பங்குனி மாத ராசி பலன் – 12 ராசிக்கும் துல்லிய கணிப்பு

Panguni

மேஷம்:
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் செல்வ செழிப்போடு அமையப்போகிறது. வருமானத்திற்கு எந்த ஒரு குறைபாடும் இருக்காது. உறவினர்களின் வருகையால் வீட்டில் சந்தோஷம் நிலவும். சுபச்செலவு ஏற்படும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். சொந்த தொழிலில் முதலீட்டினை அதிகப்படுத்தலாம். திருமண தடை நீங்கி நல்ல வரன் அமையும். அலுவலகப் பணி சிறப்பாக செல்லும். உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். மேலதிகாரிகளிடம் சுலபமாக நல்ல பெயரை வாங்கி விடலாம். வாகனத்தில் செல்லும் போது மட்டும் சற்று கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் சற்று அதிக கவனம் எடுத்து படிப்பது முன்னேற்றத்தை தரும்.

பரிகாரம்: திங்கட்கிழமை அன்று விநாயகருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நல்ல பலனைத் தரும்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சந்தோஷமான மாதமாக அமையப் போகின்றது. உங்கள் தொழிலில் இருந்த தடைகள் அனைத்தும் விலகும் நேரம் வந்துவிட்டது. வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். உங்களது தொழில் லாபத்தோடு செல்லும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனை மறைந்து, ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சிக்கு எந்த குறைபாடும் வராது. அலுவலகப் பணியில் இருந்த எதிரிகள் கூட இந்த மாதம் உங்களது நண்பர்களாக மாறி விடப் போகிறார்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் முருகன் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றுவது நல்ல பலனைத் தரும்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய மாதமாக அமையப்போகிறது. உங்கள் வார்த்தைக்கு, உங்களை சுற்றி இருப்பவர்கள் நல்ல மரியாதை கொடுப்பார்கள். உங்களுக்கு இதுநாள் வரை இருந்த கெட்ட பெயர் மறையும். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்கள் மனைவி வழி உறவு வழியாக நல்ல செய்தி வந்து சேரும். அலுவலகப் பணியில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வத்தோடு ஈடுபடுவார்கள்.

- Advertisement -

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நல்ல பலனைத் தரும்.

கடகம்:
Kadagam Rasiகடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நன்மை தரும் மாதமாக தான் அமையப்போகிறது. உங்களின் எதிரிகள் கூட நண்பர்களாக மாறி விடுகிறார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொத்து வாங்கும் யோகம் கூட வர வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவை. உங்களது பிள்ளைகளால் ஏற்படும் பிரச்சனைகளை நீங்கள் தான் சமாளித்தாக வேண்டும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். மேலதிகாரிகளை அனுசரித்து தான் செல்ல வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. சிலருக்கு வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அனுமன் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நல்ல பலனைத் தரும்.

சிம்மம்:
simmam
பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். கணவன்
சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை தரும் மாதமாக தான் இந்த மாதம் அமையப் போகின்றது. முன் கோபம் வேண்டாம். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். பெரியோர்களின் ஆலோசனைப்படி கேட்டு நடப்பது நல்லது. உறவினர்களிடையே வாக்குவாதம் வேண்டாம். கணவன் மனைவி விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். வருமானம் சீராக இருக்கும். ஆரோக்கிய குறைபாட்டால் மருத்துவச் செலவு ஏற்படும். வாகனத்தில் செல்லும் போது சற்று கவனம் தேவை. உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சொந்த தொழிலில் லாபம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் சிரமப்பட்டு படித்தால்தான் வெற்றி உண்டு.

பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் சிவபெருமானுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்வது நல்ல பலனைத் தரும்.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டத்தை தரும் மாதமாக தான் அமையப்போகிறது. புதிய முயற்சிகள் வெற்றி தரும். நீங்கள் எதிர்பாராத பணவரவு கூட உங்கள் கைக்கு வந்து சேரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு நீண்ட தூரம் சுற்றுலா பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. விட்டுக்கொடுத்து சென்றுவிட்டால், மன அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து விடலாம். சொந்தத் தொழில் வழக்கம்போல் எந்த பிரச்சனையும் இல்லாமல் செல்லும். லாபம் அதிகரிக்காது. குறையவும் குறையாது. அலுவலகப் பணி சிறப்பாக செல்லும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.

