ஒவ்வொரு ராசிக்குரிய இஷ்ட தெய்வம் எது தெரியுமா?

Astrology

மேஷம்:
Mesham Rasiசிங்கம் போலவும் அதே சமயம் பொறுமையாகவும் இருக்கும் மேஷ ராசிக்காரர்களின் இஷ்ட தெய்வமாக அறியப்படுகிறார் மதுரைவீரன். வெள்ளையம்மாள் மற்றும் பொம்மி என்கிற இரு பெண் தெய்வங்களோடு காட்சி தருபவர் மதுரைவீரன். மேஷ ராசிக்கார்கள் மதுரைவீரனை வணணுவதன் மூலம் அவர்கள் வாழ்வு சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்:
Rishabam Rasiஎதிரிகளுக்கு எப்போதும் சிம்ம சொப்பனமாக திகழும் ரிஷப ராசிக்காரர்களின் இஷ்ட தெய்வமாக அறியப்படுகிறார் ஐயனார். கிராமங்களில் காவல் தெய்வமாக இருக்கும் ஐயனார், ரிஷப ராசிக்கார்கள் வழிபடுவதற்கு மிகவும் உகந்த தெய்வமாகும். மதுரை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் ஐயனார் வழிபாட்டை பெருமளவில் காணலாம். ரிஷப ராசிக்காரர்கள் ஐயனாரை வழிபடுவதன் மூலம் வாழ்வில் நல்லதொரு முன்னேற்றம் இருக்கும்.

மிதுனம்:
Mithunam Rasiஎத்தகைய பிரச்னையாயினும் அதை சரி செய்யக்கூடிய திறன் படைத்தவரும், பாரபட்சமின்றி நடந்துகொள்பவருமான மிதுன ராசிக்காரர்களின் இஷ்ட தெய்வமாக அறியப்படுகிறார் காளி அம்மன். காலனின் மனைவியான காளி தேவி உக்கிரமான தோற்றத்தில் தான் பெரும்பாலும் காட்சி அளிக்கிறார். ஆனால் பெண் தெய்வமான காளி அம்மன் பூவினும் மென்மையான மனம் கொண்டவள். தன்னை நாடி வருபவர்களை எப்போதும் குறை தீர்க்காமல் அனுப்புவது கிடையாது. அத்தகைய ஒரு தெய்வம் மிதுன ராசி ராசிக்காரர்களின் இஷ்ட தெய்வமாக இருப்பது அவர்கள் செய்த பாக்கியம். மிதுன ராசிக்காரர்கள் காளியை வணங்குவதால் துணிவும், எதையும் சாதிக்கும் திறனும் கிடைக்கும்.

மிதுன ராசி பொதுவான குணம் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்.

கடகம்:
Kadagam Rasiஎந்த துறையில் இருந்தாலும் அங்கு கோலோச்சும் திறன் கொண்ட கடக ராசிக்காரர்களின் இஷ்ட தெய்வமாக அறியப்படுகிறார் கருப்பசாமி. கிராமங்களின் காவல் தெய்வமாக இருக்கும் இவர் கருப்பன் என்றும் கருப்பு என்றும் அழைக்கப்படுகிறார். முறுக்கு மீசை, மிரட்டும் விழிகள் என காட்சி தரும் கருப்பசாமிக்கு சில இடங்களில் உருவம் இல்லாத வழிபாடும் நடக்கிறது. கடக ராசிக்காரர்கள் கருப்பசாமியை வழிபடுவதன் பயனாக அவர்கள் வாழ்வில் உள்ள அனைத்து இருள்களும் நீங்கி எதிலும் வெற்றி கிடைக்கும்.

சிம்மம்:
simmamஎதிலும் அதி தீவிர வேகம் காட்டி நினைத்ததை சாதித்து முடிக்கும் சிம்ம ராசிக்காரர்களின் இஷ்ட தெய்வமாக அறியப்படுகிறார் வீரபத்திரன். இவர் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் என புராணங்கள் கூறுகின்றன. வீரம் காக்கும் தெய்வமான இவருக்கு பல இடங்களில் தனி கோவில்கள் உண்டு. சில சிவன் கோவில்களிலும் இவர் துணை தெய்வமாக காட்சி தருகிறார். சிம்ம ராசிக்காரர்கள் இவரை வணங்குவதன் மூலம் எவரையும் வெல்லும் ஆற்றல் பிறக்கும்.

- Advertisement -

சிம்ம ராசி பொதுவான குணம் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்.

கன்னி:
Kanni Rasiஅவலங்களை தட்டி கேட்க்கும் துணிவு கொண்ட கன்னி ராசிக்காரர்களின் இஷ்ட தெய்வமாக அறியப்படுகிறார் அங்காளம்மன். அங்காளபரமேஸ்வரி என்றும் அங்காளம்மன் என்றும் பக்தர்களால் அழைக்கப்படும் இவர் சிவபெருமானால் உருவாக்கப்பட்டவர் என்று புராணங்கள் கூறுகிறது. மேல் மலையனூரில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோவில் அங்காளம்மனுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருக்கிறது. கன்னி ராசிக்காரர்கள் அங்காளம்மனை வழிபடுவதன் மூலம் தீராத பிரச்சனைகள் தீரும், எதிரிகள் அழிவர். வாழ்வில் வளம் உண்டாகும்.

துலாம்:
Thulam Rasiநீதி நேர்மைக்கு எப்போதும் எடுத்துக்காட்டாக விளங்கும் துலாம் ராசிக்காரர்களின் இஷ்ட தெய்வமாக அறியப்படுகிறார் முனீஸ்வரன். காவல் தெய்வமாக அறியப்படும் முனீஸ்வரனுக்கு கிராமம் நகரம் என பல இடங்களில் கோவில்கள் உள்ளன. துஷ்ட சக்திகளை விரட்டும் ஆற்றல் கொண்ட இவருக்கு பல பெயர்கள் உண்டு. துலாம் ராசிக்காரர்கள் இவரை வழிபடுவதன் மூலம் சூழ்ச்சிகளில் இருந்து விடப்படுவதற்கான ஆற்றல் பிறக்கும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும்.

விருச்சிகம்:
Virichigam Rasiஎதையும் விடா பிடியாக பிடித்து சாதித்து காட்டும் விருச்சிக ராசிக்காரர்களின் இஷ்ட தெய்வமாக அறியப்படுகிறார் பெரியாச்சி அம்மன். மிகவும் உக்கிர பெண் தெய்வமான பெரியாச்சி அம்மனுக்கு கரூர் மாவட்டங்களில் கோவில்கள் பல உண்டு. விருச்சிக ராசிக்காரர்கள் இவரை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும். எடுக்கும் முயற்சிகள் யாவும் விரைவில் கைகூடும்.

தனுசு:
Dhanusu Rasiபணத்தை விட மனமே உயந்தது என்ற நல்லுள்ளம் கொண்ட தனுசு ராசிக்காரர்களின் இஷ்ட தெய்வமாக அறியப்படுகிறார் மதுரைவீரன். இவர் தன்னுடைய இரு மனைவிகளான வெள்ளையம்மாள் மற்றும் பொம்மி என்கிற பெண் தெய்வங்களோடு காட்சி தருகிறார். இவர் பலருக்கும் குலதெய்வமாக இருக்கிறார். தனுசு ராசி ராசிக்காரர்கள் இவரை வழிபடுவதன் மூலம் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை அடையலாம்.

மகரம்:
Magaram rasiஎந்த ஒரு செயலையும் இரவு பகல் பாராமல் செய்து முடிக்கும் திறன் கொண்ட மகர ராசிக்காரர்களின் இஷ்ட தெய்வமாக அறியப்படுகிறார் ஐயனார். கிராமங்களின் காவல் தெய்வமாக அறியப்படும் அய்யனாருக்கு நகரங்களிலும் சில கோவில்கள் உண்டு. மதுரை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் அய்யனார் வழிபாடு அதிக அளவில் உள்ளது. மகர ராசிக்காரர்கள் ஐயனாரை வழிபடுவதன் மூலம் வாழ்வில் சிறப்பான வளர்ச்சி இருக்கும்.

கும்பம்:
Kumbam Rasiபல திறமைகளை உள்ளடிக்கியவர்களான கும்ப ராசிக்காரர்களின் இஷ்ட தெய்வமாக அறியப்படுகிறார் காளியம்மன. காலனின் மனைவியான இவர் உக்கிர தெய்வமாக அறியப்படுகிறார். பார்ப்பதற்கு உக்கிரமாக இருந்தாலும் மிகவும் மென்மையான மனம் கொண்டவள் காளி அம்மன். தன்னை முறையாக வேண்டுபவர்களுக்கு எப்போதும் ஆசி வழங்க இவர் தவறியதே இல்லை. கும்ப ராசிக்காரர்கள் காளி அம்மனை வழிபடுவதன் மூலம் எதையும் சாதிக்கும் மனதையும் துணிவையும் பெறலாம்.

மீனம்:
Meenam Rasiஎதையும் திட்டமிட்டு நிதானமாக செயலாற்றும் குணம் கொண்ட மீன ராசிக்காரர்களின் இஷ்ட தெய்வமாக அறியப்படுகிறார் மதுரைவீரன். வெள்ளையம்மாள் மற்றும் பொம்மி என்கிற இரு பெண் தெய்வங்களோடு சமேதராக காட்சி தரும் மதுரை வீரனின் வழிபாடும் தமிழகத்தையும் தாண்டி மலேசிய, ரியூனியன் தீவு போன்ற இடங்களிலும் நடக்கிறது. மீன ராசிக்காரர்கள் மதுரை வீரனை வழிபடுவதன் மூலம் சிறப்பான முன்னேற்றத்தையும் வாழ்வில் வளத்தையும் பெறலாம்.

மீன ராசி குணம் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்

English Overview:
Here we have provided the ishta deivam for each rasi. i.e for each zodiac sign. This is particularly focused on Tamil andu people ishta deivam.