3 ஆண்டுகளாக பூமியை சுற்றி வரும் குட்டி நிலா பற்றிய மர்மம் தெரியுமா?

earth-moon
- Advertisement -

விண்வெளியில் அவ்வப்போது சில அதிசயங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். அது போல் கடந்த மூன்று வருடங்களாக நமது பூமியை ஒரு குட்டி நிலா சுற்றி வந்து கொண்டிருக்கிறது என்று விண்வெளி ஆய்வுகளை நடத்தும் ‘மைனர் பிளானட் சென்டர்’ என்ற ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிய வந்துள்ளது. இது போன்ற நிகழ்வுகள் விண்ணில் நடப்பது புதிதல்ல என்றாலும் ஆச்சரியங்கள் நிறைந்த பால் வெளி மண்டலம் நம்மை வியக்க தான் வைக்கிறது.

earth-moon1

பூமியை போன்ற வேற்று கிரகங்கள் இருக்கின்றனவா என்று ஆராய்ச்சிகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும் நிலையில் இந்த குட்டி நிலா பூமியை சுற்றி வருவது சிலிர்ப்பூட்டுகிறது. இந்த சிறிய நிலவிற்கு ஆய்வாளர்கள் 2020 CD என்று பெயரிட்டுள்ளனர். இது போல் இதற்கு முன்னர் 1991 இல் குட்டி கோள் ஒன்று பூமியை சுற்றி வந்தது. அதற்கு 1991 VG என்று பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த குட்டி கோள் பூமியை சில ஆண்டுகள் சுற்றி விட்டு வேற்று பாதையில் சென்று விட்டது. அது மீண்டும் வரும் 2028 இல் பூமியை நோக்கி வரும் எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற நிகழ்வுகளை கணிப்பது கடினமானது. சூரியன், சந்திரன், பூமி இம்மூன்றின் ஆதிக்கத்தில் இவைகள் செயல்படுவதால் எந்த நேரமும் தன் பாதையை மாற்றி கொன்று சென்று விடும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

- Advertisement -

மேலும் 2006 இல் தன் சுற்று பாதையை விட்டு பூமியை ஒரு விண்கல் சில வருடங்கள் சுற்றி வந்தது. அதன் பின் தன் பாதையை அடைந்து வெகு தூரம் சென்று விட்டது. அதே போல் இந்த குட்டி நிலாவும் சில காலம் பூமியை சுற்றி விட்டு தன் பாதையில் சென்று சூரியனை அடைந்து விடும். பூமியை நோக்கி வருவதானாலும் அதன் அளவு சிறியதாக இருக்கும் பொருட்டு வளிமண்டலத்திலேயே எரிந்து விடக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

two-moon

எது எப்படியோ இந்த குட்டி நிலவு இன்னும் சில காலம் மட்டுமே நம்முடன் பயணிக்கும் என்று கூறியுள்ளனர். அதுவரை நம்முடைய நிலாவிற்கு டைம் பாஸ் பண்ண ஒரு குட்டி நண்பன் கிடைத்திருக்கிறான் என்றே கூற வேண்டும்.

- Advertisement -