Rasi palan : இன்றைய ராசி பலன் – 20-01-2019

12-rasi-thirumanam

மேஷம்:
Mesham Rasi

மனதில் உற்சாகம் பெருகும். தாய் வழி உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகம் இருந்தாலும் சிறப்பாகச் செயல்படுவீர்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

ரிஷபம்:
Rishabam Rasi

வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். மாலையில் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்குக் கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாய்வழியில் சிறு சங்கடங்களைச் சந்திக்கவேண்டி வரும்.

மிதுனம்:
midhunam

முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத சில பிரச்னைகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப்படுத்தும். பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. காரியங்களில் சிறு சிறு தடைகள் ஏற்படக்கூடும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

- Advertisement -

கடகம்:
Kadagam Rasi

காலையில் அன்றாட பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சிறிய அளவில் மன உளைச்சல் ஏற்படும். சிறு விபத்து ஏற்படும் என்பதால் வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையுடன் செல்லவும். பிற்பகலுக்குமேல் அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப்பெறுவீர்கள். இன்றைக்கு புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தந்தை வழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

சிம்மம்:
simmam

அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்துவேற்றுமை நீங்கும். எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூரில் இருக்கும் ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும். புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபட வேண்டாம். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. விற்பனை சுமாராகத்தான் இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் நன்மைகள் ஏற்படும்.

கன்னி:
Kanni Rasi

நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். ஆனாலும், முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். சிலருக்கு பிற்பகலுக்கு மேல் தலைவலி வரக்கூடும். புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். தேவைக்கேற்ப பணம் கையில் இருக்காது. அதனால் பிறர் உதவியை நாடவேண்டி இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

துலாம்:
Thulam Rasi

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்:
virichigam

முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். உறவினரிடம் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். கோர்ட் வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். நண்பர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். கேட்டை முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

தனுசு:
Dhanusu Rasi

இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அரசு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். கொடுத்த கடன் திரும்ப வரும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மகரம்:
Magaram rasi

இன்று பிற்பகலுக்குள் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஆனால், பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத கலக்கம் உண்டாகும். பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும் என்பதால், வார்த்தைகளில் கவனம் தேவை. அலுவலகத்தில் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க காரியங்கள் சாதகமாக முடியும்.

மீனம்:
meenam

அனுகூலமான நாளாக இருக்கும்.அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியக்கூடும். தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக் கூடும். வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆனால், சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும். ரேவதி முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.