PUBG : இந்தியாவில் இந்த மாநிலத்தில் முதல் முறையாக PUBG விளையாட முழுத்தடை – அதிரடி அறிவிப்பு

Pubg
- Advertisement -

PUBG தற்போது உலக அளவில் அதிகம் விளையாடப்படும் ஒரு இணைய விளையாட்டாக மாறியுள்ளது. அதற்கு காரணம் அந்த விளையாட்டை நீங்கள் ஆட துவங்கினால் அதுவே உங்களுக்கு பழக்கமாக மாறி, நீங்கள் அந்த விளையாட்டுக்கு அடிமையாகி விடுவீர்கள். அந்த அளவிற்கு அந்த விளையாட்டு சுவாரசியத்தை தந்தாலும் அதே அளவிலான பாதிப்பும் உள்ளது.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த விளையாட்டினை அதிக அளவு விளையாடுகின்றனர். அதிலும் குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் பெற்றோரிடம் சண்டை போட்டு இந்த விளையாட்டினை விளையாடுகின்றனர். இதனால் அவர்களின் படிப்பும் பாதிக்கப்படுகிறது. மேலும், ஒரு சில இளைஞர்கள் இந்த விளையாட்டில் தோற்றால் தங்களை தாங்களே துன்புறுத்தி கொள்கின்றனர்.

- Advertisement -

இதன் முதற்கட்டமாக இந்த விளையாட்டினை தடை செய்யக்கோரி குஜராத் குழைந்தைகள் உரிமை நல வாரிய சேர்மேன் ஜக்ருதி பாண்டியா தேசிய குழைந்தைகள் பாதுகாப்பு அமைப்பிற்கு இந்த விளையாட்டை தடை செய்யக்கோரி கோரிக்கை மனு ஒன்றினை அளித்துள்ளார். அதில் இந்த PUBG விளையாட்டின் மூலம் குழந்தைகளில் மனநிலை மற்றும் கல்வி மற்றும் நேரம் என தேவையில்லாமல் வீண் ஆகிறது எனவே இந்த விளையாட்டினை குஜராத் மாநிலம் முழுதும் தடை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

pubg 1-compressed

அவரின் கோரிக்கை ஏற்கப்பட்டு தற்போது இது தொடர்பான ஆவணங்கள் மற்றும் குறிப்புகள் சேகரிக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆலோசனை முடிந்த பிறகு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக குஜராத் மாநிலத்தில் PUBG விளையாட்டு தடை செய்யப்பட உள்ளது குறிபிடத்தக்கது.

- Advertisement -