மஸ்ரூம் 65 செய்வது எப்படி என்று பார்ப்போம்

mushroom-65
- Advertisement -

மஸ்ரூம் 65 ஒரு சிறந்த சத்தான ஸ்னாக் வகையாகும். மற்ற 65 போன்றே மஸ்ரூம் 65 மிகவும் சுவையாக இருக்கும் . அதே நேரத்தில் உடலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத ஸ்னாக் வகை இதுவாகும் . இதனை வீட்டில் எப்படி சமைப்பது என்று இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

மஸ்ரூம் 65 செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

காளான் – 300 கிராம்
உப்பு – தேவையான அளவு
அரிசி மாவு – 1 டீஸ்பூன்
கார்ன் மாவு – 1 டீஸ்பூன்
மைதா மாவு – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு
எலுமிச்சை சாறு – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

மஸ்ரூம் 65 செய்முறை:

முதலில் ஒரு பவுலில் நன்றாக கழுவி எடுத்த காளானை இரண்டாக வெட்டி போடவும். பிறகு அதனுடன் அரிசி மாவு, கார்ன் மாவு, மைதா மாவு சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு அதனுடன் அணைத்து மசாலா தூள்களையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.

- Advertisement -

பிறகு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து அதனை 10 நிமிடம் வரை நன்றாக ஊற வைக்கவும். 10 நிமிடங்களுக்கு பிறகு மஸ்ரூம் மாவு தயாராகி இருக்கும்.

இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நாம் கலந்து வைத்துள்ள மஸ்ரூம் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மஸ்ரூம் 65 தயார்.

- Advertisement -

சமைக்க ஆகும் நேரம் – 15 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 2

இதையும் படிக்கலாமே:
20 நிமிடத்தில் சுவையான சாம்பார் செய்வது எப்படி

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Mushroom 65 recipe in Tamil. It is also called Mushroom 65 ingredients in Tamil or Mushroom 65 preparation in Tamil or Mushroom 65 seimurai in Tamil or Mushroom 65 seivadhu eppadi in Tamil.

- Advertisement -