ஒரே செம்பருத்தி செடியில் கலர் கலராக பூக்கள் பூக்க இத செஞ்சாலே போதுமே!

hibiscus-sembaruthi1
- Advertisement -

செம்பருத்தி செடி பல்வேறு நன்மைகளைத் தரக்கூடியது. ஆன்மிக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் பல்வேறு பயன்பாடுகளுக்கு செம்பருத்தி பயன்படுத்தப்படுகிறது. செம்பருத்தியை வீட்டில் வளர்த்து வந்தால் அதிர்ஷ்டம் வரும் என்பது ஜோதிட நம்பிக்கை. அது போல செம்பருத்தியை வளர்த்தால் வீட்டில் நல்ல ஆக்ஸிஜன் கிடைக்கும். ஒரே செம்பருத்தி செடியில் எப்படி விதவிதமான கலர்களில் பூக்களை பூக்கச் செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

hibiscus-sembaruthi

செம்பருத்தி செடி அதிர்ஷ்ட செடிகளில் ஒன்று. வீட்டின் முன்புறம் படர்ந்து வளர விட்டால் செல்வ வளத்திற்கு குறைவே இருக்காது. அது போல இதில் இருக்கும் வேர் முதல் பூக்கள், இலைகள் என்று அத்தனையுமே மருத்துவ பயன்களை கொடுக்கக் கூடியது. விநாயகருக்கு செம்பருத்தி மலரை கொண்டு அர்ச்சனை செய்யும் பொழுது நமக்கு நினைத்த காரியம் உடனே நிறைவேறும் என்ற நம்பிக்கையும் உண்டு.

- Advertisement -

ஒரே செம்பருத்தி செடியில் பல்வேறு நிறங்களை எப்படி பூக்கள் செய்ய முடியும்? ஒரு செடியில் ஒரு நிறத்தில் தானே பூக்கள் பூக்கும் என்று என்பது சிலருடைய நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால் எளிய முறையில் ஒரே செடியில் பல நிறங்கள் கொண்ட பூக்களையும் பூக்க வைக்க முடியும். அதை தான் எப்படி என்பதை இனி பார்க்க இருக்கிறோம்.

plant-graft

முதலில் உங்களுடைய செம்பருத்தி செடியின் ஒரு கிளையை மட்டும் எடுத்து தனியே வளர்த்து வாருங்கள். அதன் கிளைகளை வெட்டி விட்டு தண்டு பகுதியை மட்டும் பாதி அளவிற்கு வெட்டி விடுங்கள். அதன் பிறகு கிளை பகுதிகளில் இருக்கும் செம்பருத்தி கிளைகளை தனியாக எடுத்து வைக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு கிளையும் ஒவ்வொரு நிற பூக்களை கொடுப்பதாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதாவது வெவ்வேறு நிற செடிகளில் இருக்கும் கிளைகளை உடைத்து எடுத்து வைக்க வேண்டும். அதில் ஒரு ஒரு இணை கிளைக்கும் இன்னொரு இணை கிளைக்கும் இடையில் மொட்டுகள் வளர முட்கள் போன்று வளர்ந்து இருக்கும். அந்தப் பகுதியை தனியாக கத்தி அல்லது கத்தரிக்கோல் பயன்படுத்தி எடுத்துக் கொள்ளுங்கள். இது போன்று உங்களுக்கு எத்தனை நிறங்கள் தேவையோ அத்தனை கிளைகளையும் செய்து கொள்ள வேண்டும்.

plant-graft1

இப்போது அக்கிளைகளில் இருக்கும் அடிப்பகுதியை சீவி விடுங்கள். பென்சில் சீவுவது போல அதன் வேர்ப்பகுதி வளர்வதற்கு அடிப்பகுதியை சீவி விட வேண்டும். நீங்கள் தனியாக வளர்த்து நட்டு வைத்த செம்பருத்தி செடியின் கிளையை நுனி பகுதியை இரண்டாக லேசாக சீவி வையுங்கள். அதன் இடுக்குகளில் நீங்கள் சீவி வைத்தார் கிளைகளை ஒவ்வொன்றாக சொருக வேண்டும். அதன்பின் இருக்கமாக பிளாஸ்டிக் கவரை பயன்படுத்தி சுற்றிக் கொள்ளுங்கள். இப்படி செய்யும் பொழுது முதன்மை கிளைக்கும் இப்போது நீங்கள் சொருகி வைத்த இணை கிளைகளும் ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து விட ஆரம்பிக்கும்.

plant-graft1

அதற்காக ஒரு பாலிதீன் பை கொண்டு ஒரு மாதம் வரை அப்படியே மூடி இருக்கமாக கட்டி விடுங்கள். உள்ளே இருக்கும் கிளைகள் ஒரு மாதத்திற்குள் புதிதாக துளிர் விட ஆரம்பித்து விடும். அதன்பிறகு நீங்கள் பாலிதீன் பையை எடுத்து விடலாம். அடுத்த ஓரிரு வாரங்களில் நன்கு இலைகள் துளிர்த்து பசுமையாக வளர ஆரம்பித்துவிடும். இப்போது நீங்கள் பதியம் செய்த ஒவ்வொரு கிளைகளில் இருந்தும் ஒவ்வொரு விதமான நிறங்களில் மலர்கள் பூக்க ஆரம்பிக்கும். அதன் பிறகு இறுக்கமாக கட்டிய பாலிதீன் கவரை எடுத்து விடலாம். இப்பொழுது ஒரே செம்பருத்தி செடியில் பல்வேறு விதமான பூக்களை நம்மால் பெற முடியும். இதனை செடிக்கு ஒட்டு கட்டுவது என்றும் கூறுவது உண்டு.

- Advertisement -