‘கொன்றால் பாவம் தின்றால் போச்சு’! இந்த பழமொழிக்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? மாமிசம் சாப்பிடுபவர்களுக்கு நரகத்தில் இப்படி ஒரு தண்டனையா?

meat-eman

இவ்வுலகில் பெரும்பாலான சதவீதம் பேர் மாமிசம் சாப்பிடுபவர்களாக இருக்கின்றார்கள். மாமிசம் சாப்பிடுபவர்களுக்கு ஏற்ற பழமொழி இது தான். ‘கொன்றால் பாவம் தின்றால் போச்சு’ என்று சுலபமாக கூறி விட்டு சென்று விடுவார்கள். சாப்பிடுபவர்களுக்கு என்ன வந்தது? அதை நான் என் கைகளால் கொள்ளவில்லையே! என்று கூறுவார்கள். இன்று பல பழமொழிகளின் அர்த்தம் பலவாறு திரிந்துள்ளது. இந்த பழமொழிக்கு உண்மையான அர்த்தம் தான் என்ன? மாமிசம் சாப்பிடுவது பாவம் என்றால்! அந்த பாவத்திற்கு நரகத்தில் என்ன தண்டனை கிடைக்கும்? என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

Thiruvalluvar

மாமிசம் சாப்பிடுபவர்களுக்கு இப்படி ஒரு தண்டனையா? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு நரகத்தில் தண்டனை கொடுக்கப்படுமாம். உண்மையிலேயே மாமிசம் சாப்பிடுவது அவ்வளவு பெரிய குற்றமா? அதற்கான தண்டனை என்ன? மாமிசம் சாப்பிடுவது பற்றி பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர் என்ன சொல்கிறார் தெரியுமா? ‘உண்ணாமையுள்ள துயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யா தளறு’ மாமிசம் உண்பது என்பது மிகப்பெரிய பாவமாக இதன் மூலம் திருவள்ளுவர் இந்த உலகத்திற்கு எடுத்துரைத்துள்ளார்.

பிறகு ஏன் கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்கிற பழமொழி வந்தது? ஒரு உயிரைக் கொள்பவர்களை அவர்கள் இறந்தபின் எமதூதர்கள் நரகத்திற்கு கொண்டு போய் விடுவார்கள். நரகத்திற்கு கொண்டு போய் அவர்களை கீழே கிடத்தி வைத்து ஆடைகளை களைந்து, நரமாமிசத்தை அறுத்து அதனை அவர்களுக்கே ஊட்டி விடுவார்களாம். ‘பிற உயிர்களின் மாமிசத்தை உண்ட நீ! உன்னுடைய மாமிசத்தை நீயே உண்டால் தான் இதற்குரிய தண்டனையாகும்’, என்று கூறி மிக கொடூரமான முறையில் அவர்களுக்கு வாயில் ஊட்டி விடுவார்களாம். இதைவிட ஒரு கொடிய தண்டனை இந்த உலகத்தில் இருக்க முடியுமா?

garuda-puranam

இதனை உணர்த்தும் பழமொழியே பின்பு காலப்போக்கில் திரிந்து மருவி விட்டது. பிற உயிர்களை வதைத்து அதன் மாமிசத்தை உண்டவர்கள் செய்த பாவம் ஆனது தன்னுடைய மாமிசத்தை சாப்பிடும் பொழுது தான் தீரும் என்பதை உணர்த்தவே ‘கொன்றால் பாவம் தின்றால் போச்சு’ என்ற பழமொழி ஏற்பட்டது. பலரும் கொல்பவர்களுக்கு தான் தண்டனை என்றும், உண்பவர்களுக்கு அதில் பங்கு சேர்வதில்லை என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உயிரை வதைக்கும் உரிமை இன்னொரு உயிருக்கு கொடுக்கப்படவில்லை. அது அந்த உயிரை படைத்த ஆண்டவனுக்கு மட்டுமே சொந்தமானது ஆகும். இவர்களுக்கு பாவமில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பாவத்திற்கும் நரகத்தில் தண்டனை உண்டு என்பது சாஸ்திர நியதி. அவ்வகையில் பிற உயிர்களை கொன்ற சாபம் தான், அதனை உண்பவர்களுக்கும் வந்து சேரும். உயிர்ப்பு சுழற்சி முறையில் ஒன்றை ஒன்று சாப்பிட்டு வாழ்ந்து வருவதாக இருந்தாலும், மனிதனுடைய பசிக்காக படைக்கப்பட்டவைகளில் எந்த ஒரு உயிர்களும் இடம் பெறவில்லை.

meat

உயிர் என்பது இதற்கு அப்பாற்பட்டவை ஆகும். ஒரு உயிரை கொன்று விட்டால் அந்த இடத்திலேயே அவர்களுக்கு தோஷம் பீடித்துக் கொள்கிறது. அதில் பங்கு கொள்பவர்களுக்கும் இந்த தோஷமானது பின் தொடர்ந்து வரும் என்கிறது சாஸ்திரம். இந்த வகையில் தான் ஒரு உயிரை கொள்பவர்களுக்கும், அதை சாப்பிடுபவர்களுக்கும் இருக்கும் தொடர்பாக இருக்கிறது. எது எப்படியோ! வாழும் காலத்தில் நல்லது செய்தால் தான் நமக்கு நல்லதே நடக்கும்.