வெறும் 7 நாட்களும், குப்பையில் தூக்கி போடும் இந்த 1 பொருளுமே போதும். உங்க முகம் ஜொலி ஜொலிக்கும். அப்புறம் உங்க லெவலே வேற! இந்த சேலஞ்க்கு நீங்க ரெடியா?

orange

சில பேரை எல்லாம் நாம் பார்த்திருப்போம். குறிப்பாக பெண்கள்! அடுத்த பெண்களுடைய முகத்தை உன்னிப்பாக கவனிப்பார்கள். அதுவும் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும் முகம் என்றால், ‘இவர்கள் எதைப் போட்டு இப்படி பளபளப்பாக தங்களுடைய சருமத்தை பராமரிக்கிறார்களோ என்று தெரியவில்லையே?’ என்ற கேள்வி நிச்சயம் பெண்களின் மனதில் எழத்தான் செய்யும். இது இயல்புதான். இப்படி உங்களுடைய முகத்தையும் பளபளப்பாக மாற்றிக்கொள்ள ஒரு ரகசியக் குறிப்பு. ஆரஞ்சு டோனர் மற்றும் ஆரஞ்சு சீரம் சுலபமாக வீட்டிலேயே எப்படி செய்து, ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்வது?

orange-serum

முதல்ல நாம தெரிஞ்சுக்க போரது ‘ஆரஞ்சு பீல் டோனர்’. 3 ஆரஞ்சு பழ தோல்கள் இந்த டோனர் செய்ய தேவைப்படும். முடிந்தவரை கமலாப்பழம் என்று சொல்வார்கள் இல்லையா, இயற்கையாக கிடைக்கும் அந்த பழத்தை வாங்க பாருங்கள். கிடைக்காதவர்கள் ஹைபிரிட் கமலா பழத்தையே வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆரஞ்சு பழத்திற்கு மேலே இருக்கும் ஆரஞ்சு நிற தோலை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, இந்த ஆரஞ்சு பழத் தோல்களை அந்த தண்ணீரில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, 15 லிருந்து 20 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட வேண்டும். தண்ணீரின் நிறம் ஆரஞ்சு நிறமாக மாற தொடங்கும்.

orange1

அப்போது அடுப்பை அனைத்து விட்டு, இந்த தண்ணீரை ஆரஞ்சு பழத்தோலுடன் அப்படியே விட்டு விடுங்கள். நன்றாக ஆறிய பின்பு, ஒரு கண்ணாடி பாட்டிலில் வடிகட்டி மூடி போட்டு ஃபிரிட்ஜில் வைத்து விட்டால், ஆரஞ்சு டோனர் ரெடி! இதை எப்படி யூஸ் பண்ணலாம்? முடிந்தால் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளலாம். அப்படியே முகத்தில் ஸ்ப்ரே செய்து விட்டு, ஐந்து நிமிடங்கள் அதை உலர வைத்தால் போதும். முகத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்குகளை இழுத்து வெளியே தள்ளிவிடும்.  ஸ்ப்ரே பாட்டில் இல்லாதவர்கள் ஒரு பஞ்சால் தொட்டு முகத்தில் இந்த ஆரஞ்சு டோனரை லேசாக துடைத்துக் கொள்ளலாம். அதன் பின்பு ஆரஞ்சு சீரம், முகத்தில் போட்டுக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த ஆரஞ்சு சீரம் எப்படி செய்வது? ஆரஞ்சு பழத்தோலை 4 லிருந்து 5 நாட்கள் நிழலிலேயே உலர வைத்து விட்டு, மிக்ஸியில் போட்டு பொடி செய்து, எடுத்தால் ஆரஞ்சு பழ தோலின் பொடி நமக்கு கிடைத்துவிடும். இல்லை என்றால் ஆரஞ்சு பீல் பவுடர், நல்ல பிராண்டாக பார்த்து கடைகளில் வாங்கி கொள்ளலாம். அடுத்ததாக நமக்கு தேவைப்படும் பொருள் அலோவேரா ஜெல் – 1 ஸ்பூன், ரோஸ் வாட்டர் – 1 ஸ்பூன்.

orange2

ஈரமில்லாத ஒரு சிறிய பௌல் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் ஆரஞ்சு பழ தோல் பவுடரை போட்டு கொள்ள வேண்டும். அடுத்த படியாக 1 ஸ்பூன் அலோ வேரா ஜெல்லைப் போட்டு, நன்றாக அடித்து கலக்க வேண்டும். இறுதியாக 1 ஸ்பூன் ரோஸ் வாட்டரை போட்டு கலந்தால் ஒரு ஜெல் பேஸ்ட் நமக்கு கிடைத்திருக்கும். இதுதான் ‘ஆரஞ்சு சீரம்’. இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி ஃப்ரிட்ஜில் வைத்து ஸ்டோர் செய்து கொள்ளலாம். பத்து நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

face10

இந்த ஆரஞ்சு சீரம் முகத்தில் இரவு முழுவதும் அப்படியே இருக்கலாம். சரி இதை எப்படி முகத்திற்கு பயன்படுத்துவது? முதலில் சொன்னது போல அந்த ஆரஞ்சு டோனரை முகத்தில் ஸ்ப்ரே செய்து 5 நிமிடம் உலர விட்டு விடுங்கள். அதன் பின்பு இந்த ஆரஞ்சு சீரமை லேசாக விரலில் தொட்டு முகத்தில் ஆங்காங்கே வைத்துக் கொள்ளுங்கள்.

face10

ஃபேரன் லவ்லி போடுவது போலத்தான் வைக்கவேண்டும். முகத்தில் போட்டு அப்படியே அப்பி கொள்ளக் கூடாது. நீங்கள் போட்டதே வெளியில் தெரியக்கூடாது. அந்த அளவிற்கு, முகத்தில் ஆங்காங்கே புள்ளி புள்ளிகள் போல வெச்சுட்டு, அப்படியே விரல்களை வைத்து லேசாக தடவி விட வேண்டியதுதான்.

face

ஒரு இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு விடலாம். முதலில் சொன்ன ஆரஞ்சு பீல் டோனரை முகத்தில் ஸ்ப்ரே செய்துவிட்டு, இரண்டாவதாக ஆரஞ்சு பீல் சீரம், முகத்தில் கண்ணுக்கு தெரியாமல் அப்ளை செய்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான். 7 நாட்கள் இதைத் தொடர்ந்து செய்து பாருங்கள். வித்தியாசத்தை நீங்களே உணர்வீர்கள். ஒரு மாதத்திற்குள் நீங்கள் ஹீரோயின் போல மாறிவிடுவீர்கள். மூன்று மாதத்திற்குள் உங்க லெவலே வேற! ட்ரை பண்ணி பாருங்க.