Rasi palan : இன்றைய ராசி பலன் – 12-01-2019

12-rasigal
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மாலையில் குடும்பத்துடன் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று வருவீர்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குலதெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

ரிஷபம்:
Rishabam Rasi

புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். கூடுமானவரை பயணங்களைத் தவிர்க்கவும். மாலையில் உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

உற்சாகமான நாளாக இருக்கும். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் நன்மை ஏற்படக்கூடும்.

கடகம்:
Kadagam Rasi

புதிய முயற்சிகள் சாதகமாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். தேவையான பணம் கைக்குக் கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் பேச்சில் கவனம் தேவை. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

இன்று வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தருவதாக இருக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

கன்னி:
Kanni Rasi

உற்சாகமான நாளாக அமையும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகள் மட்டும் வேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகவே இருக்கும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பிற்பகலுக்குமேல் சிலருக்குச் சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

விருச்சிகம்:
virichigam

மனதில் சிறு அளவில் சோர்வு ஏற்படும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மை அளிக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலப் பலன் உண்டாகும்.

தனுசு:
Dhanusu Rasi

மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும் என்பதால் கடன் வாங்கவும் நேரும். நண்பர்களிடமிருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும். அனைத்து முயற்சிகளும் உங்களுக்குச் சாதகமாக முடியும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் லாபம் உண்டாகும்.

மகரம்:
Magaram rasi

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர், நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்களின் உதவியால் உற்சாகமாக முடிப்பீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரியோர்களின் ஆசிகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்.

மீனம்:
meenam

வாழ்க்கைத்துணை வழி உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். மாலையில் நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறிய அளவில் ஆதாயம் கிடைக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -