புத்தாண்டிற்கு இந்த உறுதிமொழியை மட்டும் எடுத்துப் பாருங்கள்! உங்கள் வாழ்க்கையில் கெட்டதே நடக்காது.

praying-god

இந்த புத்தாண்டு தொடக்கத்திலிருந்து, அனைவருக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்பதற்காக நாம் அனைவரும் ஒரு உறுதிமொழியை இன்றிலிருந்து எடுத்துக்கொள்வோம். அந்த உறுதிமொழி என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, பதிலினை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்? இனி அந்த இறைவனை நினைத்து வேண்டிக்கொள்ளும் போது எனக்கு ‘கெட்டது நடக்க வேண்டாம். பிரச்சினைகள் வர வேண்டாம். உடல் நலத்தில் குறைபாடு வேண்டாம். என் குடும்பத்தை கஷ்டப்படுத்த வேண்டாம்.’ இப்படி வேண்டாம் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி வேண்டிக் கொள்வதை நிறுத்திவிடுங்கள். இப்படி நமக்கு நடக்கக் கூடாத கெட்ட விஷயங்களையே நாம் மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருக்கும்போது, அது நமக்கு நடந்துவிடுகிறது. நல்ல ‘ஆரோக்கியம் வேண்டும். நிம்மதியான வாழ்க்கை வேண்டும். நன்றாக உழைக்கக்கூடிய மனோ தைரியம் வேண்டும். நல்ல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.’ இப்படி வேண்டும் என்ற வார்த்தையோடு, நமக்கு வேண்டியதை மட்டும் சிந்திப்பதன் மூலம் நல்ல நேர்மறை ஆற்றலை உணர்வீர்கள்.

praying god

நன்றாக சிந்தித்துப் பாருங்கள். அந்த இறைவனிடம் வேண்டி கொள்பவர்கள் பலபேர் இப்படித்தான் ‘எனக்கு ‘இது வேண்டாம். அது வேண்டாம்’ என்று வேண்டிக் கொள்வார்களே தவிர, ‘வேண்டும்’ என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி அந்த இறைவனை பிரார்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

‘நீ உன் மனதில் எதை நினைத்துக் கொண்டே இருக்கிறாயோ அதுதான் நடக்கும்.’ இது நம் முன்னோர்களின் உண்மையான கூற்று. நம் வாழ்க்கையில் கெட்டது எதுவும் நடந்து விடக்கூடாது, என்பதையே தான் நம் மனதில் நினைத்துக்கொண்டு இருப்போமே தவிர, நம் வாழ்க்கையில் நல்லது மட்டும் தான் நடக்கும் என்பதை நாம் நினைப்பதே கிடையாது என்பது தான் உண்மை.

praying hand

நல்லதே நடக்கும் என்பதை உங்களின் ஆழ் மனதிற்குள் நினைத்துக் கொண்டே இருங்கள். உங்களுக்கு வரும் கெட்டதைக் கூட நல்லதாக மாறிவிடும். நமக்கு கெட்டது நடந்துவிடுமோ என்ற சிந்தனையுடன் இருந்தால், உங்களுக்கு வரக்கூடிய நல்லது கூட கெட்டதாக மாறிவிடும். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தானே? ஆனால் ஏனோ தெரியவில்லை. நாம் எப்பொழுதுமே நமக்கு நடக்காத விஷயங்கள் கூட, நடந்துவிடுமோ என்ற சிந்தனையிலேயே இருக்கின்றோம்.

- Advertisement -

இந்தப் புத்தாண்டில் இருந்து உங்கள் மனதில் ‘நல்லது மட்டும் நடக்கும்’ என்ற சிந்தனையை கொண்டு வாருங்கள். உங்கள் மனதிற்குள் இருக்கும் எதிர்மறை எண்ணத்தை தூக்கி வெளியே வீசி விடுங்கள்.

praying

சிலருக்கு எப்படி எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது என்பது தெரியாது. அவர்களது மனதை ஒரு நிலைப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். மனது அலைபாய்ந்து கொண்டிருக்கும். அப்படி இருப்பவர்கள் ஏதாவது ஒரு இறைவனின் மந்திரத்தை மனதார ஜெபித்துக் கொண்டே இருங்கள். நல்லதையும் நினைக்க வேண்டாம். கெட்டதையும் நினைக்க வேண்டாம். உதாரணத்திற்கு ஸ்ரீராமஜெயம், ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயண இப்படி ஏதாவது ஒரு மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு இருந்தாலே போதும். நேர்மறை எண்ணங்கள் நமக்கு தானாகவே வந்துவிடும்.

நல்ல சிந்தனைகளை மட்டும் உங்கள் மனதிற்குள் கொண்டு வந்து பாருங்கள்! இந்த புத்தாண்டு உங்களுக்கு எப்படிப்பட்ட முன்னேற்றத்தை தருகிறது என்பதை அனுபவித்து உணர்வீர்கள். நம் அனைவருக்கும் இந்த புத்தாண்டு ‘நன்மையாக அமைய வேண்டும்’ என்று அந்த இறைவனை பிரார்த்திப்போம். அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்

English Overview:
Here we have New year resolution 2020 in Tamil. New year promise 2020 in Tamil. Puthandu promises 2020 in Tamil. Puthandu resolutions 2020 in Tamil.