைத்துக் கொள்ள முடியாது. ரகசியம் என்பதே இவர்களிடம் இருப்பதில்லை என்பது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை ஆகும். ஏதாவது ஒரு சூழ்நிலையில் உளறிக் கொட்டி விடுவார்கள்.

tongue

பின்னர் ‘ஏன்டா கூறினோம்’ என்று வருத்தப்படவும் செய்வார்கள். எந்த விஷயத்தை மறைக்க வேண்டுமோ! அந்த விஷயத்தை அவர்களிடமிருந்து மறைத்தாக வேண்டும். அப்போது தான் அந்த உறவில் சுமூகமான சூழ்நிலை இருக்கும். ஆனால் நாக்கில் மச்சம் இருப்பவர்களால் எத்தகைய சூழ்நிலையிலும் உண்மையை தனக்குள்ளே தக்க வைத்துக் கொள்ள முடியாது. மச்ச சாஸ்திரத்தின்படி நாக்கில் இருக்கும் மச்சம் அவர்களை உண்மையை உளற செய்துவிடும்.

- Advertisement -

‘தெரியாமல் உண்மையை கூறிவிட்டேன் பெரிய வம்பாக போய்விட்டது’ என்ற வார்த்தையை அவர்கள் கண்டிப்பாக வாழ்க்கையில் அடிக்கடி கூறுவார்கள். ‘என் வாயை வைத்து என்னால் சும்மா இருக்க முடியவில்லை’ என்கிற வார்த்தையும் அவர்கள் அடிக்கடி பயன்படுத்துவார்கள். ‘தவளை தன் வாயால் கெடும்’ என்பது போல நாக்கில் மச்சம் இருப்பவர்கள் தன் வாயாலே கெட்டும் போவார்கள். சூழ்நிலைக்கு தகுந்தவாறு பேசுபவனை இந்த உலகம் பொய்யனாக பார்க்கும். ஆனால் உண்மையில் அவர்களாலேயே எல்லா உறவுகளையும் கடைசி வரை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

tongue1

‘பாத்திரம் அறிந்து பிச்சை போடு’ என்ற வாக்கிற்கு இணங்க யாரிடம் பேசுகிறோம்? எப்போது பேசுகிறோம்? என்கிற இடம், பொருள், ஏவல் பார்த்து தான் பேச வேண்டும். நரம்பில்லா நாக்கு பேசும் வார்த்தைகளை தாங்கும் மனம் பலருக்கும் இல்லை. இதனால் தான் வள்ளுவர் ‘தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு’ என்ற பழமொழியும் கூறி வைத்து சென்றுள்ளார். நாக்கில் மச்சம் இருப்பவர்கள் இந்த பிரச்சனைகளிலிருந்து மீள தினமும் துளசி இலைகளுடன், அதிமதுரத்தை சேர்த்து வாயில் மென்று வரலாம், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். கூடுமானவரை சட்டென வார்த்தைகளை விட்டு விடுவதும், உளறிக் கொட்டி விடுவதும் தவிர்ப்பதே உங்களுக்கு நல்லது என்பதைக் கூறி இப்பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -