பெண்கள் செய்யும், இந்த சின்ன சின்ன தவறுகள் கூட, வீட்டில் கஷ்டம் ஏற்படுவதற்கு காரணமாக மாறிவிடும்.

thilagam

எல்லாப் பொறுப்புகளும் பெண்கள் கையிலேயே இருந்தால், அப்போது ஆண்களுக்கு எந்த பொறுப்புமே கிடையாதா? என்ற கேள்வி, பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவர்களுடைய மனதில் எழத்தான் செய்யும். என்னதான் ஆண்கள் நம்முடைய வீட்டில், குடும்பத் தலைவராக இருந்தாலும், குடும்பத்தலைவியாக இருக்கும் பெண்ணுக்குத் தான் பொறுப்புகள் அதிகமாக இருக்க வேண்டும். ஏனென்றால், ஒரு ஆண்மகனது கடமை, பணத்தை சம்பாதித்துக் கொண்டு வந்து வீட்டில் இருக்கும் பெண்ணிடம் கொடுப்பதுதான். அதாவது, கணவன் சம்பாத்தியத்தை, மனைவி கையில் கொடுத்தால், அதை சிக்கனப்படுத்தி செலவு செய்து, சேமித்து, அந்த குடும்பத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல கூடிய பொறுப்பு அந்த வீட்டு பெண்ணின் கையில் தான் உள்ளது.

women2

இவ்வளவு பொறுப்புகளை, கொண்ட பெண்ணின் குணம் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். முதலாவதாக நம்முடைய வீட்டிற்கு வருகை தரும் சொந்தக்காரர்களாக இருந்தாலும் சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி, அவர்களை உபச்சாரம் செய்வதில் கூட, நம் வீட்டினுடைய நன்மை அடங்கி இருக்கின்றது.

நம்முடைய மனதிற்குப் பிடிக்காதவர்களாக இருந்தாலும், நமக்கு விரோதமானவர்களாக இருந்தாலும், நம்மைவிட வசதியில் குறைந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் நம்முடைய வீட்டிற்கு வருகை தரும் பட்சத்தில், அவர்களை வரவேற்று அமரச் செய்து, முதலில் ஒரு டம்ளர் தண்ணீரை கொடுப்பது, அந்த வீட்டில் லட்சுமி கடாட்சத்தை உயர்த்தும் என்று சொல்லப்பட்டுள்ளது.

virunthombal

எப்படி? நம் வீட்டுக்கு வந்து, வெளியே செல்பவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் வயிற்றெரிச்சலோடும் கோபத்தோடும், வீட்டிலிருந்து வெளியே செல்லவே கூடாது. அது நம்முடைய குடும்பத்திற்கு நல்லது அல்ல. நம் வீட்டிற்கு வந்திருப்பவர், இதற்கு முன்பாக நமக்கு எவ்வளவோ கெடுதல்களை செய்திருக்கலாம். இருப்பினும் அவர்களுக்கு, பதிலுக்கு நாம் செய்யப்போவது நன்மை மட்டுமே.

- Advertisement -

நீங்கள், உங்கள் வீட்டுக்குள் வந்து இருப்பவருக்கு, கொடுக்கும் அந்த ஒரு டம்ளர் தண்ணீராவது அவர்களது வயிற்றையும், மனதையும் கட்டாயம் குளிரப்படுத்திவிடும். ‘அவங்க எவ்வளவு கெட்டவங்களா இருந்தாலும், இருந்துட்டு போகட்டும் விடுங்க! நம்முடைய கடமை, வீட்டிற்கு வருபவர்களை மனம் கோணாமல் நடத்துவது மட்டும்தான்’.

drinking-water

இரண்டாவதாக, எந்தக் குடும்பத்தில் இருக்கும் பெண்ணுக்கு சுயநலமற்ற, தற்பெருமையை தேடாத உதவி செய்யும் குணம் இருக்கின்றதோ அந்த வீட்டில் மகாலட்சுமி நிலைத்திருப்பாள், என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த நல்ல காரியத்தை செய்தால் நமக்கு எவ்வளவு லாபம் வரும் என்று யோசிக்கவே கூடாது. இந்த நல்ல காரியத்தை, இந்த தர்மத்தை செய்யும் போது, நாம் உதவி செய்கிறோம் அல்லவா, அவர்களுடைய நலனை மட்டும் தான் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எப்படிப்பட்ட உதவி செய்தால், உதவியை பெறுபவர்கள் அதிகப்படியான பயனை அடைவார்கள் என்பது மட்டுமே நம் மனதில் இருக்க வேண்டும்.

annathanam

அடுத்ததாக, நம்முடைய வீட்டில் ஏதோ ஒரு விசேஷம் வைக்கின்றோம். அதற்கு முதலில் நெருங்கிய சொந்த பந்தங்களை மரியாதையோடு அழைப்பது தான் முறை. ஆனால், சில பேர் காசு உள்ளவர்களை மட்டும் நெருங்கிய சொந்த பந்தங்களாக வைத்துக்கொள்வார்கள். காசு இல்லாமல், கூட பிறந்தவர்களாக இருந்தாலும், அவர்களை தூரத்து சொந்தமாக தான் நடத்தி வருவார்கள். இது மிகப்பெரிய தவறு.

நீங்கள் ஒதுக்கி வைத்துள்ளீர்கள் அல்லவா? உங்களுடைய நெருங்கிய சொந்தம், அவர்களுடைய மனதில் உங்களைப் பற்றிய எதிர்மறை சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருக்கும். ‘அது நீங்கள் கேட்டுப் போக வேண்டும் என்று அவர்கள் நினைக்க மாட்டார்கள்.’ இருப்பினும், ‘காசு இல்லை என்பதால்தானே நமக்கு மரியாதையில் குறைவு, என்ற ஒரு ஏக்கம் இருக்கும் அல்லவா’ அது போதும் உங்கள் வீட்டில் பிரச்சனை வருவதற்கு.

family2

காசு பணத்தை வைத்து ஒருவருக்கு மரியாதை கொடுப்பது என்பது கட்டாயம் ஒரு வீட்டில் இருக்கவே கூடாது. உங்களுடைய வீட்டின் ஆண்கள், முன்பின் இருந்தாலும் கூட, அதை சொல்லி புரிய வைக்க வேண்டிய கடமை அந்த வீட்டிலுள்ள பெண்களுக்கு உள்ளது.

mahalashmi3

முடிந்தவரை உங்களுடைய வீட்டில் இப்படிப்பட்ட தவறுகளை நீங்கள் செய்து கொண்டிருந்தால் அதை தயவு செய்து நிறுத்தி விடுங்கள். இன்றைக்கு நீங்கள் வசதி படைத்தவர்களாக வாழலாம். ஆனால், நீங்கள் செய்துவரும் தவறு, உங்களது பிள்ளைகளை தண்டித்து விடக்கூடாது என்பதற்காக சில விஷயங்களை மாற்றிக்கொள்வது நல்லது. உங்களுடைய பிள்ளைகளுக்கும் இப்படிப்பட்ட நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுத்து விடுங்கள். அது ரொம்ப ரொம்ப அவசியம்.

இதேபோல பெண்கள் ஆன்மீக ரீதியாக வெள்ளிக்கிழமை, செவ்வாய்க் கிழமைகளில் வீட்டில் பாகர்க்காய் சமைக்கக்கூடாது.

kungumam

காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடும் போது, தெற்குப்பக்கம் பார்த்தவாறு குனிந்து அமர்ந்து கோலம் போடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.

இறை வழிபாடு செய்யும் போதும், தீபம் ஏற்றும் போதும், பெண்கள் புடவை அணிந்து இருக்கும் பட்சத்தில், அந்தப் புடவையின் முந்தானையை எடுத்து சொருகிக் கொண்டு தீபம் ஏற்றுவது மிகவும் நல்லது.

kolam

தினம்தோறும் நீங்கள் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்ளும் போது, கிழக்கு திசையை பார்த்தவாறு நின்று நெற்றியில் குங்குமத்தை இட்டுக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கக் கூடிய பெண்களின் முகம் எப்போதும் பிரகாசமாக தான் இருக்க வேண்டும்.

kolam4

வெளியில் இருந்துதான் மகாலட்சுமி வீட்டிற்கு வர வேண்டும் என்பது அவசியம் கிடையாது. மேற்குறிப்பிட்டுள்ள குண நலன்களை வரவழைத்துக் கொண்டு, மங்களகரமாக வீட்டில் இருக்கும் எல்லா பெண்களுமே, மகாலட்சுமியின் ஸ்வரூபம் தான், இப்படிப்பட்ட பெண்கள் இருக்கும் வீட்டில் என்றைக்குமே கஷ்டம் வராது என்ற கருத்தை முன்வைத்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த ஒரு செடிக்கு இத்தனை மகத்துவமா? தீய சக்தி, கண் திருஷ்டி நம்மை தாக்காமல் இருக்கவும், எதிரிகளைக் கூட நண்பர்களாக மாற்ற, வீட்டு வாசலில் இந்த செடி வைத்தாலே போதுமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.