ஊருக்கே பண கஷ்டம் வந்தாலும், உங்கள் வீட்டிற்கு பண கஷ்டம் வர வாய்ப்பே இல்லை. இந்த 3 விஷயங்களை தொடர்ந்து செய்து வந்தால்!

gajalakshmi-cash

நம்முடைய வீட்டில் பணக்கஷ்டம் வராமல் இருக்க வேண்டும் என்றால், நாம் அயராது உழைத்து பணத்தை சம்பாதிக்க வேண்டும். வீண் செலவு செய்யக்கூடாது. சோம்பேறித்தனம் இல்லாத, விடாமுயற்சியே நமக்கு கை நிறைய செல்வத்தைத் தேடி தரும். சரி, விடாமுயற்சியுடன் கஷ்டப்பட்டு முயற்சிகள் செய்தும் கையில் வரக்கூடிய பணம் தங்காமல் போவதற்கு ஆன்மீக ரீதியாக, ஜாதக ரீதியாக நிறைய காரணங்கள் இருக்கலாம். அதை சரிசெய்ய நம்முடைய வீட்டில் நாம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

elephant

வீட்டில் இருப்பவர்களுக்கு நன்மை மட்டுமே நடக்க, வீண் விரயம் ஆகாமல் இருக்க, பண வரவு அதிகரிக்க, எடுத்த காரியத்தில் வெற்றி பெற, அந்த வீட்டு பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு பொருள். யானை! ஒரு யானையை தனியாக வைத்து வழிபாடு செய்யக்கூடாது. இரண்டு யானைகளை ஜோடியாக பூஜை அறையில் வைக்க வேண்டும். அதிலும் வெள்ளை யானையின் திரு உருவ சிலை கிடைத்தால் மிகவும் அதிர்ஷ்டம் தான்.

வெள்ளை யானையின் திரு உருவ சிலை கிடைக்காத பட்சத்தில், மரத்தினால் செய்யப்பட்ட யானையை வாங்கி பூஜை அறையில் வைத்து தினம்தோறும் வழிபாடு செய்யலாம். இதில் எந்த யானையையும் உங்களால் வைக்க முடியவில்லை என்றாலும், பீங்கானில் இருக்கும் யானை பொம்மையை கூட வாங்கி பூஜை அறையில் வைத்து கொள்ளலாம். தவறொன்றும் கிடையாது. இப்படி தினசரி பூஜையில் காலை நேரத்தில் அந்த யானையிடம் ஆசி பெற்றுச் என்றால் அன்றைய நாள் வெற்றிகரமான நாளாக அமையும். யானையின் தலையில் உங்களது இரண்டு கைகளை வைத்து, கண்ணில் ஒற்றிக் கொள்ளுங்கள் போதும். யானையின் ஆசிர்வாதம் கிடைத்துவிடும்.

horse

இரண்டாவதாக நம் வீட்டு வரவேற்பறையில் ஒரு குதிரை படத்தை மாட்டி வைக்க வேண்டும். அந்த குதிரையின் படம் முன்னம் காலை மேலே தூக்கியவாறு இருப்பது மேலும் சிறப்பானது. அடுத்தபடியாக ஒரு காளை மாட்டின் திருவுருவப்படத்தை வரவேற்பறையில் வைப்பது மிகவும் நல்லது. இந்த இரண்டு படங்களுமே உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடியது. அடுத்தவர்களுடைய கண் திருஷ்டியால் உங்கள் வீட்டின் உடைய சந்தோஷம் கெட்டுப்போகாது. வரவேற்பறையில் வைத்துவிட்டு அடிக்கடி அதை பார்க்கும்போது நிச்சயமாக நல்ல பலன்கள் கிடைக்கும்.

- Advertisement -

மூன்றாவதாக வெள்ளிக்கிழமைகளில் பசுமாட்டிற்கு மஞ்சள் வாழைப்பழம் என்று சொல்லப்படும், பூவம் பழத்தை சாப்பிட கொடுக்க வேண்டும். இரண்டு வாழைப்பழங்களை கொடுத்தால் கூட போதுமானது. உங்கள் கையால் பசுமாட்டின் வாயில் கொண்டு போய் வைத்து விடுங்கள். இது லட்சுமி கடாட்சத்தை உங்களுக்கு மேலும் மேலும் சேர்த்துக் கொண்டே இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

kaalai

தினமும் வீட்டில் ஒரு உருளி வைத்து அதில் தண்ணீரை ஊற்றி வைக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் ஒரு உருளியில் சுத்தமான தண்ணீரை ஊற்றி, சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை அந்த தண்ணீரில் போட்டு, அதில் இரண்டு துளசி இலைகளை போட்டு வீட்டின் வடகிழக்கு மூலையில் வைத்து விட்டால் வீட்டில் இருக்கும் தரித்திரம் அனைத்தும் வீட்டில் இருந்து வெளியேற்றப்படும்.

uruli3

மகாலட்சுமி வீட்டிற்குள் நிரந்தரமாக தங்கி விடுவாள். வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும். வீட்டில் வறுமை என்பதே இருக்காது. பண கஷ்டம் என்ற வார்த்தைக்கு இடம் இல்லை. நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.