பார்த்தாலே பிரச்சனைகளை தீர்க்கும் மௌன சித்தர் – வீடியோ

Cigarette siddhar

மனிதர்களின் நலனுக்காகவும், மனித குலம் மேம்படவேண்டும் என்ற எண்ணத்தினாலும் சித்தர்கள் பலர் குகைகளில் இருந்து வெளி உலகிற்கு வந்து மனிதர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம். அந்த வகையில் சுருளி மலை அடிவாரத்தில் ஒரு சித்தர் உள்ளார். மௌன சித்தர் என்றும் சிகெரெட் சித்தர் என்றும் பக்தர்களால் அழைக்கும் அவர் குறித்த வீடியோ காட்சி இதோ.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

சுருளி மலை அடிவாரத்தில் தற்சமயம் வாழ்ந்து வரும் மௌன சித்தர் அங்கு எப்படி எப்போது வந்தார் என்று யாருக்கும் தெரியவில்லை. வந்து பல வருடங்கள் ஆகியும் இதுவரை அவர் யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. அவரை காண செல்லும் பக்தர்கள் அனைவரும் சிகெரெட் பாக்கெட்களை வாங்கிக்கொண்டு செல்கின்றனர். அதை அவர் புகைக்கிறார்.

ஒரு நாளைக்கு சராசரியாக 500 சிகெரெட் வரை புகைக்கும் இவர், சிகெரெட் புகையை வெளியில் விடுவது கிடையாது. அதே போல ஒவ்வொரு முறை சிகெரெட் புகையை உல் இழுக்கும்போதும் “சிவாய நமக” என்னும் மந்திரத்தை இவர் கூறுவதாக கூறப்படுகிறது. தன்னை நாடி எவர் வந்தாலும் அவரது குறையை இவர் தீர்த்து வைக்கிறாராம்.

இது வரை அவர் செய்த சித்து விளையாட்டுகள் அனைவரையும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. ஒரே நேரத்தில் பல இடங்களில் கட்சி கொடுக்கும் வல்லமை இவரிடம் இருப்பதாக கூறப்படுகிறது. இவரை பல இடங்களில் ஒரு நேரத்தில் பார்த்தவர்களும் இருக்கிறார்கள். இவர் ஒருவரை பார்த்தாலே போதும் அவரின் பிரச்சனைகள் முழுவதும் தீர்ந்துபோகும் என்று நம்பப்படுகிறது.