பன்னீர் 65 செய்வது இவ்வளவு ஈஸியா? பத்து நிமிடங்கள் கூட ஆகாது! சட்டுன்னு, வீட்டில் இருக்கும் பொருளை வைத்தே செஞ்சிடலாம்!

panner-65
- Advertisement -

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ் வகைகளில், பன்னீர் சேர்த்த பொருட்களும் கட்டாயம் அடங்கும். இந்தப் பன்னீர் மிகவும் சுவையானது, மிகவும் ஆரோக்கியமானதும் கூட. நம்மில் பலபேர் பன்னீர் 65, மஸ்ரூம் 65 என்றாலே, அதை ரெஸ்டாரண்டுக்கு சென்று, சாப்பிடுவதை தான் விரும்புவோம். காரணம், அதன் சுவை வீட்டில் செய்தால், கடையில் செய்தது போல் ருசியாக இல்லை என்ற காரணத்தால்! ஆனால் கடையில் கிடைக்கும், அதே சுவையில் நம் வீட்டிலும் பன்னீர் 65 சுலபமாக, ஆரோக்கியமாக செய்ய முடியும். அது எப்படி என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

panner-651

பன்னீர் 65 செய்ய தேவையான பொருட்கள்:
பன்னீர் – 200 கிராம், கான்ஃபிளவர் மாவு – 4 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், மிளகாய்தூள் – 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது, கருவேப்பிலை – 1 கொத்து பொடியாக நறுக்கியது, உப்பு தேவையான அளவு, எலுமிச்சை பழ சாறு – 2 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

முதலில் பன்னீரை க்யூப் வடிவில் சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக, ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்ந்து கலந்து விடுங்கள். அதன் பின்பு அந்த கலவையோடு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதம் வரும் அளவிற்கு, மாவை தயார் செய்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

panner

இந்தக் கலவை கொஞ்சம் தண்ணிர் பதத்தில் ஆகிவிட்டால், பன்னீரோடு சேராமல், தனித்தனியாக பிரிந்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், பன்னீரை ஈர தன்மையோடு இருக்கக்கூடாது. அதாவது ஃபிரிட்ஜிலிருந்து பன்னீரை வெளியே எடுத்தவுடன், அதன் மேல் தண்ணீர் விட்டிருக்கும் அல்லவா? அப்படி பன்னீரின் மேல், தண்ணீர் இருந்தாலும், 65 சூப்பரா வராது.

- Advertisement -

தயார் செய்து வைத்திருக்கும் கலவையில், வெட்டி வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து, மசாலா படும்படி கலந்து, ஐந்து நிமிடங்கள் ஊறவைத்து விடுங்கள். அதன் பின்பாக கடாயில் எண்ணெயை நன்றாக சூடு ஆன பின்பு, ஒவ்வொரு பன்னீர் துண்டுகளாக மசாலா ஓடு எடுத்து அந்த கடாயில் போட்டு, மிதமான தீயில் வைத்து, பொரித்து எடுக்க வேண்டும்.

மேலே இருக்கக்கூடிய மசாலா வெந்ததுமே, பன்னீரை எண்ணெயில் இருந்து எடுத்து விட வேண்டும் என்பது குறிப்பிடதக்கது. பன்னீர் 65 வெகு நேரம் எண்ணெயில் பொரிந்தால், பன்னீர் சாஃப்டா இருக்காது. பொரித்த பன்னீர் துண்டுகளை, தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் மிளகாய் தூள், கொஞ்சம் உப்பு, கொஞ்சம் மிளகு தூள், கொஞ்சம் கரம் மசாலாத்தூள், சேர்த்து நன்றாக கலந்து, சூடான பன்னீர் 65 மேலே தூவி, பக்கத்தில் பச்சை வெங்காயத்தையும், பாதி எலுமிச்சம் பழத்தையும், வைத்தீர்கள் என்றால் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பன்னீர் 65 ரெடி.

- Advertisement -

இது ரொம்பவும் ஈசி மெத்தட்! குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தீர்கள் என்றால், கட்டாயம் மிகவும் பிடிக்கும். இதேபோல் பன்னீருக்கு பதிலாக, மஸ்ரூம்களை நான்கு துண்டாக வெட்டி, இந்த மசாலா கலவையோடு சேர்த்து பொரித்து எடுத்தால் கூட, மஸ்ரூம் 65 தயாராகிவிடும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்கள் வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
சுமங்கலி பெண்கள் ‘தாம்பூலம்’ வாங்கும் பொழுது செய்யவே கூடாத தவறு என்னன்னு நீங்களும் தெரிஞ்சிக்கோங்க!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -