அயல் நாட்டு ஏர்போர்ட்டில் பாற்கடலை கடையும் அற்புத சிலை – வீடியோ

parkadal
- Advertisement -

இந்திய நாட்டில் எண்ணற்ற இறை நம்பிக்கைகள் இருக்கின்றன. அதை சுற்றி பல விதமான புராணகாலத்து கதைகளும் உள்ளன. அதில் ஒன்று தான் தேவர்களும் அசுரர்களும் இனைந்து பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்த ஒரு நிகழ்வு. இதை தத்ரூபமாக ஒரு சிற்பம் போல வடித்து அதை பாங்காக் விமான நிலையத்தில் வைத்துள்ளனர். அதன் வீடியோ காட்சி இதோ.

- Advertisement -
தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

இறப்பில்லாத அமிர்தத்தை பாற்கடலில் இருந்து எடுப்பதற்காக தேவர்களும், அசுரர்களும் இனைந்து, வாசுகி என்னும் நாகத்தை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் பயன்படுத்தி பாற்கடலை கடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வின் இறுதியில் வலி தாங்க முடியாத வாசுகி நாகம் தன்னுடைய விஷத்தினை கக்க அதனை சிவன் உண்டார்.

அந்த விஷத்தினை சிவன் உன்கையில் பார்வதி தேவி அவர் கழுத்தினை பிடித்து விஷத்தினை கழுத்தில் நிற்கச்செய்தார். இதனாலேயே சிவனின் கழுத்து நீலமாக இருப்பதற்கான காரணமாக கூறப்படுகிறது. இவளவு பழமை மிக்க ஒரு புராண காலத்து நிகழ்வை எவ்வளவு அழகாக மக்களிடம் சேர்க்க முடியுமோ அவ்வளவு அழகாக சிற்பமாக வடித்து அதை மக்கள் கூடும் விமான நிலையத்தில் வைத்துள்ளது பாங்காக் அரசு.

- Advertisement -