நம்முடைய வீட்டில் லட்சுமி தேவி நிரந்தரமாக வாசம் செய்ய, மகாலட்சுமியை இப்படித்தான் வீட்டிற்குள் அழைக்க வேண்டும்.

lakshmi-cash
- Advertisement -

மனிதர்களாக இருந்தாலும் கூட அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதையை சரியான முறையில் கொடுக்த்தால் தான், நம்முடைய வீட்டிற்கு வருவார்கள். அதே போல் தான் தெய்வங்களும். குறிப்பாக மகாலட்சுமி ஒரே இடத்தில் நிரந்தரமாக தங்கியிருக்கவே மாட்டாள். பல இடங்களுக்கு சென்று வரும் இந்த தேவியை நம்முடைய வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய, நம் வீட்டிற்குள் எப்படி அழைப்பது என்பது பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

mahalakshmi

மகாலட்சுமிக்கு பிடித்த சில விஷயங்களை நம் நில வாசப்படியில் வைத்து நம்பிக்கையோடு அழைத்தால், வீட்டிற்குள், தன்னுடைய வலது காலை எடுத்து வைத்து சந்தோஷமாக வருவாள் என்பதில் சந்தேகமே கிடையாது. வாரம்தோறும் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த பூஜையை உங்கள் வீட்டு நில வாசப்படிக்கு செய்வது வீட்டிற்கு சுபிட்சத்தை தேடித்தரும்.

- Advertisement -

காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, வழக்கம் போல் சுத்தமாகி விட்டு, வீட்டு வாசலில் கோலமிட்டு பின்பு நில வாசற்படியை சுத்தமாக துடைத்து, மஞ்சள் குங்குமம் இட்டு, மாக்கோலம் போட்டு, குறிப்பாக தாமரை கோலம் போடவேண்டும். நிலவாசல் படிக்கு கீழ் பக்கத்தில், இரண்டு பக்கங்களிலும் இரண்டு தாமரை கோலத்தை போட்டு விடுங்கள். குறிப்பாக இந்தக் கோலம் பச்சரிசி மாவில் இருக்க வேண்டும்.

kolam

அதன் பின்பாக இரண்டு சிறிய மண் அகல் விளக்குகள் எடுத்துக் கொள்ள வேண்டும். தீபம் ஏற்றிய விளக்கு இல்லாமல், புதிய விலக்காக இருந்தால் மேலும் சிறப்பு. அந்த மண் அகல் விளக்குகளில், முழுவதுமாக கல் உப்பை நிரப்பி விட்டு, ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து இரண்டு துண்டுகளாக வெட்டி, அதில் ஒரு பக்கம் மஞ்சளையும் ஒரு பக்கம் குங்குமத்தையும் தடவி, தயாராக இருக்கும் உப்பின் மேல் இந்த எலுமிச்சை பழத்தை வைத்து விட வேண்டும்.

- Advertisement -

உங்கள் நில வாசப்படிக்கு வலது பக்கத்தில் ஒரு, கல் உப்பு நிரப்பப்பட்ட எலுமிச்சை பழத் துண்டு வைக்கப்பட்ட, மண் அகல் விளக்கு, இடது பக்கத்திலும் ஒரு விளக்கு, இந்த இரண்டு விளக்குகளையும், நீங்கள் போட்டிருக்கும் தாமரை பூ கோளத்தின் மேல் ஒரு சிறிய தட்டை வைத்து அதன் மேல், விளக்குகளை வைத்து விடுங்கள்.

vilaku

நில வாசற்படியில் கீழ் பாக்கத்தில் மண் அகல் விளக்குகளை வைக்க வேண்டும். நிலவச படியின் மேலே வைக்க வேண்டாம். முதலில் தாமரை பூ கோலம், கோலத்தின் மேல் சிறிய தட்டு அதன்மேல் ஒரு மண் அகல் விளக்கு, விளக்கில் கல் உப்பு நிரப்பப்பட்டு இருக்க வேண்டும். நிரப்பிய உப்பின் மேல், வெட்டப்பட்ட எலுமிச்சம்பழம், எலுமிச்சைபழம் பக்கத்தில் ஒரு பூ, இவ்வளவுதான். இப்படியாக அலங்காரம் செய்து வைத்தது ‘மகாலட்சுமியே போற்றி’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரித்து விட்டு, நீங்கள் வீட்டிற்கு செல்லும்போது உங்களோடு மகாலட்சுமியை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் செல்ல வேண்டியதுதான்.

- Advertisement -

vasal-kathavu

மீண்டும் மறுநாள் காலை இந்த இடத்தை சுத்தப்படுத்தி விடவேண்டும். உப்பை எடுத்து தண்ணீரில் கொட்டி கலைத்து விட்டு, மற்ற பொருட்களை கால் படாத இடங்களில் எடுத்து போட்டு விடுங்கள். இப்படி முதல் நாள் அலங்கரிக்கப்பட்ட எந்த பொருளும், மறுநாள் அப்படியே நில வாசலில் இருக்கக் கூடாது‌. எல்லா பொருட்களையும் எடுத்து சுத்தம் செய்துவிட வேண்டும் என்பது மிக மிக முக்கியமான ஒன்று.

mahalakshmi

செவ்வாய்க்கிழமை இந்த வழிபாட்டை செய்தால், புதன்கிழமை காலையில் சுத்தம் செய்துவிட வேண்டும் மீண்டும். வெள்ளிக் கிழமைகளில் இப்படி வழிபாடு செய்யலாம். முடிந்தவர்கள் தினம்தோறும் இப்படி மகாலட்சுமியை வீட்டிற்குள் வரவேற்பது மேலும் சிறப்பை தேடித் தரும். ஆனால் எல்லா பொருட்களையும் மீண்டும் புதியதாக வைக்க வேண்டும். அதாவது, அகல் விளக்குகளை மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். உப்பு, எலுமிச்சை பழம், பூ இவைகள் தினமும் புதியதாக மாற்றப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியாக தொடர்ந்து செய்து பாருங்கள். வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து மன கஷ்டம் தீர்ந்து சந்தோஷம் இருப்பதை நம்மால் நிச்சயம் உணர முடியும்.

இதையும் படிக்கலாமே
நீங்கள் தினமும் குளிக்கும் போது, எந்த திசையை நோக்கி குளிக்கிறீர்கள் என்பதை கவனித்தீர்களா? இந்த திசையை நோக்கி குளித்தால் கஷ்டம் உங்களை விட்டுப் போகவே போகாது!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -