5 நிமிடத்தில், வாயில் வைத்த உடனேயே கரையும் பொட்டுக்கடலை லட்டு செய்வது எப்படி?

நம்முடைய வீட்டில் இருக்கும் பொட்டுக்கடலையை வைத்து மிகவும் சுவையான ஆரோக்கியமான பொட்டுக்கடலை லட்டு சுலபமாக எப்படி செய்வது என்பதைப் பற்றி த்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த லட்டு செய்ய பொட்டுக்கடலை 100 கிராம், சர்க்கரை 100 கிராம், நெய் 50 கிராம் தேவையான அளவு முந்திரிப் பருப்பு தேவையான அளவு உலர் திராட்சை. இந்தப் பொருட்கள் மட்டுமே போதும்.

pottu-kadalai

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நன்றாக சூடு செய்து, அதன் பின்பு பொட்டுக் கடலையை சேர்த்து இரண்டு நிமிடங்கள் மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவேண்டும். பொட்டுக்கடலை சூடு ஆக வேண்டுமே தவிர, சிவப்பு நிறமாக மாற கூடாது. அதன் பின்பு இந்த பொட்டுக்கடலையை நன்றாக ஆற வைத்து விட வேண்டும்

ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த பொட்டுக்கடலை, சர்க்கரை இவை இரண்டையும் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் இந்த மாவை சல்லடையில் போட்டு சலித்து எடுத்துக் கொள்ளலாம். சலித்து எடுத்த பொட்டுக்கடலை சர்க்கரை சேர்த்த கலவையோடு, 50 கிராம் நெய் சூடுபடுத்தி ஊற்றிக் கொள்ள வேண்டும். அந்த நெய் மிதமான சூட்டில் இருந்தால் போதும். அதிக சூட்டோடு நெய் செத்தால், சர்க்கரை உருகி லட்டு பிடிக்க வராது. சர்க்கரை நீர்த்துப் போக ஆரம்பித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

pottu-kadalailattu2

இறுதியாக ஒரு ஸ்பூன் நெய்யில் முந்திரிப்பருப்பு திராட்சையை வறுத்து இந்த மாவோடு சேர்த்து, ஒரு ஸ்பூனில் நன்றாக கிளறி விடவேண்டும். கை பொறுக்கும் சூடு இருக்கிறதா என்று சோதித்து, உங்கள் கைகளாலேயே  லட்டு, பிடித்துவிட்டால் சுவையான லட்டு ஐந்து நிமிடத்தில் தயார். லட்டு பிடிக்க வரவில்லையா, ஒரு கிண்ணத்தில் பொட்டுக்கடலை சர்க்கரை சேர்த்த கலவையை தூளாகவே போட்டு, ஸ்பூன் போட்டு சாப்பிட்டு விடுங்கள், அவ்வளவு தான்.

- Advertisement -

இதோடு சேர்த்து பொட்டுக்கடலை பர்ஃபி எப்படி சுலபமாக செய்வது என்று தெரிந்து கொள்ளலாமா? பொட்டுக்கடலை – 100 கிராம், சர்க்கரை – 75 கிராம், நெய் – 3 லிருந்து 4 டேபிள் ஸ்பூன் அளவு. பொட்டுக்கடலை மாவை எந்த கப்பில் அளந்து எடுத்துக் கொள்கிறார்களோ, அதே கப்பில் சர்க்கரையை, முக்கால் கப் அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

sugar-pagu

முதலில் பொட்டுக்கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, 4 டேபிள்ஸ்பூன் அளவு நெய் ஊற்றி, அரைத்து வைத்திருக்கும் பொட்டுக்கடலை மாவை, நெய்யோடு சேர்த்து மூன்றிலிருந்து நான்கு நிமிடங்கள் வறுத்து கொள்ள வேண்டும். மாவு கட்டி கட்டியாக ஆகக்கூடாது. பொட்டுக்கடலை வாசம் வரும் வரை வறுத்து அந்த மாவை, ஒரு தட்டில் மாற்றி நன்றாக ஆற வைத்துவிடுங்கள்.

pottukadalai-barfi

ஒரு குக்கரில் சர்க்கரையைப் போட்டு, சர்க்கரை மூழ்கும் அளவிற்கு 4 டேபிள் ஸ்பூன் அளவு தண்ணீர் விட்டு, சர்க்கரையை அந்த தண்ணீரில் நன்றாக கரைத்து விடுங்கள். அந்த குக்கரை மூடி போட்டு, பத்திரமாக மூன்று விசில் வைக்க வேண்டும்.

மூன்று விசில் வந்ததும், அதனுடைய ஆவி அடங்கிய பின்பு, குக்கரை திறக்க வேண்டும். குக்கரை முகத்தின் அருகில் வைக்காமல், தூரமாக வைத்து திறந்து, கொதிக்கின்ற சர்க்கரைப் பாகில், அரைத்து வைத்திருக்கும் பொட்டுக்கடலை மாவை சேர்த்து கைவிடாமல் கட்டி பிடிக்காமல் கிளறி விடவேண்டும். மாவை கிளறும் போது, இந்த கலவையானது கொஞ்சம் தண்ணீர் பதத்தில் தான் இருக்கும்.

pottukadalai-barfi1

ஒரு அகலமான தட்டில் நெய் தடவி, இந்த கலவையை ஊற்றி நன்றாக ஆற விட்டு, அதன் பின்பு உங்களுக்கு தேவையான வடிவத்தில் வெட்டி எடுத்து விட்டால், சுவையான பொட்டுக்கடலை பர்ஃபி தயார். உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த இரண்டு குறிப்பையும் உங்களுடைய வீட்டில் தயார் செய்து பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே
பிள்ளையாருக்கு ரொம்பவும் பிடிச்ச பூரண கொழுக்கட்டை, சுலபமாக எப்படி செய்வது? கடையில் இருந்து வாங்கிய மாவிலும், சாஃப்டான கொழுக்கட்டை செய்ய டிப்ஸ்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.