தினம் தினம் பெண்கள் குளிப்பதற்கு முன் இதை மட்டும் 1 சொட்டு முகத்தில் பூசி கொண்டாலே போதும். அந்தப் பெண்ணின் கையில் பணம் காசு போதும் போதும் என்ற அளவுக்கு குவியும்.

women

பெண்கள் அனைவருமே அந்த மகாலட்சுமியின் ஸ்வரூபம் கொண்டவர்கள் தான். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. ஆனால், சில பெண்களுக்கு முகத்தில் தேஜஸ் கலை என்பது அதிகமாக இருக்கும். சில பெண்களுக்கு அந்த தேஜஸ் கொஞ்சம் குறைவாக இருக்கும். அதாவது முக லட்சணம் என்று சொல்லுவார்கள் அல்லவா, அதில் சில பெண்களுக்கு சில வித்தியாசங்கள் தெரியும். மற்றபடி எல்லா பெண்களும் அதிர்ஷ்ட கொண்டவர்கள் தான். அந்த வரிசையில் சில பெண்கள் கைகளில் எப்போதுமே காசு புரளும். சில பெண்களின் கையில் காசு பணம் குறைவாகத்தான் இருக்கும்.

women3

அதாவது நமக்கு புரியும் படி சொல்லப்போனால், சில பெண்களை அதிர்ஷ்டமான பெண்கள், இவர்களது கையால் எதை வாங்கினாலும் அது பலமடங்கு பெருகும் என்று சொல்வார்கள். சில பெண்களைப் பார்த்தால் இந்த பெண் அதிர்ஷ்டம் கெட்டவள். அவளுடைய முகத்தைப் பார்த்து விட்டு சென்றால் எதுவுமே விளங்காது என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால் இப்படி பேசுவது மிக மிக தவறான ஒரு விஷயம். எந்த பெண்ணின் மனதையும் நோகடிக்க கூடாது. பெண்கள் தங்களை அதிர்ஷ்டமான பெண்ணாக மாற்றிக் கொள்வது எப்படி?

எல்லா பெண்களுமே இந்த குறிப்பினை பின்பற்றி கொள்ளலாம். ஆன்மீக ரீதியாக இது வீட்டிற்கு செல்வ கடாட்சத்தை தேடித்தரும். ஆரோக்கிய ரீதியாகவும் பெண்களுக்கு இது உதவியாக இருக்கும். சரி, இப்போது அந்த குறிப்பு என்ன தெரிந்து கொள்வோம் வாருங்கள். மிக மிக சுலபமான குறைப்பு தான். கொஞ்சமாக கஸ்தூரி மஞ்சள் சக்கை அல்லது கஸ்தூரி மஞ்சள் பொடியை கடைகளில் இருந்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

kasthuri-manjal

கொஞ்சமாக காய்ச்சாத பால் தேவைப்படும். கஸ்தூரி மஞ்சள் சக்கையாக இருந்தால் மஞ்சள் இழைக்கும் கல்லில், கொஞ்சமாக காய்ச்சாத பாலை விட்டு இந்த கஸ்தூரி மஞ்சளை இழைத்து முகத்தில் பூசிக் கொள்ள வேண்டும். கஸ்தூரி மஞ்சள் தூளாக இருந்தால், அதில் கொஞ்சமாக காய்ச்சாத பாலை ஊற்றி கலந்து முகத்தில் பூசிக்கொண்டு, 10 நிமிடங்கள் கழித்து அதன் பின்பு எப்போதும் போல குளிக்கச் செல்லலாம்.

தினம் தினம் இதை மட்டும் பெண்கள் பின்பற்றி வந்தாலே போதும். அந்தப்பெண் மகாலட்சுமியின் ஸ்வரூபமாகவே மாறிவிடுவாள். இந்தப் பெண்ணின் முகத்தை பார்த்து விட்டு வெளியே செல்லும் கணவனுக்கு எல்லாமே வெற்றிதான். அந்தப் பெண்ணின் கையில் பணம் காசு சேரத் தொடங்கும். அந்த அளவிற்கு ஒரு பெண்ணினுடைய அதிர்ஷ்டம் உயர இந்த குறிப்பு மிக மிக உபயோகமானதாக இருக்கும்.

money4

‘அட! வெளியே செல்லும்போது இந்த பெண்ணினுடைய முகத்தில் பார்த்துவிட்டு செல்லுங்கள். நிச்சயமாக போற காரியம் நல்லபடியாக தான் முடியும் என்று இந்த ஊரே பேசும்!’ அளவிற்கு நீங்கள் அதிர்ஷ்டமான பெண்ணாகவே மாறி விடுவீர்கள். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.