எவ்வளவு சுத்தம் செய்தாலும் வீட்டின் சுவற்றில் ஒட்டடை திரும்பத் திரும்ப வருகிறதா? இப்படி சுத்தம் செஞ்சு பாருங்க உங்க வேலை மிச்சமாகும்!

pepper-ottadai
- Advertisement -

வீட்டில் நமக்கு பெரிய வேலையாக இருப்பது ஒட்டடை சுத்தம் செய்வது தான். என்ன தான் அடிக்கடி சுத்தம் செய்தாலும் மீண்டும் மீண்டும் அந்த இடத்தில் எட்டுக்கால் பூச்சி தன் கூட்டைக் கட்டிக் கொண்டே இருக்கும். வீட்டின் சுவற்றில் இது போல் ஒட்டடை இருந்தால் பார்ப்பதற்கு அசிங்கமாக தெரியும். இந்த பிரச்சனையை சமாளிக்க சூப்பரான ஐடியா உள்ளது. அதை என்னவென்று? தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

vijaya-lakshmi

வீடு எப்பொழுதும் சுத்தமாக இருந்தால் தான் மகாலட்சுமியும் அங்கு நிரந்தரமாக வாசம் செய்வாள். வீட்டின் சுவரில் ஒட்டியிருக்கும் ஒட்டடை கூட எதிர்மறை ஆற்றல்களுக்கு காரணமாக இருக்கிறது. சுவற்றில் இருக்கும் ஒட்டடையை எந்த அளவிற்கு நீக்கி சுவரை சுத்தமாக வைத்திருக்கிறோமோ, அந்த அளவிற்கு வீடும் சுபீட்சம் பெறும்.

- Advertisement -

ஆனால் எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும் வீட்டின் சுவற்றில் ஒட்டி இருக்கும் ஒட்டடை திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருந்தால் என்ன தான் செய்வது? நீங்கள் வாரம் ஒருமுறை வீட்டை சுத்தம் செய்வதை விட உங்கள் கண்களுக்கு ஒட்டடை தெரியும் பொழுது சட்டென அதனை துடைப்பம் அல்லது ஒட்டடை குச்சி கொண்டு நீக்கி விட வேண்டும். அப்படி நீங்கள் செய்து வந்தால் எப்பொழுதும் வீடு சுத்தமாகத் தெரியும்.

ottadai

சுவற்றில் இருந்து ஒட்டடை எடுத்த பின்பு ஒட்டடையில் இருந்த எட்டுக்கால் பூச்சியையும் கொன்று விட வேண்டும். அதை அப்படியே விட்டு விட்டால் திரும்பவும் அதே இடத்திற்கு சென்று அதே போல கூடு கட்ட ஆரம்பித்து விடும். எனவே ஒட்டடையை சுத்தம் செய்யும் பொழுது அதை உருவாக்கும் பூச்சியையும் அழித்து விட வேண்டும்.

- Advertisement -

இப்போது நீங்கள் ஒருமுறை சுவற்றை சுத்தம் செய்து விட்டு அந்த இடத்தில் இந்த தண்ணீரை கொண்டு லேசாக துடைத்து எடுங்கள். அரை வாளி தண்ணீரில் ஒரு மூடி வினிகரை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நன்கு கலந்து அந்த தண்ணீரை கொண்டு வீடு துடைக்கும் மாப் அல்லது குச்சியில் துணியை சுற்றி நனைத்துக் கொள்ளுங்கள். அந்த ஈரத்தை சுவற்றின் ஓரங்களிலும் ஜன்னல்களையும் தடவிக் கொள்ளுங்கள். வினிகருடைய வாசனைக்கு எட்டுக்கால் பூச்சி அங்கே எட்டிக் கூட பார்க்காது. எட்டு கால் பூச்சி வரவில்லை என்றால் ஒட்டடையும் இருக்காது.

vinigar

இது காய்ந்து சிறிது நாட்கள் வரை ஒட்டடை பிடிக்காமல் இருக்க நமக்கு உதவியாக இருக்கும் ஆனால் அதன் பிறகும் எட்டுக்கால் பூச்சி வராமல் இருக்க ஒரு சிறிய அளவிலான பௌலில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு மிளகு தூள் போட்டுக் கொள்ளுங்கள். அதில் கால் பாகம் அளவுக்கு வினிகரை சேர்த்துக் கொள்ளுங்கள். அதே அளவிற்கு தண்ணீரையும் கலந்து கொள்ளுங்கள்.

Milagu

இந்த கலவையை நன்கு கலக்கிய பின்பு கொஞ்சம் கூட திப்பிகள் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். வடிக்கட்டிய இந்த தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். அதைக் கொண்டு எங்கெல்லாம் அதிகம் ஒட்டடை பிடிக்கிறதோ அங்கெல்லாம் அவ்வபோது ஸ்பிரே செய்து வாருங்கள். இந்த வாசத்திற்கு எந்த பூச்சியும் சுவற்றில் ஏறி கூடு கட்டாது. இதனால் வீடு எப்போதும் ஒட்டடைகள் இல்லாமல் சுத்தமாக காட்சி அளிக்கும்.

- Advertisement -