இலங்கை அணி பேட்ஸ்மேனை கைகளை தொட்டு சிரித்த ராபாடா. அடுத்த பந்தே அவர் அவுட் ஆனதால் ஏற்பட்ட சர்ச்சை – வீடியோ ஆதாரம் இதோ

Steyn 1

இலங்கை அணி தற்போது தென்னாபிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 13ஆம் தேதி டர்பனில் துவங்கியது.

முதலில் பேட்டிங்கை துவங்கிய தென்னாபிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் 235 ரன்களை குவித்தது. அடுத்து இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸை 191 ரன்களுக்கு ஆட்டமிழந்து 44 ரன்கள் பின்னிலை அடைந்தது. இந்த இன்னிங்சின் கடைசி விக்கெட்டை தென்னாபிரிக்க பந்துவீச்சாளர் ரபாடா வீழ்த்தினார். இந்த விக்கெட் இப்போது சர்ச்சையாகி உள்ளது.

லசித் எனும் புதுமுக வீரர் பேட்டிங் செய்து கொண்டிருக்க 24 ரன்கள் எடுத்திருந்த அவரின் அருகே சென்ற ரபாடா அவரின் கைகளில் இடித்து சிரித்தார். அடுத்த பந்தினை உடனே தூக்கி அடித்துத் எளிதாக ஆட்டமிழந்து வெளியேறினார் லசித். இதோ அந்த வீடியோ :

இந்த விக்கெட் தற்போது இணையதள வாசிகள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்களின் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இது திட்டமிட்டு நடத்தப்பட்டதா? இல்லை எதார்த்தமாக நடந்ததா? என்று அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே :

ஓட்ட பந்தய வீரராக மாற்ற நினைத்தேன். ஆனால் அவர் வேகப்பந்து வீச்சாளராக நினைத்தார். கடைசியில் நடந்தது வேற – இந்திய அணியில் இடம்பிடித்த இளம் வீரரின் தந்தை

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்