இன்றைய ராசி பலன் – 10-7-2021

rasi palan - 10-7-21
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதுரியமான பேச்சாற்றல் மூலம் சில விஷயங்களை சாதித்துக் கொள்வீர்கள். உற்றார் உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய திறமைக்கு உரிய மதிப்பு கொடுக்கப்படும். சுய தொழிலில் பழைய பொருட்கள் விற்பனையாகும். ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய பங்களிப்பு மற்றும் விடா முயற்சிக்கு உரிய பலன்கள் கிடைக்கும். யோகத்தில் இருப்பவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்யோன்யம் அதிகரிக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானத்துடன் செயலாற்றுவது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு அறிவுபூர்வமாக செயல்படுவது நல்லது. சக பணியாளர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய போட்டிகள் குறையும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர கூடிய வாய்ப்புகள் உண்டு.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கனிவுடன் பேசக்கூடிய உங்களுடைய குணத்தால் நன்மைகள் நடைபெறும். வீட்டில் இருக்கும் மூத்த நபர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்யோகத்தில் உங்களுடைய பொறுப்புணர்வு மேலும் வலுவாக வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களை எதிர்க்கக்கூடிய போட்டியாளர்களை எளிதாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை விட்டுக்கொடுத்து பேசுவது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களின் பொழுது சற்று எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் சமாளிக்கக் கூடிய தைரியம் பிறக்கும். உங்களுடைய சமுதாயத்தில் உங்களுடைய செல்வாக்கு உயர கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் சமாளிக்கக் கூடிய தைரியம் தேவைப்படக்கூடிய நாளாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய குழப்பங்கள் தீர்ந்து விடை காண கேள்விகளுக்கு விடை கிடைக்கக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய எதிர்ப்புகள் குறையும். புதிய நபர்களை சேர்த்துக் கொள்வது முன்னேற்றத்திற்கு பாதையாக இருக்கும். உத்யோகத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு சிக்கனத்தை கடைபிடிப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய பங்களிப்பு மற்றவர்களுக்கு திருப்திகரமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்கள் கூடுமானவரை மற்றவர்களை நம்பி எந்த ஒரு பொறுப்பையும் ஒப்படைக்காமல் இருப்பது உத்தமம்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணம் பல வழிகளிலும் இருந்து வந்து ஆச்சரியப்படுத்தும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த தொகைகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்கக் கூடிய தைரியம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய எதிர்பாராத திடீர் மாற்றம் மற்றவர்களை ஆச்சரியப்படுத்தும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத வகையில் அதிர்சம் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். சுய தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு திடீர் சலுகைகள் அறிவிக்கப்படும். உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பது பெருமிதம் கொள்வீர்கள். எங்களுக்கு வேலை பளு அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு எனவே கூடுமானவரை ஆரோக்கிய ரீதியான விஷயங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய நபர்களின் அறிமுகத்தை தவிர்த்துக் கொள்வது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்கள் வெளியிட பயணங்களின் பொழுது உடைமை மீதும், உங்கள் மீதும் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பது சற்று தள்ளிப் போடுவது நல்லது. ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது உத்தமம்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்து பார்க்காத வகையில் வெற்றி மேல் வெற்றி கிடைக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் இழந்த சில விஷயங்களில் இருந்து மீண்டு வருவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திட்டமிடாத செலவுகளும் மூலம் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

- Advertisement -