ஒரே நாளில் கை ரேகையையே மாற்றி உயர்வை தரும் முறை – வீடியோ

navagragha healing tamil

“இவ்வுலகே துன்பமயமானது” என்று “பகவான் புத்தர்” கூறினார். மனிதனாக பிறந்த அனைவருமே மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வதில்லை. ஏதேனும் ஒரு மனக்குறையோடு, ஒரு திருப்தியற்ற வாழ்க்கையைத் தான் பெரும்பாலானோர் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இது தான் நமது “தலைவிதி” என்று நொந்துகொள்கின்றனர். ஆனால் ஒரு சிலர் சித்தர்கள் மற்றும் யோகிகளின் சில மந்திர, தந்திரப் பயிற்சியின் மூலம் நமது விதியை நாம் விரும்பம் வகையில் மாற்றிக்கொள்ள முடியும் என்று கூறுகின்றனர். அப்படி நம் விதியை நாமே மாற்றிக்கொள்ள உதவும் ஒரு கலை தான் “நவகிரக ஹீலிங்” மந்திர பயிற்சி முறை. இதைப்பற்றி மேலும் அறிய இக்காணொளியைக் காணுங்கள்.

நாம் நமது முற்பிறவி கர்ம வினைகளைத் தீர்ப்பதற்காகத் தான் நாம் இப்பிறவியை எடுக்கிறோம். அப்படி நாம் நமது முற்பிறவியில் செய்த நன்மை, தீமைகளுக்கு ஏற்ப இப்பிறவி வாழ்க்கை அமைகிறது. அப்படியான நமது முற்பிறவி மற்றும் இப்பிறவிக்கான விடைகளை நமது கைரேகைகள் கொண்டிருப்பதாக கூறுகிறார் இந்த நவகிரக ஹீலிங் பயிற்சியாளர்.

மேலும் சரியான மந்திரப் பயிற்சியின் மூலம் நமது உடலில் இருக்கும் “ஏழு யோகச் சக்கிரங்களில்” இருக்கும் கேடுகள் நீக்கும் போது நமது உள்ளங்கையிலிருக்கும், கெடுப்பலன்களைத் தரும் ரேகைகள் புள்ளிகள் மாற்றம் அடையும் என்றும், அப்படி மாறும்போது நமக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தலைவிதியையும் நாம் விரும்பும் வண்ணம் மாற்ற முடியும் என்று கூறுகிறார் இந்தப் பயிற்சியாளர்.

அப்படி அந்த “நவகிரக ஹீலிங்” பயிற்சியை மேற்கொண்ட பின் தங்களின் கைரேகைகளில் சில மற்றம் ஏற்பட்டதாக இவரிடம் அப்பயிற்சியை பயின்ற ஒரு சிலர் கூறுகின்றனர்.

மேலும் இப்பயிற்சியின் சிறப்பாக ஒரு நபருக்கு ஏற்படக்கூடிய “மரணத்தையும்” தடுத்து, அவரின் ஆயுட்காலத்தை மேலும் நீட்டிக்கமுடியும்” என்று இந்த நவ கிரக ஹீலிங் பயிற்சியாளர் உறுதியாகச் சொல்கிறார். நம்பிக்கை அனைத்தையும் சாத்தியமாக்கும்.