காரணமே தெரியாமல், வீட்டில் வரும் தொடர் பிரச்சனைக்கு என்ன காரணம்? கண் திருஷ்டியா, கெட்ட சக்தியின் ஆதிக்கமா, பில்லி சூனியமா? எல்லாவற்றையும் அடித்து விரட்ட இத மட்டும் பண்ணுங்க!

dhubam

சில வீடுகளில் பிரச்சனை வருவதற்கு இதுதான் காரணம் என்று சொல்லிவிட முடியும். ஆனால், சில வீடுகளில் பிரச்சனை எதனால் வந்தது என்றே தெரியாது. திடீரென்று பூதாகரமாக பிரச்சினை வெடிக்கும். கடந்த சில நாட்களாக நன்றாக வாழ்ந்த மனிதருக்கு, ‘திடீரென்று கிறுக்கு பிடித்து விட்டது, பேய் பிடித்துவிட்டது என்று ஊரெல்லாம் பேசும்’ அளவிற்கு அந்த மனிதனுடைய நடவடிக்கைகள் மாறும். ஊருக்கே தெரியும் அவருடைய நடவடிக்கைகளில் மாற்றம் தெரிவது. ஆனால், அந்த குறிப்பிட்ட நபருக்கு தெரியாது, நாம் ஏன் இப்படி மாறினோம் என்று! இப்படிப்பட்ட பிரச்சனையால் அந்த தனிப்பட்ட நபருக்கு மட்டும் பாதிப்பு இருக்காது. அந்த ஒரு தனி மனிதருடைய செயல்பாட்டின் மூலம் அந்த ஒட்டு மொத்த குடும்பம், அவர் வேலை செய்யும் இடம், அவருடைய உற்றார் உறவினர்கள் எல்லோருமே பாதிக்கப்படுவார்கள். அவருக்கே தெரியாமல் அவரை சரி செய்வது எப்படி?

கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றலின் மூலம் பாதிக்கப்பட்ட நபராக இருந்தாலும் சரி, பாதிக்கப்பட்ட வீடாக இருந்தாலும் சரி, இதற்கு ஆன்மீக ரீதியாக நம்முடைய முன்னோர்கள் சொன்ன ஒரு சுலபமான தீர்வை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்பிக்கை உள்ளவர்களுக்காக சொல்லப்படும் பதிவு. இதை நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் படித்து பயன்பெறலாம்.

தென்னை மரம். தென்னை மரத்தில் உள்ள ஒரு பொருளின் பெயர் பன்னாடை. இது எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியாது. ஆனால், கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு இது நன்றாகவே தெரிந்திருக்கும். இந்த பன்னாடையை வாங்கி உங்களுடைய வீட்டில் தூபம் போட வேண்டும். பரிகாரம் இவ்வளவு தான்.

இந்த தூபத்தை எப்படி வேண்டுமென்றாலும் போட்டுக்கொள்ளலாம். நீங்கள் சாம்பிராணி தூபம் காட்டும் நெருப்பில் போட்டாலும் சரி அல்லது சிறிய மண் குடுவையில் கொஞ்சமாக சமித்து கட்டைகள் அல்லது வேப்ப மர குச்சிகளையோ போட்டு அதில் கற்பூரம் போட்டு கொளுத்தி விட்டு, பண்ணாடி என்று சொல்லப்படும் அந்த பொருளை, நெருப்பில் போட்டு வைத்தாலும் சரி தான்.

- Advertisement -

ஆக மொத்தத்தில் பன்னாடை எரியும் போது அதிலிருந்து வெளிப்படும் புகையை பாதிக்கப்பட்ட அந்த நபர் சுவாசிக்க வேண்டும். இப்படி செய்து வரும் பட்சத்தில் கண்ணுக்குத்தெரியாத எதிர்மறை ஆற்றல் யாரை தாக்கி இருந்தாலும், அது அந்த குறிப்பிட்ட நபரை விட்டு விலகிவிடும்.

neruppu

இன்னும் ஆழமாக சொல்லப்போனால், அடுத்தவர்களால் வசியம் வைக்கப்பட்டவர்கள், அவர்களுக்கே தெரியாமல் உணவில் மருந்து கலந்து கொடுப்பது, அடுத்தவர்கள் நன்றாக இருக்கக் கூடாது என்று பில்லி சூனியம் வைப்பது போன்ற எப்படிப்பட்ட பிரச்சனையும் வெளியேற்றக் கூடிய சக்தி இந்த பன்னாடை புகைக்கு உள்ளது.

இத்தனை நாட்கள் தான் இந்த தூபத்தை போட வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. வாரம்தோறும் நீங்கள் சாம்பிராணி தூபம் போடும் போது செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் இந்த புகையை வீடு முழுவதும் போடலாம். வீட்டில் உள்ளவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றலின் மூலம் உங்களுடைய வீட்டில் தேவையற்ற பிரச்சினைகள் வருவது குறையும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
பொன், பொருள், ஆடை, ஆபரணங்கள் அதிகம் சேர்வதற்கு இந்த 1 பழம் உங்களிடம் இருந்தால் போதுமே! என்ன பழம் அது?

இது போன்ற மேலும் பல அழகு சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.