கோவிலின் கால சக்கரத்தில் நின்றால் தலை எழுத்தே மாறும் அதிசயம் – வீடியோ

Nera kovil

மனித வாழ்க்கை என்பது இன்ப துன்பங்கள் நிறைந்ததாகவே உள்ளது. ஆனால் சிலருக்கோ வெறும் துன்பம் மட்டுமே வாழ்க்கையாக மாறுகிறது. அதனால் விரக்தியின் உச்சத்திற்கு சிலர் செல்கின்றனர். இந்த நிலையை மாற்றி நமது வாழ்வில் உள்ள கெட்ட நேரங்களை எல்லாம் போக்கும் சக்தி பெற்ற ஒரு கோவில் உள்ளது. வாருங்கள் அதை பற்றி இந்த வீடியோவில் பார்ப்போம்.

தெய்வத்திற்கும் அப்பாற்பட்ட சக்தி ஒன்று இந்த உலகத்தில் உண்டு எனில் அது நேரம் தான் என்று சிலர் கூறுவதுண்டு. தெய்வமே நினைத்தாலும் காலத்தை தடுக்க இயலாது. ஏன் தெய்வங்களுக்கும் கூட காலம் நேரம் எல்லாம் பொருந்தும் என்றும் கூறுவதுண்டு. அதை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருப்பது தான் நேரம் கோவில்.

மதுரை மாவட்டத்தில் உள்ள M. சுப்புலாபுரம் என்ற கிராமத்தில் உள்ளது நேரக்கோவில். ஸ்ரீ கால தேவியே இந்த கோவிலில் வீற்றிருந்து இங்கு வரும் பக்தர்களின் காலத்தில் உள்ள கெட்ட நேரங்களை நீக்கி அருள்புரிகிறார். இந்த கோவிலில் ஒரு அபூர்வமான கால சக்கரம் உள்ளது. இந்த கால சக்கரத்தில் அனைவரும் 11 நொடிகள் நிற்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படி நிற்கும் நேரத்தில் நமது கால சக்கரமானது சுழன்று நமக்கு நல்ல நேரத்தை தரும் என்ற நம்பிக்கை இங்கு உள்ளது. இந்த கோவிலில் கால தேவிக்கு மட்டுமே சந்நிதி உள்ளது. மற்ற தெய்வங்களின் சிலை எதுவும் இந்த கோவிலில் இல்லை என்பது கவனிக்க வேண்டிய ஒரு விடயமாக உள்ளது.

உங்கள் ராசிக்கான தமிழ் புத்தாண்டு பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் இந்த கோவிலில் மாலை ஆறு மணி முதல் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. எவர் ஒருவர் தன்னுடைய வாழ்வில் உள்ள கெட்ட நேரத்தை போக்க வேண்டும் என்று நினைத்தாலும் இந்த வழிபாட்டில் கலந்துகொண்டு கால சக்கரத்தில் நின்று தங்களது வாழ்வில் உள்ள கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றிக்கொள்ளலாம் என்று கூறுகிறார் இந்த கோவிலை நிர்வகித்து வருபவர்.