பரிகாரம்: சனிக்கிழமை பெருமாள் வழிபாடு நல்ல முன்னேற்றத்தை தரும்.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சியான மாதமாக அமையப்போகிறது. உங்களை ஏளனமாகப் பேசியவர்கள் முன்பு ஜெயித்துக் காட்ட போகும் நேரம் வந்துவிட்டது. தலை குனிந்து நின்ற நீங்கள், தலை நிமிர்ந்து பதில் சொல்லலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று வாருங்கள். அலுவலகத்தில் உங்களது கை ஓங்கி நிற்கும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழிலில் நீங்கள் எதிர்பாராத அளவிற்கு லாபம் உங்கள் கைக்கு வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.

பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபடுவது நல்ல பலனைத் தரும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சி தரும் மாதமாக தான் அமையப் போகின்றது. உங்களுக்கு பிரச்சனை என்று வந்தால் அதை தீர்க்க, உங்களது நண்பர்கள் ஓடி வந்து உதவி செய்வார்கள். எடுத்த காரியத்தை வெற்றியோடு முடிக்க அதிக முயற்சியில் ஈடுபட்டு, வெற்றியும் காணப் போகிறீர்கள். புதிய ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் உள்ளது. உடல்நலனில் மட்டும் சற்று கவனம் தேவை. உடல் உபாதைகள் ஏதேனும் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. அலுவலகத்தில் வேலைப்பளு சற்று அதிகமாக இருப்பதால், உடல் சோர்வு மன சோர்வு ஏற்படும். சொந்த தொழிலில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் எடுத்து படிப்பது வெற்றியை தரும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றுவது நல்ல பலனைத் தரும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக தான் அமையப் போகின்றது. எந்த செயலை எடுத்தாலும் வெற்றி அடைந்துவிடலாம், என்ற தைரியத்தோடு நடைமுறை படுத்துகிறார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும். குழந்தை வரம் இல்லாதவர்களுக்கும் நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்துடன் சந்தோஷமாக நேரத்தை கழிக்க போகிறீர்கள். அலுவலகத்தில் இதுநாள் வரை இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் இந்த மாதம் நல்ல முடிவுக்கு வந்துவிடும். சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. சொந்த தொழில் சற்று மந்தமாகத்தான் செல்லும். பிரச்சினைகள் எதுவும் வராது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.

பரிகாரம்: விநாயகர் வழிபாடு நல்ல பலனைத் தரும்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் செல்வாக்கு அதிகரிக்கும் மாதமாக அமையப்போகின்றது. உங்கள் பேச்சுக்கு உங்களை சுற்றி இருப்பவர்கள் செவி சாய்ப்பார்கள். உங்களது வார்த்தைக்கு மரியாதை கூடும். நீங்கள் எதிர்பாராத அதிர்ஷ்ட காத்து உங்களை நோக்கி வீசப் போகிறது. கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் உற்சாகமாக செயல்படுவீர்கள். சொந்தத் தொழிலில் நீங்கள் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். சந்தோஷம் நிறைந்த மாதமாக தான் இந்த மாதம் அமையப்போகிறது. மாணவர்களுக்கு படிப்பில் சற்று கவனம் தேவைப்படும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் முருகன் வழிபாடு நல்ல பலனைத் தரும்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நல்ல மாதமாக தான் அமையப்போகின்றது. அரசாங்க விவகாரங்கள் மட்டும் சற்று இழுபறியாக இருக்கும். உங்களது மனைவியின் மூலம், சந்தோஷப் படும்படியான சம்பவம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. புதிய வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. வீட்டில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல்நலனில் மட்டும் சற்று கவனம் தேவை. யாரிடமும் வீண் விவாதம் செய்ய வேண்டாம். அனுசரித்து செல்வது பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு சிறந்த வழி. அலுவலகத்தில் வேலை சற்று அதிகமாகத்தான் இருக்கும். சொந்தத் தொழிலில் அதிக உழைப்பு இருந்தால் மட்டும் நல்ல லாபத்தைப் பார்க்க முடியும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மன் வழிபாடு நல்ல பலனைத் தரும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சி தரும் மாதமாக தான் அமையப்போகின்றது. பணவரவு சீராக இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்கள் வீட்டு கதவை தட்ட போகிறது. அலுவலகத்தில் உங்களின் எதிரிகள் தொல்லை நீங்கும். மேலதிகாரிகளின் பாராட்டை சுலபமாக பெற போகிறீர்கள். சம்பள உயர்வு கிடைக்கப்போகிறது. கடந்த மாதம் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் இந்த மாதம் தீரப் போகிறது என்று தான் கூற வேண்டும். சொந்த தொழில் முன்னேற்றத்துடன் செல்லும். உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். திருடு போவதற்கு வாய்ப்பு உள்ளது. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.

பரிகாரம்: வாரந்தோறும் செவ்வாய்கிழமை அன்று முருகன் வழிபாடு நல்ல பலனைத் தரும்.