ஆளில்லா உளவு விமானத்தை வைத்து வேவு பார்த்த பாகிஸ்தான் ராணுவம். சுட்டு வீழ்த்திய குஜராத் ராணுவத்தினர் – வீடியோ

Pakistan

இன்று காலை இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள பால்கோட் பகுதியில் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த ஆளில்லா சிறிய அளவிலான உளவு விமானம் குஜராத் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இடங்கள் இணையும் எல்லையில் வளைகுடா பகுதியான கட்ஜ் என்ற பகுதியில் பறந்துள்ளது. அதனை அந்த கிராமத்தில் சிலரும் பார்த்துள்ளார்கள்.

Drone

உடனே கட்ஜ் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நம்நாட்டு ராணுவ வீரர்கள் அது ஆளில்லா உளவு விமானம் தான் என்பதை உறுதி செய்துகொண்டு கேள்வி இன்றி அதனை சுட்டு வீழ்த்தினர். அந்த ஆளில்லா சிறிய அளவிலான உளவு விமானம் ராணுவ வீரர்கள் சுட்டதில் நொறுங்கி கீழே விழுந்தது. அதனை ஆய்வு செய்த அதிகாரிகள் இது பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டை சேர்ந்த பகுதியில் இருந்து பறந்து வந்ததை கண்டறிந்தனர்.

அதாவது ஆளில்லா உளவு கருவி மூலம் எல்லையில் என்ன நிலைமை உள்ளது. எந்த வழியாக ஊடுருவி மீண்டும் தாக்குதலை நடத்தலாம் என்பதை அவர்களின் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே தெரிய முட்பட்டிருக்கிறார்கள். இதனை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டதால் அந்த பகுதியில் இன்னும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு மேலும், பல ராணுவ வீரர்கள் ரோந்துக்காக குவிக்கப்பட்டுளார்கள். இரவு, பகல் என முழுநேரமும் அங்கு காவல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த இந்த நிகழ்வு தற்போதே நமக்கு கிடைத்திருக்கிறது. இதனால் இந்தியா பாகிஸ்தான் எல்லைகள் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன, கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பதற்றமான சூழல் நிலவுவதால் இந்திய எல்லைகளில் ராணுவம் எந்த நேரத்திலும் சண்டையிட தயார் நிலையில் உள்ளது.

இதையும் படிக்கலாமே :

Indian air force attack : அதிநவீன போர் விமானங்கள் நம்மிடம் இருக்கையில் மிராஜ் 2000 விமானத்தை கையில் எடுக்க காரணம் என்ன தெரியுமா ? – அசரவைக்கும் அம்சங்கள்