எந்த வீட்டு சமையலறையில் இந்த தெய்வத்தின் படம் இருக்கின்றதோ, அந்த வீட்டில் கணவன் மனைவிக்குள் பிரச்சனையும் வராது. குடும்பத்தலைவி கையில் பணம் இல்லை என்ற வார்த்தையும் இருக்காது.

kitchen-cash

எந்த வீட்டில் கணவன் மனைவிக்குள் பிரச்சனை வராமல் இருக்கின்றதோ அந்த வீட்டில் நிச்சயமாக பணக் கஷ்டமும் இருக்காது என்றே தான் சொல்ல வேண்டும். பெண்கள் வீட்டில் மன நிம்மதியோடு, திருப்தியோடு கையில் பணம் காசுடன் இருந்தாலே போதும். அந்த வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக தங்கி விடுவாள். இதற்காக ஆண்கள், பெண்களுடைய கையில் கோடி கோடியாகப் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. தினமும் வீட்டில் இருக்கும் பெண்களின் தேவைக்காக, கணவரால் முடிந்த தொகையை மனைவியின் கையில் கொடுப்பது மிகவும் நல்ல பழக்கம்.

fight4

ஒரு வீட்டில் பணம் வீண் விரயம் ஆகிக் கொண்டே இருந்தால், வீட்டுப் பெண்மணியின் கையில் பணம் தங்கவில்லை என்றால், கணவன் மனைவிக்குள் பிரச்சனை வந்து கொண்டே இருக்கின்றது என்றால், அந்த வீட்டு சமையலறையில் குறிப்பாக எந்த தெய்வங்களின் படங்களை வைக்க வேண்டும் என்பதைப் பற்றிய தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஒரு வீட்டில் பணம் வீண் விரயம் ஆகக்கூடாது. சேமிப்பில் இருக்க வேண்டும் என்றால் அந்த வீட்டு சமையலறையில் கட்டாயம் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கி வைத்து, அந்தப் பொருட்களைப் புழங்கிக் கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் சமைக்கும் பாத்திரங்களை இரும்பில் பயன்படுத்தலாம். இரும்பு கடாய், இரும்பு தாளிப்பு கரண்டி, கரு நிறத்தில் இருக்கக்கூடிய இரும்பு தோசைக்கல், போன்ற பொருட்களை சமையலுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உங்களுடைய வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிரந்தரமாக இருக்கும்.

iron-vessels

நம்முடைய வீட்டில் தன தானியத்திற்கு மட்டுமல்ல, மற்ற ஐஸ்வரியங்களும் குறைவு இருக்க கூடாது எனும் பட்சத்தில், நம்முடைய வீட்டு சமையலறையில் அஷ்டலட்சுமியின் திருவுருவப் படத்தை வைத்து கொள்ளலாம். இரண்டாவதாக வீட்டில் கணவன் மனைவிக்குள் எந்நேரமும் சண்டை சச்சரவு இருந்து கொண்டே வந்தால், அந்த வீட்டு சமையல் அறையில் முருகப்பெருமானின் திருவுருவப்படம் இருக்க வேண்டும். அந்த முருகப் பெருமான் வள்ளி தெய்வானை உடன் இருப்பது மேலும் சிறப்பானது.

- Advertisement -

பெரிய அளவில் உங்களால் இந்த தெய்வங்களின் திரு உருவப் படங்களை எல்லாம் வைத்து வழிபாடு செய்ய முடியவில்லை என்றாலும், பாக்கெட்டில் வைக்கக் கூடிய சிறிய அட்டையில் இந்த தெய்வத்தின் திருஉருவ படம் இருந்தாலும் பரவாயில்லை. அந்த படத்தினை சமையல் அலமாரியில் ஒரு உயரமான பகுதியில் வைத்து வழிபாடு செய்யுங்கள்.

ashtalakshmi

ஒன்றுமில்லை, சமையல் அறைக்குள் குடும்பத் தலைவி நுழைந்தவுடன் அஷ்ட்ட லக்ஷ்மிகளையும் முருகப் பெருமானையும், ஒரு ஒருமுறை இரு கைகளையும் எடுத்து உங்களுடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு சமையலை தொடங்கினாலும் போதும்.

murugan

உங்களுடைய வீட்டில் சண்டை சச்சரவுகள் குறைந்து, குடும்பத் தலைவருக்கு இருக்கக்கூடிய பணக்கஷ்டம் தீர்ந்து வீட்டின் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிறகு என்ன? குடும்பத் தலைவரிடம் அதிகப்படியான பணப்புழக்கம் வந்தால், நிச்சயமாக குடும்பத்தலைவி கையில் பணம் இல்லை என்ற வார்த்தைக்கு இடமே இல்லை. நல்லதே நடக்கும். முயற்சி செய்து பாருங்கள்.