ஆரோக்கியம் தரும் ‘பொன்னாங்கண்ணி கீரை கூட்டு’ இப்படி மட்டும் செஞ்சா அசத்தலான சுவையில் இருக்கும்!

ponnanganni-kottu2
- Advertisement -

பொன்னாங்கண்ணி என்கிற வார்த்தையில் இருக்கும் ‘கண்’, கண் பார்வையை குணப்படுத்துவதை குறிக்கிறது. இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கண்ணாடி தேவைப்படாது என்பார்கள். பொன்னாங்கண்ணி சாப்பிடுபவர்களுக்கு பகலில் கூட நட்சத்திரம் தெரியும் என்ற வழக்கு மொழியும் உள்ளது. அந்த அளவிற்கு கண்களின் பேணிக் காக்கும் பொன்னாங்கண்ணிக் கீரையை இப்படி கூட்டு வைத்து சாப்பிட்டால் அசத்தலான சுவையில் இருக்கும். பொன்னாங்கண்ணிக் கீரை அற்புதமான மூலிகையாகும். அதை எப்படி கூட்டு வைத்து சாப்பிடுவது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ponnanganni-keerai

கீரைகளின் ராஜா எனும் தகுதியை இந்த பொன்னாங்கண்ணி கீரை தான் பெற்றுள்ளது. இதில் இருக்கும் வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி, மேலும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்றவையும் அடங்கியுள்ளன. பொன்னாங்கண்ணிக் கீரையைப் பற்றி அகத்தியர் தன்னுடைய பாடல்களில் கூறியுள்ள குறிப்புகளும் உள்ளன. இத்தகைய சிறப்பு மிக்க பொன்னாங்கண்ணிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகுந்த ஆரோக்கியம் தரவல்லது.

- Advertisement -

பொண்ணாங்கண்ணி கீரை கூட்டு செய்ய தேவையான பொருட்கள்:
பொன்னாங்கண்ணிக் கீரை – 1 கட்டு, சிறுபருப்பு – 50 கிராம், பூண்டு பல் – 10, வெங்காயம் – 2, தக்காளி – 1, வர மிளகாய் – 5, கடுகு, உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன், தேங்காய் – அரை கப், சீரகம் – 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – சிறிதளவு, கருவேப்பிலை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவிற்கு.

ponnanganni-kottu

பொன்னாங்கண்ணி கீரை கூட்டு செய்வது எப்படி:
பொன்னாங்கண்ணி கீரையை ஆய்ந்து நன்றாக கழுவிக் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். சிறு பருப்பை நன்கு கழுவி 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். மிக்ஸி ஜாரில் தேங்காய், சீரகம், வர மிளகாய் – 3 இவற்றை போட்டு நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு குக்கர் வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஊற வைத்த சிறு பருப்பு, நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி, பூண்டு பற்கள், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி விடவும். 3 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ponnanganni

அதனுடன் கழுவி வைத்துள்ள பொன்னாங்கண்ணி கீரையை பொடி பொடியாக நறுக்கி சேர்க்கவும். கீரை வெந்து கொதித்து வந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்க்க வேண்டும். ஒரு 5 நிமிடம் கொதிக்க வைத்து தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்துக் கொட்ட வேண்டும்.

- Advertisement -

ponnanganni-kottu1

முதலில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வெடிக்க விட்டு, பின்னர் இரண்டு வரமிளகாய்களை கில்லி போடவும். லேசாக வறுபட்டதும் தாளித்து விடவும். அவ்வளவு தாங்க ரொம்ப ரொம்ப சிம்பிளா சுலபமாக செய்யக் கூடிய பொன்னாங்கண்ணி கீரை கூட்டு தயார். இது நம்முடைய கண்களுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. வாரம் ஒரு முறை இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு நீங்கி, கண் பார்வை தெளிவடையும். மேற்கூறிய இந்த முறையில் நீங்கள் கூட்டு வைத்துக் கொடுத்தால் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதையும் படிக்கலாமே
காலிஃப்ளவர் குருமாவை ஒருவாட்டி இப்படி வச்சு பாருங்க! காலிஃப்ளவரின் பச்சை வாடை வராமல், சூப்பர் குருமா வைக்க சின்ன சின்ன டிரிக்ஸ்.

பொன்னாங்கன்னி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் இதோ

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -