சித்தர்கள் அருளால் இனிப்பாக மாறிய படையல் – வீடியோ

padayal

சித்தர்கள் பெரும்பாலும் மலை குகையில் தவம் புரிவர் அல்லது மக்களுக்கு நன்மையை பயக்கும் வகையில் ஏதாவது ஒரு ஆய்வினை செய்வர் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் கன்னிவாடி மலையில் ஓம் வடிவ குகை ஒன்று உள்ளது. அதில் பல சித்தர்கள் தவம் செய்ததாகவும், இன்றும் பல சித்தர்கள் அங்கு சூட்சும வடிவில் தரிசனம் தருவதாகவும், அதிசயங்கள் பல நிகழ்த்துவதாகவும் கூறப்படுகிறது. இதோ அதன் வீடியோ காட்சி.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கன்னிவாடி என்னும் பகுதியில் அமைந்துள்ளது கன்னிவாடி மலை. மேற்கு தொடர்ச்சி மலையின் தொடக்கமாக கருதப்படும் இந்த மலையில் பல சித்தர்கள் தவம் செய்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக போகர், கொங்கணர் உள்ளிட்ட பல சித்தர்கள் இங்கு தவம் செய்துள்ளனர்.

நவ பாஷாண சிலையை போகர் இங்கு செய்ததற்கான சில குறியீடுகளும் உள்ளன. இந்த மலையில் உள்ள ஓம் வடிவ குகை ஒன்றில் இன்றும் சித்தர்கள் சூட்சும வடிவில் வாழ்வதாக கூறப்படுகிறது. ஆகையால் அந்த குகையை ஒரு கருவறை போல பாவித்து, கருவறையில் செய்யப்படுவது போல அந்த குகைக்கு பூஜைகள் செய்யப்படுகிறது.

அந்த குகையில் சித்தர்களுக்கு படையல் போடப்படுகிறது. இதில் அதிசயம் என்னவென்றால் சிதர்களுக்காக போடப்படும் படையலில் உள்ள பண்டங்கள் தானாகவே அதிகப்படியான இனிப்பு சுவையாக மாறுகிறது. இதில் இருந்து சித்தர்கள் இங்கு இன்றும் வாசம் செய்வதை நாம் புரிந்துகொள்ளலாம்.